சிறகடிக்க ஆசையில் என்ட்ரியாகும் தெய்வமகள் சீரியல் நடிகர்! இந்த கேரக்டரா? காமெடிக்கு பஞ்சம் இருக்காது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் மூர்த்தி கேரக்டரில் நடித்த நடிகர் கணேஷ், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.

விஜய் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் குமரன் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே பல சீரியல்களை இயக்கியிருக்கிறார். அதிலும் சமீபத்தில் முடிவடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலையும் இவர்தான் இயக்கியிருந்தார். அதுபோல சன் டிவியில் பெரிய அளவில் ஹிட்டடித்த தெய்வமகள் சீரியலையும் தான் இயக்கி இருந்தார்.

television siragadikka aasai serial vijay tv

குமரன் சீரியலுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் ரோகிணி எப்போது மாட்டுவார் என்று எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு இப்போது அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சி கிடைத்துக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் ரோகிணி மற்றும் மனோஜ் ஜீவாவிடம் இருந்து வாங்கிய 30 லட்சம் பணம் பற்றிய விஷயத்தை முத்து கண்டுபிடித்து வீட்டில் சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து இப்போது ரோகிணி சிட்டியிடம் ஏற்கனவே மூன்று முறை கடன் வாங்கியிருக்கிறார் என்ற உண்மையையும் சத்யா மூலமாக மீனாவிற்கு தெரிய வந்திருக்கிறது.

அது பற்றி இன்றைய எபிசோடில் மனோஜிடமும் முத்து சொல்லி இருக்கிறார். இதனால் ரோகிணிக்கு அடுத்த பிரச்சனையும் வந்து இருக்கிறது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் அடுத்த திருப்பம் வரப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு கேரக்டர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதாவது தெய்வமகள் சீரியலில் வினோதினியின் கணவராக மூர்த்தி கேரக்டரில் நடித்த கணேஷ் தான் இந்த சீரியலில் என்ட்ரி கொடுப்பதாக கூறப்படுகிறது. அதாவது விஜயாவின் தோழியாக இருக்கும் பார்வதியின் மகன் கேரக்டரில் இவர் அறிமுகமாவதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகிறது.

காரணம் கணேஷ் மற்றும் பார்வதி இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனால் பார்வதியின் மகன் கேரக்டரில் இவர் வருவாரா? என்ற எதிர்பார்ப்பும் வருகிறது. அதுபோல சில நாட்களுக்கு முன்பு தெய்வமகள் சீரியலில் வினோதினியாக நடித்த சுஹாசினி மற்றும் கணேஷ் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.

இதனால் பார்வதியின் மகனாக கணேசும் மருமகளாக சுஹாசினையும் அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விகளும் எழுகிறது. ஒருவேளை இப்படி இவர்கள் இருவரும் இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்தால் சீரியலில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் போகும்.

ஏற்கனவே இப்போது சீரியல் பிக் அப்பாக தொடங்கி இருக்கும் நிலையில் புது கேரக்டர்களின் அறிமுகத்தால் இன்னும் கதையில் சுவாரசியம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகிணி மாட்டும் விஷயம் தெரிந்ததும் அடுத்த கட்டத்தில் இவர்களை வைத்து இந்த கதை நகர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே பார்வதி பல இடங்களில் தன்னுடைய மகனை மருமகள் தன்னிடம் இருந்து பிரித்து கூட்டிட்டு போய்விட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் இவர் இந்த சீரியலில் என்ட்ரி ஆகும்போது விஜயாவிற்க்கு செம ஆப்பு இருக்கும்.

காரணம் விஜயா பார்வதியின் வீட்டில் தான் டான்ஸ் கிளாஸ் நடத்திக் கொண்டிருக்கிறார். இதனால் அங்கு வச்சு விஜயாவுக்கு பிரச்சனை கொடுப்பதற்காக இவர்கள் இருவரும் அறிமுகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+