இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. கார்த்திக்கால் பட்ட கஷ்டம் குறித்து மகன் கௌதம் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் கார்த்திக் மகன்தான் கௌதம் கார்த்திக்.
முதல்முறையாக கௌதம் கார்த்திக் தன்னுடைய அப்பா தன்னுடைய அம்மாவை பிரிந்து வேறு திருமணம் செய்த பிறகு தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

அத்தோடு பெற்றோர்கள் யாராக இருந்தாலும் இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று வேண்டுகோளும் வைத்திருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் நவரச நாயகன் என்று அதிகமான ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் கார்த்திக். இவர் முதல் முறையாக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கார்த்திக் எதிர்பார்க்காத அளவிற்கு அவருடைய முதல் படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது.
அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அந்த வகையில் மௌனராகம், ஆகாய கங்கை, லக்கி மேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்து கார்த்திக் முன்னணி நடிகராக மாறிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ரஜினி கமலுக்கு போட்டியாக இவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும் தொடர்ச்சியாக நல்ல படங்களில் நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் திடீரென்று சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கடந்த 2015 ஆம் ஆண்டு அனேகன் என்ற திரைப்படத்தின் மூலமாக வில்லனாக மீண்டும் அறிமுகம் ஆகியிருக்கிறார். அதோடு கார்த்திக் தனிப்பட்ட வாழ்க்கையை முதலில் ராகினி என்பவரை திருமணம் செய்து இருந்தார்.
ராகினியும் கார்த்திக்கும் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர். இவர்களுக்கு கௌதம் கார்த்திக் மற்றும் இன்னொரு மகனும் பிறந்தனர். இந்த நிலையில் நான்கு வருடங்கள் கழித்து ராகினியின் தங்கை ரதியையும் கார்த்திக் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் சமீபத்தில் பேட்டியில் தன்னுடைய அம்மா அப்பா பிரிந்து இருந்த வாழ்க்கையை குறித்து பேசி இருக்கிறார்.

அதாவது அப்பா தன் சித்தியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் தான் அம்மாவை அவர் பிரிந்து விட்டார். அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டதால் நானும் தம்பியும் தனிமையில் வாடினோம். அப்போ அப்பா சென்னையில் இருந்தார். நானும் தம்பியும் ஊட்டியில் அம்மாவோடு இருந்தோம். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே அப்பா போன் செய்து பேசுவார். அந்த நேரத்தில் அவரும் பிசியாக இருந்தார்.
எப்பவாவது எங்களை பார்க்க வருவார். சிறு வயதில் இருந்து என்னையும் என் தம்பியையும் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டது என்னுடைய அம்மா தான். அப்போது ஸ்கூல், காலேஜ் ஃபங்ஷனில் எல்லோருக்கும் அம்மா அப்பா வருவாங்க.எனக்கு அப்பா அம்மா பிரிந்து இருக்கிறது தெரிந்திருந்தாலும் மேடையில் நிற்கும் போது எங்களை அறியாமலும் அந்த கண்கள் அங்கே அப்பாவை தேடும்.
அது எங்களுக்கு மட்டுமல்ல எங்களைப் போல சிங்கிள் பேரண்ட் வளர்ப்பில் இருக்கும் பல குழந்தைகளின் நிலைமையும் இதுதான். அந்த இடத்தில் ஒரு தனிமையை உணர்ந்து கண்டிப்பாக அவர்களுக்கு அம்மாவோ, அப்பாவோ யார் நம்ம கூட இல்லையோ அவர்களை மிஸ் பன்னி தேடுவோம். அதனாலேயே குழந்தைகளின் நலத்தையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கௌதம் உருக்கமாக வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
-
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications