இப்படிலாம் பேசலாமா..? எதிர்நீச்சல் குணசேகரனுக்கு நடிகர் தினேஷ் வைத்த வேண்டுகோள்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியில் விரைவில் வெளியாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் இப்போது என்னால் அதில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த செய்தி வைரலாகி வரும் நிலையில் நடிகர் தினேஷ் இதற்கு சில விளக்கங்களும் கொடுத்து கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.

சமீபத்தில் சின்ன திரையில் பெரிய அளவில் பேசப்படும் ஒரு சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூடிய திடீர் திருப்பங்கள் அந்த சீரியலுக்கு மேலும் சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியல் நடிகர்களும் தங்களுடைய நடிப்பை எதார்த்தமாக காட்டி வருகின்றனர்.
அதில் வில்லனாக இருந்தாலும் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் ஒரு கேரக்டராக நடிகர் மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். இவருக்கு என்று இப்போது அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். சமூக வலைத்தளத்தில் இவர் பேசும் டயலாக்குகள் தான் இப்போது மீம்ஸ் மற்றும் டெம்ப்லேட்டாக மாறி வருகிறது.
வெள்ளித்திரையில் இதுவரைக்கும் நடித்து வந்த மாரி முத்து முதல்முறையாக சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்து சீரியல் வாய்ப்பு வந்திருக்கிறது. அதுவும் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் நடிப்பதற்கு முதலில் குணசேகரனிடம் தான் பேசப்பட்டதாம். அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மாரிமுத்து கூறியிருந்தார்.
நான் ஜெயிலர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது என்னிடம் ராதிகா மேடம் கால் பண்ணி கேட்டார்கள். இது சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தின் சாயலில் இருக்கும் என்று இது விசு கேரக்டர் போன்று முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டருக்கு அப்பா கேரக்டரில் என்னை நடிக்கும்படி கேட்டார். ஆனால் எனக்கு சில சூழ்நிலை சரி இல்லாததால் அதில் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது. அதில் தான் இப்போது எஸ்.ஏ சந்திரசேகர் சார் நடிக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இரண்டு நாட்களாக இந்த செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது குறித்து பிரபல சீரியல் நடிகரான தினேஷ் மாரிமுத்து சார் இப்படி பேசி இருக்க கூடாது. எதிர்நீச்சல் சீரியலில் கூட மாரிமுத்து சார் செலக்ட் பண்ணுவதற்கு முன்பாக நிறைய பேர் ஆடிஷனில் கலந்து கொண்டு இருப்பாங்க. அப்படித்தான் இவரும் கலந்து கொண்டு இப்போது தன்னுடைய பெஸ்ட்டை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அது மாதிரி தான் கிழக்கு வாசல் சீரியலிலும் சந்திரசேகர் சாருக்கு முன்பு நிறைய பேர் ஆடிஷன் போயிருப்பாங்க. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா பார்க்க கூடாது. நாம நடிக்க முடியாமல் போயிட்டா அதை பத்தி பேசி அடுத்தவங்கள கஷ்டப்படுத்த கூடாது. இது நான் எல்லாருக்கும் வைக்கிற வேண்டுகோள் என்று கூறி இருக்கிறார். தற்போது இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
சென்னையை விட்டு கிராமத்துக்கு போக போறேன்.. இதுதான் காரணம்! உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி -
மகனின் 2வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. பாராட்டு குவியுது -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
7 மாதங்கள் கோமா... மனைவியை இழந்த வலி.. இப்போ நிலைமை இதுதான்! சீரியல் நடிகர் பரத் கல்யாண் உருக்கம்! -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
ஜெயிச்சுட்டாங்க நடிகை சுகன்யா..சன் டிவிக்கு 10 லட்சம் ஃபைன்! நக்கீரன் கோபால் வீடியோவால் வந்த சிக்கல் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications