நேசமணியின் "கோவாலு” பிறந்தநாள்.. 800 படங்களுக்கு மேல் அசத்திய நடிகர் சார்லியின் சிறந்த கேரக்டர்கள்
பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சார்லியின் குறிப்பிட்ட சில கேரக்டர்களை ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளில் பாராட்டி வருகிறார்கள்.
சென்னை: நடிகர் சார்லி இன்று மார்ச் 6ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.
நடிகர் சார்லி நடித்த திரைப்படங்களில் அவருடைய கேரக்டர்கள் மறக்க முடியாத கேரக்டர்கள் பற்றி அவருடைய ரசிகர்கள் பலர் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
நடிகர் சார்லி 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய நகைச்சுவை கேரக்டர் மற்றும் அவருடைய உடல் மொழி நடிப்பு பற்றி ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

ஆரம்ப காலம்
நடிகர் சார்லியின் சொந்த பெயர் வேல்முருகன் தங்கசாமி என்பதுதானாம். அவர் 1960 இல் மார்ச் ஆறாம் தேதி பிறந்திருக்கிறார். கோவில்பட்டியில் உள்ள ஜி என் கல்லூரியில் வேதியல் பட்டப்படிப்பை முடித்த அதே கல்லூரியில் மேடைகளில் சிவாஜி கணேசன், முத்துராமன் மற்றும் நாகேஷ் போன்ற பல நடிகர்கள் போன்று நாடகங்களை நடித்து கல்லூரியில் பிரபலமாக இருந்திருக்கிறார். இதுவரைக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நாடகங்களை நடத்தி இருக்கும் நடிகர் சார்லி, 1982 ஆம் ஆண்டு கே. பாலச்சந்திரன் பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகம் ஆகி இருக்கிறார். நடிகர் சார்லி இதுவரைக்கும் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்திருந்த பல திரைப்படங்களில் சில குறிப்பிட்ட கேரக்டர்கள் ரசிகர்களை இப்ப வரைக்கும் மிரள வைத்திருக்கிறது அதில்,

பிரண்ட்ஸ் திரைப்படம்
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் தளபதி விஜய் சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் பலரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்த திரைப்படமாக இருக்கிறது. இப்ப வரைக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து பலர் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணமானவர்களின் நடிகர் சார்லியும் ஒருவர். இவர் தலையில் அடிபட்டு எல்லாவற்றையும் மறந்த கோபாலு தன்னுடைய முதலாளி நேசமணியை படுத்தும் பாடு பலரையும் கவலைகளை மறந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதன் மீது இருக்கும் ஈர்ப்பின் காரணமாகத்தான் இப்ப வரைக்கும் கோபாலு நேசமணி மீம்ஸ்களில் டிரண்டாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

வெற்றிக் கொடி கட்டு திரைப்படம்
எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் பார்ப்பவர்களுக்கு பாசிட்டிவ் வைப்ரேஷன் கொடுத்த திரைப்படங்களில் ஒன்றாக இப்ப வரைக்கும் வெற்றி கொடி கட்டு திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் முரளி மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்திருப்பார்கள். பணத்தை இழந்த "ஏமாளி பழனி"யாக நடிகர் சார்லி நடித்திருப்பார். பார்த்திபனை பார்த்து புலம்பும் சமயத்தில் மனோரமாவை இருப்பதை புரிந்து கொண்டு சட்டென்று நான் ஒரு இளவரசன் என தொடங்கும் வசனத்தை பைத்தியம் போல பேசுவார். அந்த நேரத்தில் அவருடைய முகத்தில் ஒரு ஏமாற்றம், ஒரு விரக்தி, இயலாமை என மொத்தமாக அவர் கொடுத்த எக்ஸ்பிரஷன் வேற லெவலில் இருக்கும் இந்த கேரக்டரை அந்த படத்தில் மறக்க முடியாது ஒன்றுதான்.

உன்னை நினைத்து திரைப்படம்
நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் உன்னை நினைத்து இந்த திரைப்படத்தில் போலி ஜோசியராக மெய்யப்பன் கேரக்டரில் நடிகர் சார்லி நடித்து இருப்பார். அதிலும் இவர் சிங்கமுத்துத்தோடு சேர்ந்து செய்யும் காமெடிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கும்.

பூவே உனக்காக திரைப்படம்
90's களின் பேவரைட் திரைப்படம் ஆக பூவே உனக்காக திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் இப்பவும் ரசிகர்களால் ரசிக்கப்படுவது. இதில் காமெடி சீன்கள் அதிகமாக ரசிகர்களை ரசிக்க வைத்தது. அதிலும் விஜய் உடன் சார்லி செய்யும் சேட்டைகள் குறிப்பாக தபால் பெட்டியில் அவருடைய கை சிக்கிக் கொள்ளும் காட்சி, விஜய்க்கு வரும் கடிதத்தை படிக்கும் காட்சி போன்றது பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த காட்சிகளாக தான் கண்டிப்பாக இருக்கும்.

உடன்பால் திரைப்படம்
சார்லி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் உடன்பால் பொருளாதார கஷ்டத்தால் சொந்த வீட்டை விற்க நினைக்கும் பிள்ளைகளை சமாளிக்கும் தந்தை விநாயகமாக இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருப்பார். தன்னுடைய மனைவியின் மறைவிற்க்கு பிறகு இருக்கும் ஒரே வீட்டையும் மகன் விற்று விடக்கூடாது என்று அவர் போராடுவது பிறகு திடீரென அவர் இறந்த பிறகு அந்த வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் முழுக்க அந்த படத்தில் இவர் நிறைந்து இருப்பார்.












Click it and Unblock the Notifications