தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சண்டை? சூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது இதுதான்! நடிகர் ஜீவா ரவி ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்திய தனுஷ் உடன் சிவகார்த்திகேயனுக்கு சண்டை ஏற்பட்டுவிட்டது என்று பரவி வரும் செய்திகளுக்கு நடிகர் ஜீவா ரவி விளக்கம் கொடுத்திருக்கிறார். தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று அதில் கூறியிருக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளிக்திரையில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் பற்றி அடிக்கடி சர்ச்சைகளும் வதந்திகளும் பரவி வருவது வாடிக்கையாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் பேசும் விஷயங்கள் கூட ட்ரோல் ஆகி விடுகிறது. ஆனாலும் அதையெல்லாம் அவர் கண்டு கொள்வதே இல்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து பராசக்தி திரைப்படத்தின் சூட்டிங் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Dhanush Sivakarthikeyan

தனுஷ் செய்த நல்ல செயல்

அதுபோல தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல அவதாரம் எடுத்து அதில் பிசியாக இருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக விஜய் டிவியில் கலக்கி கொண்டு இருந்தபோது அவரை 3 படத்தில் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் செய்து வைத்தது தனுஷ் தான். அதுபோல தனுஷ் தன்னுடைய தயாரிப்பில் எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை கதாநாயகனாகவும் நடிக்க வைத்திருந்தார்.

வளர்த்து விட்ட தனுஷ்

ஆனால் சிவகார்த்திகேயன் வளர்ந்துவிட்ட பிறகு தனுஷை மதிக்கவில்லை இருவருக்கும் இடையில் பிரச்சனை இருக்கிறது, தன்னுடைய வளர்ச்சி குறித்து சிவகார்த்திகேயன் பேசுவதெல்லாம் தனுஷுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் இருக்கிறது என்று சில வதந்திகள் பரவி வருகிறது. இது குறித்து தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 3 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த நடிகர் ஜீவா ரவி சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

Dhanush Sivakarthikeyan

தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நட்பு

அதில் அவர் பேசுகையில், தனுஷ் சார் யார் திறமையா இருக்கிறார்களோ அவர்களை ரசிப்பாரு. சிவகார்த்திகேயன் டேலண்ட் மேல தனுஷ் சாருக்கு நல்ல மரியாதை உண்டு. பர்சனலா சிவகார்த்திகேயனை தனுஷுக்கு ரொம்ப பிடிக்கும். தனுஷை சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா எதிர்நீச்சல் என்ற ஒரு படத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்தது தனுஷ் தான்.

நிஜத்தில் அப்படி இல்லை

அது போல 3 திரைப்படத்தில் எனக்கு சிவகார்த்திகேயன் தான் வேணும்னு கூப்பிட்டது தனுஷ் சார் தான். இவர்கள் இருவர் பற்றி பரவி வரும் வதந்திகள் எல்லாம் சும்மா. பத்து பேர் பத்து விதமாக சொல்லுவார்கள் என்று பழமொழி சொல்லுவார்கள். அதுபோல ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள் ஆனால் சில கூத்தாடிகள் ரெண்டு பட்டால் கூட ஊருக்கே கொண்டாட்டம் அந்த மாதிரி சிலர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அடிச்சுக்கணும் என்று விரும்புவார்கள்.

இருவருக்குள் ஒற்றுமை

அதற்காகவே அவர்கள் இருவரும் சில விஷயங்கள் கூட பண்ணியிருக்காங்க. அதாவது சில மாதங்களுக்கு முன்பு தனுஷும் சிவகார்த்திகேயனும் பேசிய போன் ஆடியோ வைரல் ஆனது. அதில் கூட இருவரும் அவ்வளவு ஜாலியாக பேசி இருப்பார்கள். இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும் இருவரும் விஜய் டிவியில் ஒன்றாக வந்து கூட டான்ஸ் ஆடி இருக்காங்க. தனுஷ் ஆடிய ஸ்டெப்பை சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் ஆடினார்.

தனுஷ் செய்த செயல்

அதுபோல சினிமாவில் நிரந்தர எதிரியும் கிடையாது. நிரந்தர நண்பனும் கிடையாது. ஆனால் இவங்க இருவரை பொறுத்தவரையில் சிவகார்த்திகேயனும் தனக்கு உதவி செய்தவரை மறக்க மாட்டார் அதுபோல தனுஷும் நான் அடையாளப்படுத்திய பையன் என்று சிவகார்த்திகேயன் மீது மதிப்பு உண்டு. அவருடைய வளர்ச்சியை பார்த்து பெருமை தான் படுவாரு.

Dhanush Sivakarthikeyan

வதந்திகளுக்கு விளக்கம்

பாலச்சந்தர் சார் எப்படி கமல்ஹாசன் ரஜினியை அறிமுகப்படுத்தினாங்களோ அதுபோல தனுஷ் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் தன்னை தானே செதுக்கி கொண்டார். அது போல தான் சிவகார்த்திகேயனுடன் நான் ஒரு படத்தில் நடித்த போது அங்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு தனுஷ் வந்தாரு. சிவகார்த்திகேயன் நடிப்பை பார்த்து பாராட்டினது. அதனால அவங்க ரெண்டு பேருக்குள் சண்டை என்று பரவி வரும் வதந்திகளெல்லாம் பொய்தான் என்று ஜீவா ரவி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+