விரைவில் நல்ல செய்தி.. மகனுக்காக அந்த முடிவு! அப்பாவே சொல்லிட்டாரு.. ரவி மோகன் உருக்கம்
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய பெயரை ரவி மோகன் என்று மாற்றிய பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய மகன் குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய மகன் எதற்காக சினிமாவில் இப்போது நடிக்காமல் விலகி இருக்கிறார் என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.
எடிட்டர் மோகனின் மகனான ரவி 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் ஜெயம் ரவி என்ற பெயரோடு அழைக்கப்பட்டு வந்தாலும் தற்போது அவர் நடித்த காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் வெளியாகும் சமயத்தில் திடீரென்று தன்னுடைய பெயரை இனி ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம், ரவி மோகன் அல்லது ரவி என்று அழையுங்கள் என்று அன்பாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

ரவி கடந்த சில வருடங்களாகவே நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரிய அளவில் அவருக்கு வெற்றி பெறாமல் இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்கள் நடித்தாலும் அது அவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் இப்போது அவர் ஒவ்வொரு திரைப்படங்களில் வித்தியாசத்தை காட்டி வந்தாலும் அவருக்கு ஏனோ அது கிளிக் ஆகாமல் இருக்கிறது. இந்த நிலையில் தான் தன்னுடைய பெயர் மாற்றத்தை திடீரென அறிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில் சமீபத்தில் சில மாதங்களாகவே ரவி மோகன் வீட்டு குடும்ப பிரச்சனையும் இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ரவி தன்னுடைய மனைவியான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு இரண்டு வீட்டிலும் சம்மதம் கொடுத்ததும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் திடீரென்று சில மாதங்களுக்கு முன்பு ரவி தான் தன்னுடைய மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்திருந்தார். அதற்கு பிறகு இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பது பலருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் தன்னுடைய மகன் குறித்து ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

அதில் நான் நடிகனாகவில்லை என்றால் இயக்குனராக மாறியிருப்பேன் என்று கூறிய ரவி டிக் டிக் படத்திற்கு பிறகு தன்னுடைய மகன் ஆரவ் சினிமாவில் காணுமே என்கிற கேள்விகளுக்கும் பதில் கொடுத்திருக்கிறார். அதில் அவனது பள்ளிப்படிப்பு பாதிக்க கூடாது என்பதால் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறான்.
ஆனால் அவனுக்கு நடிக்க தான் ரொம்ப ஆசை. எங்க அப்பா அவனும் நானும் நடிக்கும் ஒரு படத்திற்காக சூப்பர் ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார். என்னுடைய இயக்கத்தில் நானும் மகனும் கூறிய சீக்கிரமே இணைந்து நடிப்போம் என்று அதில் பேசியிருக்கிறார். அதோடு தன்னுடைய அண்ணன் பற்றியும் பேசி இருக்கிறார்.
அதில் அண்ணன் மோகன் ராஜாவுடன் படம் பண்ணுவது தான் எனக்கு ரொம்பவும் கம்ஃபர்ட்டபிளா இருக்கும். எங்களுக்குள் சூட்டிங் ஸ்பாட்டில் ஈகோ சண்டையும் நடக்கும். ஆனால் அது படத்துக்காக மட்டுமே இருக்கும். எங்கப்பா எங்களுக்கு சொன்ன ஒரே விஷயம் என்னன்னா நாம வீட்டுல எப்படி வேணா திட்டிக்கலாம். ஆனா படத்தை பாத்துட்டு ஆடியன்ஸ் திட்டக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். அதைத்தான் நாங்க ரெண்டு பேரும் ஃபாலோ பண்ணுறோம் என்று அந்த பேட்டியில் ரவி மோகன் பேசி இருக்கிறார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications