அப்போ சீரியலில் டாப் நடிகர்.. செய்யாத தப்பு! இப்போ குழந்தையும் இல்ல! நடிகர் தேவ் உருக்கம்
சென்னை: சன் டிவியில் பல சீரியல்களில் நடித்து வந்த நடிகர் தேவ் ஆனந்த், தான் செய்யாத தப்புக்காக தான் அனுபவித்த தண்டனை குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார். அதோடு தனக்கு குழந்தை இல்லாமல் பட்ட வேதனைகள் குறித்தும் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
90ஸ் காலகட்டத்தில் ஒரு சில நடிகர்கள் சின்னத்திரையில் அறிமுகமாகி இப்போ வரைக்கும் கதாநாயகனாக நடித்து வருகிறார்கள். அதிலும் நடிகர் சஞ்சீவ், ஸ்ரீ, தேவ் ஆனந்த் எல்லோரும் நண்பர்களாக ஒரே நேரத்தில் தான் சீரியலில் நடிக்க தொடங்கி இருந்தார்கள். அதில் தேவ் தவிர மீதமுள்ள நடிகர்கள் எப்போதும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தேவ் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் வருத்தமாக பேசுவார். அதில், இப்போ எனக்கு பெரியதாக வாய்ப்பு இல்லை என்றாலும் என்னுடைய நண்பர்கள் இப்போதும் கதாநாயகனாக நடிப்பது எனக்கு சந்தோஷம்தான். அதில் எனக்கு வருத்தம் இல்லை. எனக்கு ஒரு கதை வரும்போது அது தவறினால் என்னுடைய நண்பர்களுக்கு சொல்லி விடுவேன்.
அப்போது நான் இவ்வளவு சம்பளம் கேட்டேன், நீ அதைவிட அதிகமாக கேள் என்று சொல்லி பேசிக்கொள்வோம். என்னுடைய நண்பர்களுக்காக நான் சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு இருக்கிறேன். அவர்கள் வரும்போது கண்டிப்பா சொல்றேன் என்று சொல்லி இருக்கிறார்கள். இவ்வளவுதான் என்னால் பண்ண முடியும் அவ்வளவு தான். அதே போல சினிமாவில் நான் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவித்திருந்தேன்.
அதிலும் என் மீது தப்பு இல்லை என்று சாட்சி சொல்வதற்கு சம்பந்தப்பட்ட நபரே இல்லை என்ற பிறகும் நான்தான் தப்பு செய்திருப்பேன் என்று சிலர் என் மீது குற்றச்சாட்டுகள் வைத்து வருகிறார்கள். தப்பு தப்பாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். அது எனக்கு ஆரம்பத்தில் வருத்தமா இருந்தாலும் இப்போ கண்டு கொள்வதில்லை.
நான் சினிமாவில் 25 வருஷமா நடிச்சிட்டு இருக்கிறேன். நான் சீரியல் நடிகை வைஷ்ணவியின் இறப்பிற்கு காரணம் நான்தான் என்று கொடுத்த புகார் காரணமாக ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு சில வருடங்களாக வாய்ப்பு இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். அப்போது என்னுடைய மனைவிதான் குடும்பத்திற்காக அதிகமாக வேலை செஞ்சாங்க.
ஒரு வருடம் வரைக்கும் ஒரு நேரம் மட்டும்தான் சாப்பிட்டு இருந்தோம். எனக்கு குடும்பத்தினர் பார்த்து முடித்து தான் திருமணம் செய்து வைத்திருந்தார்கள். இப்ப வரைக்கும் எனக்கு குழந்தை இல்லை என்னுடைய தம்பியின் மகனை தான் நாங்கள் வளர்த்து வருகிறோம். என்னுடைய தம்பியின் மகன் என்னை அப்பா என்று தான் அழைப்பார்.
எப்போதும் என்னிடம் அதிகமாக பாசமாக இருப்பார். அதோடு இந்த நான் அனுபவித்த வேதனைகளுக்கு அளவே கிடையாது என்று எமோஷனலாக பேசி இருக்கிறார். அதுபோல சீரியல் நடிகை வைஷ்ணவி சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
அந்த நேரத்தில் வைஷ்ணவியின் தற்கொலைக்கு சின்னத்திரையில் அவரோடு பணியாற்றிய தேவ் ஆனந்த் தான் காரணம் என்று வைஷ்ணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்திருந்தனர். அந்த புகாரின் படி தேவ் ஆனந்த் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் 10,000 அபராதமும் விதித்திருந்தார்களாம்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவ் ஆனந்த் மேல்முறையீடு செய்திருந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் தேவ் ஆனந்திற்கு மகளிர் நீதிமன்றம் விதித்த ஐந்தாண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்து இருந்தது. இது குறித்து அந்த நேரத்தில் தேவ் ஆனந்தம் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. அது குறித்து தான் இப்போது தேவ் ஆனந்த் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications