Jayam Ravi- Aarti: 6 மாதங்கள் கழித்து ஆர்த்தியுடன் 10 நிமிடங்கள் பேசிய ஜெயம் ரவி! என்ன பேசினார்?
சென்னை: விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆஜரான நிலையில், ஆர்த்தி வீடியோ கான்பிரன்ஸில் ஆஜரானார். அப்போது விவாகரத்து சட்டத் திட்டத்தின்படி இருவரும் பேசிக் கொண்டனர். சுமார் 10 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.
அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சமரச பேச்சுவார்த்தையை தள்ளி வைக்க வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த விவாகரத்து வவக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி அறிவித்துள்ளார்.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் நேற்று (நவம்பர் 15)விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார். அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இதனையடுத்து நீதிபதி இருவருக்கு இடையான பிரச்சினை தொடர்பாக குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் உத்தரவிட்டார்.
அங்கு எடுக்கபடும் முடிவு தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்யவும் அன்றைய தினமே இரு தரப்பும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கு சமரச தீர்வு மையத்தில் விசாரணைக்கு எடுக்கபட்டது. அப்போது ஆர்த்தி தனக்கு உடல் நிலை சரியில்லாததால் பேச்சு வார்த்தையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
இதையடுத்து, ஜெயம் ரவியும் ஆர்த்தியும் 10 நிமிடங்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவரும் என்ன பேசினார்கள் என தெரியவில்லை. எனினும் ஆர்த்தி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்ட நிலையில், வழக்கு விசாரணையை நவம்பர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications