நடிகர் ஜெய்சங்கர் பற்றி மகன் உருக்கம்.. அவர் "ஆயிரம்” சொன்னார்.. "கண்” கலங்க வைத்த வார்த்தை
சென்னை: நேற்று உலகெங்கிலும் தந்தையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய தந்தை குறித்து பல மலரும் நினைவுகளை பகிர்ந்து இருந்தனர்.
அந்த வகையில் நடிகர் ஜெய்சங்கர் பற்றி அவருடைய மகன் விஜய் சங்கர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
என்னுடைய தந்தை ஆசைப்பட்டதை தான் நிறைவேற்றி வருவது குறித்து அவர் சந்தோஷமாகவும், கூடவே வருத்தத்தையும் அவர் பகிர்ந்து இருக்கும் நிலையில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் ஹீரோ அவர்களின் தந்தை தான். அதுவும் பெண் குழந்தைக்கு கேட்கவே வேண்டாம். பல வீட்டில் தந்தைக்கு ஆண் குழந்தைகளுக்கு முட்டல் மோதல் இருந்தாலும் மனதிற்குள் அவ்வளவு பாசம் இருக்கத்தான் செய்யும். இந்த நிலையில் நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் தந்தையைப் பற்றி பல ரகசியங்களை பகிர்ந்து இருக்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் ஜெய்சங்கர் பற்றி அவருடைய மகன் விஜய் சங்கர் உருக்கமாக பேசியிருக்கிறார். அதில், என்னை டாக்டர் ஆக பார்த்ததில் அப்பாவுக்கு நிறைய சந்தோசம். அதிலும் கண் மருத்துவராக ஆனது கூடுதல் சந்தோஷம். ஆனாலும் என்னுடைய அப்பா என்கிட்ட அடிக்கடி "நீ படிச்சது பெருசு இல்ல, நீ என்னை போலவே பலருக்கு உதவி செய்யணும்" என்று சொன்னார்.
அதனாலேயே நான் என்னுடைய தந்தையின் பிறந்தநாளுக்கும், திருமண நாள் மற்றும் விசேஷ நாட்களில் இலவசமாக பலருக்கும் கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறேன். மேலும் என்னை "ஆயிரம் ஆப்பரேஷனாவது பண்ணிடுப்பா" என்று என்னுடைய அப்பா வாழ்த்தினார்.
அவருடைய ஆசையை நிறைவேற்றி நிஜமாக்க வேண்டும் என்பதற்காக தான் நான் இப்போதும் என்னுடைய 25 வருட அனுபவத்தில் "பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண் ஆபரேஷன்கள்" செய்து முடித்திருக்கிறேன். இப்போ அவர் கூட இல்லனாலும் இதை பாத்து சந்தோஷப்பட்டு இருப்பார் என்பது எனக்கு தெரியும்,
அப்பாவின் 100வது படமான "இதயம் பார்க்கிறது" என்ற படத்தில் கூட கண் பார்வை இழந்தவர் வேடத்தில் நடித்திருப்பார். பொதுவாகவே அப்பாவுக்கு கண் தெரியாதவர்களை ரொம்பவே பிடிக்கும். அவர்களுக்காக அப்பா வெளியே தெரியாமல் நிறைய செய்திருக்கிறார். அதே கண் சார்ந்த துறையில் நான் மருத்துவர் என்பதால் அப்பா சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதாலும் நான் வருடத்தில் ஒருமுறை சினிமா துறையில் இருப்பவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகம் நடத்தி வருகிறேன். இது நான் எனது தந்தைக்கு செலுத்தும் நன்றி கடன்.
அப்பாவிடம் நான் வியந்து பார்த்தது என்னன்னா அவருடைய நண்பர்கள் தான். அவருக்கு அவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவர் இவ்வளவு நண்பர்களை சம்பாதிக்க முடியுமா? என்று எனக்கு அவரைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் நான் பார்த்தவரையில் பணத்தின் மீது பற்று அற்றவராக தான் இருந்தார்.
நிறைய உதவிகள் சிலர் கேட்டும், சிலர் கேட்காமலும் செய்து கொடுத்திருக்கிறார். வெளியே தெரியாத அளவில் செய்து கொண்டே இருந்தார். அப்பா பற்றி நிறைய விஷயம் அவரின் இறப்புக்குப் பிறகு தான் எனக்கே தெரிய வந்தது. அப்பா இல்லாததை நான் எந்த சூழலிலும் உணரவில்லை. எல்லா விதத்திலும் என்னுடன் இருந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன். ஆனால் அப்பாவை பற்றி நிறைய பேர் நல்லவிதமாக சொல்லி கேட்கும் போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
இதுபோல எங்க வீட்டில என்ன விசேஷங்கள் இருந்தாலும் அப்பா ஆதரவற்றோர் இல்லங்களுக்கு போய்தான் விருந்து வைத்து கொண்டாடுவார். அங்கு குழந்தைகளுக்கு விருந்து வைத்து தனக்கு தெரிந்த நண்பர்களை கூப்பிட்டு அவரின் கையால் பரிமாற வைப்பார். அப்ப கூட எல்லா செலவுகளையும் நீங்க பண்ணிட்டு அதை ஏன் மற்றவர்கள் கையால் தர சொல்றீங்க என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர் நான் கூப்பிட்டு வருகிற பெரிய மனிதர்கள் யாரும் இந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் இதுவரைக்கும் வந்திருக்க மாட்டாங்க. அதனால இது ஒரு வாய்ப்பா இருந்து இந்த உதவி அவர்களின் மனசை தொட்டு நாளைக்கு அவர்களும் இதே மாதிரி உதவி செய்ய முன் வருவார்கள் என்று தான் ஒரு தூண்டுகோளா என்னுடைய முயற்சி அமையட்டும் என நான் இப்படி பண்றேன் என்று சொல்லி இருக்கிறார்.
அதுபோல இப்போதும் அப்பாவின் நண்பர்கள் மற்றும் சினிமா துறையை சார்ந்த பலர் என்னிடம் பேசும்போது நீங்க உங்க அப்பாவை மிஞ்சி விட்டீர்கள் என்று சொல்றாங்க. ஆனா அதை நான் ஏத்துக்க மாட்டேன். எப்போதும் அவர் நிழல்தான் நான். என்றுமே ஜெய்சங்கர் மகன்தான் நான். அதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார்.
அதோடு ஜெய்சங்கரனின் இளைய மகன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராஜசேகர் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். பாக்யாவுக்கு கேட்டரிங் ஆர்டர் எடுப்பதற்கு உதவி செய்தது ராஜசேகர் தான். அதனால் அதிகமான ரசிகர்கள் அப்பாவைப் போலவே பிள்ளைகளும் இருக்கிறார் என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications