உன் சைடுல குறைய வச்சு என்னை பாத்து முறைக்கிற! நான் பேச வந்தால் ஏன் ஒளியுற? ஜெயம் ரவி திடீர் வீடியோ
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடிக்கும் பிரதர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது அதிகமான கமெண்ட்களை ஈர்த்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களில் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வது பற்றி தான் பலரும் பேசி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஜெயம் ரவி அவருடைய மனைவியை பிரியப் போகிறார் என்று கிசுகிசு வெளியான நிலையில் திடீரென இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் தான் மனைவி ஆர்த்தியை பிரிய முடிவு எடுத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதோடு அதில் தன்னை சார்ந்தவர்களுக்காக தான் எடுத்த முடிவு என்றும் விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் ஆர்த்தி இது எனக்கே தெரியாமல் ஜெயம் ரவி அவராகவே எடுக்க முடிவு. அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் நான் இருக்கிறேன். நானும் என்னுடைய குழந்தைகளும் தவித்து வருகிறோம். என் தரப்பு நியாயத்தை அவரிடம் சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். ஆனால் அது முடியவில்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து சில தினங்கள் கழித்து ஜெயம் ரவி நடித்த பிரதர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது விவாகரத்து முடிவு எனக்கு தெரியவில்லை என்று ஆர்த்தி சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் இரண்டு நோட்டீஸ் அவர் வாங்கி இருக்கிறார். அதுபோல அவருடைய அப்பாவே என்னிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். நான் என்னுடைய மகன்களுக்காகத் தான் அமைதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

அதுபோல ஜெயம் ரவி கடந்து சில மாதங்களாகவே கோவாவில் ஒரு பாடகியோடு வசித்து வருகிறார் என்ற வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கும் ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்து இருந்தார். அந்த பாடகி உடன் வருங்காலத்தில் நான் ஒரு ஹீலிங் சென்டர் தொடங்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன் வேறு எதுவும் கிடையாது என்னுடைய குடும்ப பிரச்சனையில் அவர்களை இழுத்து விடாதீர்கள். வாழு வாழ விடு.. சிலர் அவர்களுடைய தப்பை மறைப்பதற்காக பிரச்சனையை வேறு விதமாக திருப்பி விடுகிறார்கள் என்று எல்லாம் பேசி இருந்தார்.
அதே நேரத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி காதலுக்கு சப்போர்ட்டாக இருந்தது குஷ்பூ தான். ரவியின் மாமியார் சுஜாதாவின் நெருங்கிய தோழியான குஷ்பூ ஆர்த்திக்கும் ஜெயம் ரவி மீது ஆசை இருப்பதை தெரிந்து கொண்டு அவர்தான் திட்டம் போட்டு சிங்கப்பூருக்கு இருவரையும் அழைத்து சென்று அவர்களுக்குள் காதலை வெளிப்படுத்த வைத்திருந்தார். இதை பற்றி பல பேட்டிகளில் ஏற்கனவே அவர்கள் இருவரும் பேசி இருந்தனர்.

ஆனால் இப்போது இவர்கள் இருவரும் விவாகரத்து அறிவித்திருக்கும் நிலையில் அது குஷ்பூவிற்கு கோபத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “மனைவியை பிரிந்தவன் மனுசனே இல்லை.. அவனுக்கு வாழவும் தகுதியில்லை” என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் பிரதர் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்த மக்கா மிஷி பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்திருக்கிறது.
பிரதர் பட இசை வெளியீட்டு விழாவிற்காக ஜெயம் ரவி வித்தியாசமாக ஆட்டோவில் வந்திருக்கிறார். ஆட்டோவின் முன்பக்கத்தில் ஜெயம் ரவி என்று எழுதப்பட்டிருக்கிறது. பின்பக்கத்தில் பிரதர் என்றும் மக்காமிஷி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவிற்கு “உன் பக்கம் ஃபால்ட் வச்சு என்னை ஏண்டா முறைக்கிற.. நான் ஃபுல் ஸ்பீடு பேச வந்தா ஏன்டா ஓடி ஒளியிற? நான்கு வால்ஸ்க்குள்ள மட்டும் ரூல்ஸ் ரொம்ப பேசி நடிக்கிற... அதே ரூல்ஸ் நான் ரோட்ல பேசினா ஏன்டா என்னை பார்த்து குறைக்கிற...













Click it and Unblock the Notifications