பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர் ஜெய்சங்கர் மகன்.. சீரியலில் போலவே நிஜ வாழ்க்கையிலும் குணம்
நடிகர் ஜெய்சங்கரின் மகன் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருவது குறித்து பல தகவல்களை கூறியிருக்கிறார்.
சென்னை: நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் பாக்கியலட்சுமி சீரியலில் ராஜசேகர் என்கிற கேரக்டரில் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் தன்னுடைய தந்தை ஜெய்சங்கர் பற்றியும் அவருடைய மறைவுக்குப் பிறகு தன்னுடைய நிலைமை பற்றியும் நடிகர் விஜய் சங்கர் பல தகவல்களை கூறியிருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவுக்கு அடுத்தடுத்து உதவி செய்வது போலத்தான் நிஜ வாழ்க்கையிலும் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் பல உதவிகளை செய்து வருகிறார்.

பெண்ணின் போராட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்து பல வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாக்கியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டனர். குடும்பப் பெண்களில் ஆதரவை மொத்தமாக அல்லிய பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்திருக்கின்றனர். ஒரு நடுத்தர குடும்பத்து பெண் தன்னுடைய சுய கௌரவத்தையும் தன்மானத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடும் போராட்டமாக இந்த சீரியல் இருந்து வருகிறது.

நடிகர் ஜெயசங்கரின் வாரிசு
பாக்யாவை அவருடைய கணவர் கோபி விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்துவிட்டு வெளியே சென்று விட்டாலும் தன்னுடைய சுய கவுரவத்தை காப்பாற்றுவதற்காக பாக்யா போராடிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு உதவி வரும் நிலையில் அதில் முக்கியமான நபராக ராஜசேகர் இருந்து வருகிறார். பாக்யாவிற்கு திடீரென அறிமுகமாகி அடுத்தடுத்து பல உதவிகளை செய்து கொடுத்துக் கொண்டிருக்கும் ராஜசேகர் வேறு யாரும் இல்லை வெள்ளி திரையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன் தான்.

படிப்பு முக்கியம்
நடிகர் ஜெய்சங்கரின் மகனான நடிகர் விஜய் சங்கர் முதல்முறையாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். இவர் சீரியலில் பாக்கியாவுக்கு உதவி செய்வது போலவே நிஜ வாழ்க்கையிலும் உதவி செய்து வருகிறார். ஒரு இன்ஜினியரிங் படித்து கொண்டிருக்கும் போது இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆசை ஏற்பட்ட நிலையில் அவருடைய தந்தை ஜெய்சங்கர் நடிப்பு எல்லாம் படிப்பிற்கு பிறகு தான். படித்து முடித்த பிறகு தான் எது தேவையோ அதில் கவனத்தை செலுத்தலாம் என்று மறுத்துவிட்டாராம். நடிகர் ஜெய்சங்கர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல அவருடைய மகன் விஜய் சங்கரும் இன்ஜினியரிங் முடித்து இருக்கிறாராம்.

உதவி செய்யும் குணம்
அதுமட்டுமல்லாமல் அதைத்தொடர்ந்து ஒரு கண் மருத்துவராகவும் ஆகி இருக்கிறார். தனது தந்தையின் பிறந்த நாளில் தனது தந்தையின் நினைவாக 15 இலவச கண் அறுவை சிகிச்சைகளை நடத்தி வருகிறார். அது மட்டும் அல்லாமல் தந்தையின் நினைவாக ஒரு நம்பிக்கையை உருவாக்கி இந்த முகாமை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அதோடு இனி இருதய அறுவை சிகிச்சைகள் போன்ற சிறப்புகளையும் விரிவு படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம். இந்த நிலையில் தான் பாக்கிய லட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருப்பதை பார்த்து வெளியே செல்லும் இடமெல்லாம் தனக்கு அதிகமான ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. பலர் பாக்யாவுக்கு உதவி செய்வதை பாராட்டி வருகிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications