நாயகன் படத்தில் குயிலியோடு கப்பலில் ஆடும்போது கமல்..! யாருக்கும் தெரியாத ரகசியத்தை உளறிய ஜனகராஜ்
சென்னை: இந்திய சினிமாக்களிலேயே இதுவரை வந்த தலைசிறந்த படங்களை பட்டியலிட்டால் நாயகன் படத்திற்கு கண்டிப்பாக அதில் ஒரு இடம் இருக்கும்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து இளையராஜா இசையில் வெளிவந்த நாயகன் படம் அந்த அளவிற்கு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து.

இந்த திரைப்படத்தில் நடிகர் ஜனகராஜ் கமல்ஹாசனின் நண்பராக நடித்திருப்பார். அவர் தற்போது நாயகன் திரைப்படத்தில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து பேட்டியில் பேசியிருக்கிறார்.
1988 ஆம் ஆண்டு பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தது. இந்தப் படத்தில் கதாநாயகன் கமல் கதாபாத்திரத்தை அடுத்து ஜனகராஜ் கதாபாத்திரம் தான் பெரிதளவு பேசப்பட்டது. கமலின் நிழலாக படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வாழ்ந்திருப்பார் ஜனகராஜ். இளையராஜா படத்தில் கமலுக்கென்று பாடல்களின் மெட்டுக்களை தேடி தேடி பட்டை தீட்டி கொடுத்திருப்பார்.
'தென்பாண்டி சீமையிலே, நீ..ஒரு காதல் சங்கீதம்'..பாடல்கள் காலத்தால் அழியாத மெலடி பாடல்களாக என்றும் இருக்கும். 'நிலா.. அது.. வானத்து.. மேலே... பாடல் இன்றும் பல நேரங்களில் பலரது கொண்டாட்ட பாடலாக இருந்து வருகிறது. நிலா அது வானத்து மேலே பாடலுக்கு கடலில் மிதக்கும் கப்பலில் கமல் வளர்ந்து வரும் டானாக அமைதியாக அமர்ந்திருக்க ஜனகராஜ் நடிகை குயிலியுடன் குத்தாட்டம் ஆடியிருப்பார்.
அந்த பாடல் படப்பிடிப்பை குறித்து பகிரும்போது போகிற போக்கில் ஒரு ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார் ஜனகராஜ். இதைப் பற்றி தனியார் youtube நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது..'இயக்குனர் மணிரத்தினம் எனக்கு நாயகன் திரைப்படத்தில் அருமையான கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார்.
இயக்குனர் மணிரத்தினம் படத்தில் டயலாக்குகள் குறைவாகத்தான் இருக்கும் அதிலும் இரண்டு மூன்று ஹைலைட்டான டயலாக்குகளை எனக்கு வைத்திருந்தார். படத்தில் கமல் டீக்கடையில் அமர்ந்திருக்கும் பொழுது 'வேலு... நீ..இரு..என்று உணர்ச்சிவசப்பட்டு வேகமாக பேசும் வசனம், 'இனிமேல் எல்லாம்.. அப்படித்தான்.' என்று கமலிடம் கூறும் வசனம்.
கமல் மகள் என்னை அடிக்கும் போது கமல் கோபத்தில் எங்கிருந்து வந்தது இந்த கை நீட்டுகிற பழக்கம் என்று கேட்கும் போது 'நம்ம கிட்ட இருந்து தான்' என்று கூறும் இடமாகட்டும் அசாதாரண காட்சிகளில் சாதாரண வசனத்தின் மூலம் என்னை தனிப்படுத்தி காட்டியிருப்பார்.நிலா அது வானத்து மேலே பாடல் காட்சியின் படப்பிடிப்பின் பொழுது கமல் அமைதியாக தான் அமர்ந்திருப்பார்.
நானும் குயிலியும் தான் டான்ஸ் ஆடுவது போல் அந்த பாடல் இருக்கும். கடலில் வைத்து படப்பிடிப்பு நடத்தியதால் பலருக்கு கடல் நோய்(sea sick) ஏற்பட்டு அதனால் அனைவருக்கும் வாந்தி வந்துவிட்டது. அதனால் கமல் சார் ஹாயாக அமர்ந்திருக்க நானும் குயிலியும் ஆடிக் கொண்டிருக்க படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் அன்று வரவில்லை. அதனால் அவருடைய உதவியாளர் பாடலை ஷீட் செய்தார் எனக் கூறியிருக்கிறார்.

பல கேட்டகிரியில் தேசிய விருது வாங்கியது நாயகன் படம். முக்கியமாக ஒளிப்பதிவிற்காகவும் தேசிய விருது கொடுக்கப்பட்டது. ஆனால் நிலா அது வானத்து மேலே பாடல் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் தான் சூட் செய்தார் என்று ஜனகராஜ் சொன்னதை கேட்ட பலர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு தன்மையில் கொஞ்சமும் பிசிராமல் அந்தப் பாடலை ஒளிப்பதிவு செய்த அந்த உதவியாளர் திறமையை எண்ணி ஆச்சரியப்படுவதோடு, அவர் யாராக இருக்கும்..!? என்று இணையத்தில் தேடி வருகின்றனர்.
-
சட்டசபைத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? ஆதவுக்கான கண்டன ட்வீட்டை Decode செய்த அர்ஜுனமூர்த்தி -
"ரஜினிகாந்த் அறிக்கைக்கு பதில்"! தவெக பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜுனா! -
ரஜினிகாந்த் ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டாங்க.. ஆதவ் அர்ஜுனா உடனே மன்னிப்பு கேட்கனும்.. நயினார் டென்ஷன் -
நீதான்யா தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர்.. இந்த நேரத்தில் இப்படியா! ஆதவ் அர்ஜுனாவால் நொந்துபோன விஜய் -
கடிவாளம் போடாமல் ஆடவிட்ட விஜய்.. ரஜினிகாந்த் வைத்த ஆப்பு.. சிக்கலில் கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா! -
ஆதவ் அர்ஜுனா அரசியல்வாதியே கிடையாது.. விஜய் வெளிச்சத்தில் ஒட்டி இருக்கிறார்.. சாடிய இயக்குநர் அமீர்! -
ரஜினி பயந்தாங்கோளி கிடையாது.. ஆதவ் அர்ஜுனா விளக்கம் தரணும்.. தவெக மேடையிலே கிளம்பிய எதிர்ப்பு -
Rajinikanth: அன்று காக்கா- கழுகு கதையால் விஜய்யை விமர்சித்த ரஜினி! நடந்தது என்ன? வைரலாகும் பழைய கதை! -
ஆதவ் அர்ஜுனா கருத்தால் ரஜினிகாந்த் கோபம்.. காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும் என ஆவேச ட்வீட் -
ஆதவ் வாயை கட்டுங்க விஜய் இல்லன்னா பிரச்சனை..! எச்சரிக்கை விடுத்த ப்ளூ சட்டை மாறன்.. ரஜினி சர்ச்சையில் புதிய திருப்பம் -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி












Click it and Unblock the Notifications