Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியோடு பிரச்சனையை பேசிய தினேஷ்.. உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டும்.. ரச்சிதா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது நடிகர் தினேஷ் தன்னுடைய மனைவி ரச்சிதாவை பிரிந்த கதை குறித்து பேசி இருந்தார்.

இந்த நிலையில் சில நாட்களாக எந்த பதிவும் வெளியிடாமல் இருந்த ரச்சிதா இன்று தன்னுடைய instagram பக்கத்தில் எமோஷனலான போஸ்ட் ஒன்றை போட்டு இருக்கிறார்.

actor Dinesh was talking about his separation from his wife Rachitha

தினேஷ் வெளிப்படையாக தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் என்ன பிரச்சனை என்பதை பற்றி பேசி இருக்கும் நிலையில் இப்போது ரச்சிதா வெளியிட்டு இருக்கும் பதிவு ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை ரச்சிதா சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமாக இருந்தாலும் அவர் முதல் முதலாக தமிழில் அறிமுகமானது பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் தான். இந்த சீரியலில் கதாநாயகியின் பிரண்டாக நடித்திருப்பார். இவரும் முக்கிய கதாநாயகியாக தான் இருப்பார்.

அதுபோல பிரிவோம் சந்திப்போம் சீரியலில ஆரம்பத்தில் பாசிட்டிவான கேரக்டரில் இருந்து பிறகு நெகடிவ் ஆனா கேரக்டருக்கு ரச்சிதா மாறி இருப்பார். இந்த நிலையில் அந்த சீரியலில் கதாநாயகனாக இருந்த தினேஷை காதலித்து திருமணம் செய்திருந்தார். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்பு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருந்தனர்.

இந்த செய்தி இணையத்தில் பரவி வந்தது. ஆனால் இரண்டு தரப்பினரும் இதுகுறித்து எந்த விவரத்தையும் தெரிவிக்காமல் இருந்தனர். அந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ரச்சிதா கலந்து கொண்டு இருந்தார். அப்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரச்சிதாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே தினேஷ் தன்னுடைய ஆதரவை முழுமையாக கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு நாளும் ரச்சிதாவின் விளையாட்டை பாராட்டி கொண்டிருந்த தினேஷ் எங்கள் இருவருக்கும் சில மனகசப்பு இருப்பது உண்மைதான். ஆனால் அது பேசி தீர்க்கும் வகையில் தான் இருக்கிறது. நாங்கள் மனம் விட்டு பேசினாலே முடிந்து விடும் என்றும் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவது குறித்தும் சில பேட்டிகளில் பேசியிருந்தார். இப்படியாக இருக்கும் நிலையில் போன சீசனிலே தினேஷ் வைல்ட் கார்ட் என்டிரியாக உள்ளே நுழைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அந்த மாதிரி சந்தர்ப்பம் நடக்கவில்லை. இதனால் இந்த சீசனில் முக்கிய போட்டியாளராக தினேஷ் ஆரம்பத்திலேயே கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அது நடக்காமல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ் உள்ளே நுழைந்திருக்கிறார். தினேஷ் தன்னுடைய விளையாட்டை சரியாக விளையாடி ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக இரண்டு வாரம் தலைவராகவும் இருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் நேற்று டாஸ்க் ஒன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்தது. அதில் தங்கள் கடந்து வந்த பாதையை குறித்து பலரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தினேஷ் நான் என்னுடைய வாழ்க்கையில் பெரிய இக்கட்டான சூழ்நிலையை சந்தித்தது என்றால் அது என்னுடைய மனைவியோடு ஏற்பட்ட பிரச்சனை தான்.

நாங்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் இருவர் பற்றிய அடையாளமும் அனைவருக்கும் தெரியும். எல்லா கணவன் மனைவிக்கும் ஏற்படுவது போற்றுதான் சில பிரச்சனைகள் எங்களுக்கும் ஏற்பட்டது. அதில் ஈகோ காரணமாக இருவருமே நாங்கள் சரியாக முடிவை எடுக்காமல் விட்டு விட்டோம். அது ஒரு கட்டத்தில் பெற்றோர்களாலும் தீர்த்து வைக்க முடியாத அளவிற்கு கைமீறி போய்விட்டது.

நான் அந்த கஷ்டத்தில் ரொம்பவே மனம் உடைந்து போய் இருந்தேன். நான் மட்டுமல்ல என்னுடைய மனைவியும் அப்படித்தான் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையிலே நான் சந்தித்த மோசமான கஷ்டங்கள். அந்த நேரங்கள்தான் இன்னமும் அந்த நிலைமையில் தான் இருக்கிறேன். அது சீக்கிரமாக மாறும் என்று நம்புகிறேன் என்றும் அந்த டாஸ்க்கில் தினேஷ் கூறியிருந்தார்.

இதனால் தினேஷ் மற்றும் ரச்சிதாவின் ரசிகர்கள் இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தொடர்ச்சியாக கருத்து கூறி வருகின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில் சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் எந்த பதிவும் வெளியிடாமல் இருந்த ரச்சிதா இன்று தன்னுடைய அம்மாவுடன் ஈஷா மையத்திற்கு சென்றிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

கூடவே அதற்கு உருக்கமான கேப்ஷன் ஒன்றையும் கொடுத்து இருக்கிறார். அதில் வலியின் குணம் வலியில் இருக்கிறது.... இதுதான் வாழ்க்கையில் இறுதியான உண்மை.. உங்களுடைய வாழ்க்கையை ஆன்மீக ரீதியில் மறு தொடக்கம் செய்யுங்கள்.. நான் உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டுமானால் அமைதியாகவும் மௌனமாகவும் இருப்பது தான் இப்போது விருப்பமாக இருக்கிறது என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் தினேஷ் கருத்துக்கு ரச்சிதா ஏதேனும் மாற்றுக் கருத்து சொல்ல இருக்கிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+