தத்து கொடுத்த மகன் அரவிந்த் சாமியோடு நடிக்காதது இதனால்தான்.. நடிகர் டெல்லி குமார் பளீர்
சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் டெல்லி குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் அரவிந்த்சாமி என்னுடைய மகன் தான் என்று பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் தாங்கள் எதற்காக அரவிந்த்சாமியை பிறந்ததுமே தத்து கொடுத்தோம் என்பது பற்றியும் அந்த வீடியோவில் டெல்லி குமார் பேசியிருக்கிறார்.
அதோடு பல நடிகர்களோடு டெல்லி குமார் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரைக்கும் ஒரு முறை கூட தன்னுடைய மகன் அரவிந்த்சாமியோடு நடிக்கவில்லையே என்ற கேள்விக்கும் டெல்லி குமார் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகர் டெல்லி குமார் சின்னதிரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் சின்ன திரையில் நடிக்காத சேனலே இல்லை என்று சொல்ற மாதிரி பல சேனல்களில் நடித்திருக்கிறார். அதிலும் அண்ணாமலை, ஆனந்தம், முந்தானை முடிச்சு, தலையணை பூக்கள், லட்சுமி ஸ்டோர்ஸ், பாண்டவர் இல்லம் என பல ஹிட்டான சீரியல்களில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் அரவிந்த்சாமி என்னுடைய மகன் தான் அவர் பிறந்த உடனே அக்காவிற்கு தத்து கொடுத்து விட்டேன். என்னுடைய அக்கா குழந்தை இல்லாமல் அந்த நேரத்தில் இருந்ததால் நாங்கள் பிறப்பதற்கு முன்பே அவருக்கு தான் இந்த குழந்தையை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அதனால அரவிந்த்சாமியை தத்து கொடுத்து விட்டோம்.
அரவிந்த்சாமி என்னுடைய அக்காவையும் மாமாவையும் தான் அவருடைய அப்பா அம்மா என்று கூப்பிடுவார். அதுபோல ஏதாவது முக்கியமான நிகழ்ச்சிகள் என்றால் தான் எங்கள் வீட்டில் வந்து தங்குவார். பிறகு எப்போதுமே அக்கா வீட்டில் தான் இருப்பார் என்று கூறி இருக்கிறார். அதோடு இத்தனை வருடங்களாக சினிமா மற்றும் சீரியல் என நடித்துக் கொண்டிருக்கும் டெல்லி குமார் இதுவரைக்கும் ஒரு முறை கூட அரவிந்த்சாமியோடு நடிக்கவில்லையே அது எதனால் என்று கேட்ட கேள்விக்கு அதற்கான வாய்ப்பு இதுவரைக்கும் வரவில்லை.
நாங்க ரெண்டு பேரும் ஒன்றாக நடிக்கிற மாதிரி கதை வந்தால் கண்டிப்பா நான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அதோடு அரவிந்த்சாமி அவருடைய நிஜ தந்தையான டெல்லி குமார் மீது பாசமும் மரியாதையும் இப்போதும் வைத்திருக்கிறாராம். அதனால் தான் அவர் ஒரு முறை பேட்டியில் கூட சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது அரவிந்தசாமி நடித்த ரோஜா திரைப்படம் வெளியாகும் போது அரவிந்த் சாமியோடு டெல்லி குமாரும் அந்த படத்தை பார்ப்பதற்காக வந்திருந்தார். அப்போது அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற வெள்ளை மழை என்ற பாடல் வரும்போது அரவிந்த்சாமி கூச்சப்பட்டு தான் அப்பாவிடம் பாத்ரூம் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அந்த பாடல் முழுவதும் முடிந்த பிறகு தான் திரும்பி வந்தாராம்.
அதுபோல அரவிந்த்சாமி எந்த இடத்திலும் தன்னுடைய தந்தையை டெல்லி குமார் என்பதை கூறுவதில்லை. சமீபத்தில் கூட ஒரு இன்டர்வியூவில் தன்னுடைய தந்தை இறந்து போய்விட்டார். அவர் ரொம்ப ஜாலியாகவும் அதே நேரத்தில் பாசமாகவும் இருப்பார். அவரிடம் தான் நான் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வேன் என்றும் பேசி இருந்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications