கமல், ரஜினி பற்றி ரகசியத்தை வெளியிட்ட நடிகர் ஜனகராஜ்.. சம்பளத்திற்காக 40 முறை அலையவிட்ட பிரபலம்
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பின்பு பிரபல காமெடி நடிகர் ஜனகராஜ் தன் திரை அனுபவங்கள் குறித்தும் தன்னுடன் நடித்த உச்ச நட்சத்திரங்கள் பற்றியும் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் ரசிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.
தன்னுடைய நடிக்கும் திறமைக்கு அச்சாரமே பாரதிராஜா தான் என கூறியுள்ள ஜனகராஜ் ரஜினி, கமல் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

ரஜினி மற்றும் கமல் படங்களின் ஆஸ்தான காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் தான் நடித்ததை பற்றி கூறியுள்ள ஜனகராஜ்"நான் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே நான் நடிக்கும் படங்களில் என்னுடைய கதாபாத்திரம் முதலில் காமெடியாகவும், பாதிக்குப்பின் சென்டிமென்ட் ஆகவும்,இறுதியில் சீரியஸ் ஆகவும் இருப்பது போன்றே இயல்பாக அமைந்துவிட்டது.
அதுவே கமல் ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் பாட்ஷா,நாயகன் போன்று பல படங்களில் என்னை பயன்படுத்திக் கொள்ள காரணமாகவும் இருந்தது.மேலும் ரஜினி மற்றும் கமலுடன் நடித்த அனுபவத்தை பற்றி கூறும் பொழுது நாம் என்னதான் பெர்பாமென்ஸ் கொடுத்து நடித்தாலும் கமலின் ரியாக்சன் ஜஸ்ட் சிரிப்பாக மட்டுமே இருக்கும்.

ஆனால் பல நேரங்களில் நம்முடைய நடிப்பில் சில மாறுதல்களையும் செய்யச் சொல்வார். அப்படி அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவர் சொல்லிக் கொடுத்தபடி நான் சிரித்த வித்தியாசமான சிரிப்பு இன்று வரை என்னுடைய எவர்கிரீன் மாடுலேஷன் ஆக இருக்கிறது.
ஆனால் ரஜினி உடன் அவர் படங்களில் பணியாற்றும் பொழுது நான் நடிக்கும் காட்சிகள் நன்றாக வந்து விட்டால் "அடி தூள்.. கிளப்புங்க..." என்று வாய் நிறைய பாராட்டுவார். சூட்டிங் நேரங்களில் கமல் பார்ப்பதற்கு கொஞ்சம் ரிசர்வ் டைப்பாகவே தெரிவார். ஆனால் ரஜினி ஜாலி மூடில் இருப்பார். ஆனால் கேமரா முன்பு வந்துவிட்டால் இருவரும் வேறு மாதிரி ஆகி விடுவார்கள்.

இப்பொழுது இருப்பதைப் போல் முன்பெல்லாம் நடிகர்களுக்கு என்று கேட்டகிரி கிடையாது. ஹீரோ ,ஹீரோயின் தவிர்த்து அனைவருமே கேரக்டர் ஆர்டிஸ்ட் கேட்டகிரி தான். என்னதான் பிசியான நடிகராக இருந்தாலும் அவரும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் தான். நான் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வந்த பொழுது பெரும்பாலும் எந்த படத்திற்கும் முதலில் நான் சம்பளம் வாங்குவதில்லை.
சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் முடிந்த பிறகு தான் என்னுடைய சம்பளத்தை கேட்பேன். டப்பிங் பணி முடித்த பின்பு கேட்பேன் என்பதால் பலர் உடனடியாக பணத்தை தராமல் அந்த நேரத்தில் இழுத்தடிக்கவும் செய்திருக்கின்றனர். சிலரிடம் உங்களை நம்பி தானே இந்த படத்தில் வேலை செய்தேன் இப்படி வேலை முடிந்ததும் இழுத்தடிக்கலாமா? என்று சம்பளத்திற்காக சண்டையும் போட்டு இருக்கிறேன்.
பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா.. ஜனகராஜ் மனைவி யார் தெரியுமா? 5 வருட காதல்.. தற்போதைய நிலை இதுதானாம்
சில தயாரிப்பாளர்கள் என்னை நாற்பது முறை வரை கூட சம்பளத்திற்காக அலைய வைத்திருக்கிறனர். ஒரு சில படங்களுக்கு சம்பளமே வாங்காமலும் இருந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இரண்டு மூன்று படங்களில் மெயின் காமெடியனாக நடித்து விட்டால் தனி கேரவன், ஸ்டார் லாட்ஜில் ரூம் கேட்கும் இந்த காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்தாலும் வெற்றிகரமான குணச்சித்திர நடிகராக, காமெடி நடிகராக இருந்தாலும் அன்று ஜனகராஜ் அவர்கள் பட்ட கஷ்டம் தான் இன்று வரை மக்கள் அவரை நினைவில் வைத்துக் கொள்ள காரணமாக இருக்கிறது என்று பல கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications