விஜய் எல்லோரும் சொல்ற மாதிரி கிடையாது.. “ஜில்லா” சூட்டிங்கில் நானே பார்த்தேன்.. ஜோ மல்லூரி ஓப்பன் அப்
சென்னை: நடிகர் ஜோ மல்லூரி நடிகர் விஜய் உடன் தான் ஜில்லா திரைப்படத்தில் நடிக்கும் போது நடந்த சம்பவம் ஒன்றை பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். விஜய் குறித்து ஜோ மல்லூரி பேசிய வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
பொதுவாக ஒரு சில நடிகர்கள் செய்யும் உதவிகள் வெளியே யாருக்கும் தெரியாது. ஏன் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரியாது. அது பற்றிய ரகசியங்களை பலர் பல வருடங்கள் கழித்து வெளியே செல்லும்போதுதான் இவரா இப்படி எல்லாம் செய்தது? என்று எல்லோருக்கும் தெரியவரும். அந்த மாதிரி தான் ஜில்லா திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் செய்த உதவி குறித்து நடிகர் ஜோ மல்லூரி நெகிழ்ச்சியுடன் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகராகவும் எழுத்தாளராகவும் இருக்கும் ஜோ மல்லுரிக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது "கும்கி" திரைப்படம் தான். ஆனால் அந்த திரைப்படத்திற்கு முன்பு ஜோ மல்லூரி "விலைமகளின் நாட்குறிப்பு" என்னும் நாவலை எழுதியிருக்கிறார். அதுபோல "தமிழாகாரம்" என்னும் நூலையும் எழுதி இருக்கிறார்.
எழுத்தாளராக இருந்த ஜோ மல்லூரி பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படத்தில் கதாநாயகி லக்ஷ்மி மேனனின் அப்பா கேரக்டரில் ஊர் தலைவராக நடித்திருப்பார். அவருடைய கனீர் என்ற குரல் மற்றும் அவருடைய உடல்வாகு அந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி இருந்தது. அதைத் தொடர்ந்து ஜில்லா திரைப்படம், ரம்மி, தெனாலிராமன் அஞ்சான், அப்புச்சி கிராமம், காக்கா முட்டை, புலி போன்று இன்னும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தொடர்ச்சியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் ஜோ மல்லூரி சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் விஜய் பெரிய கலைஞன். கலைஞன் என்று சொல்றதை விட கூட இருக்கிறவங்க எல்லாருடனும் நன்றாக பழகக்கூடியவர். அதற்கு ஒரு சம்பவத்தை சொல்லியாகணும், ஜில்லா திரைப்படத்தில் நான் அவர்களோடு நடித்திருந்தேன். அப்போ அந்த சூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை என் கண்ணால் பார்த்தேன்.
ஜில்லா திரைப்படத்தில் நடிக்கும் போது விஜய்க்கு ஒரு அசிஸ்டன்ட் இருந்தாரு. அவர்தான் விஜய்க்கு என்ன தேவை என்றாலும் ஓடி ஓடி செய்வாரு. அந்த அசிஸ்டன்ட் தங்கச்சிக்கு ஆபரேஷன் அதனால் அவர் ரெண்டு நாள் வேலைக்கு வரல. அப்போ சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த விஜய் அந்த அசிஸ்டன்ட் பெயரை சொல்லி ஏன் அவரை காணவில்லை என்று கேட்க, அங்கிருந்தவர் அவருடைய தங்கச்சிக்கு ஆபரேஷன் என்று சொல்லி இருந்தார்.
உடனே அப்படியா என்று கேட்டு விட்டு ஒரு எக்ஸ்பிரஷனையும் முகத்தில் காட்டாமல் சூட்டிங் சென்று விட்டார். பிறகு சாயங்காலம் போன் வருகிறது..., விஜய் ஆள் அனுப்பி அந்த அசிஸ்டன்ட் தங்கச்சி அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடலில் பணம் கட்டி இருக்காரு என்று சொன்னாங்க. இப்படி யாராவது எளிமையா உதவி செய்ய முடியுமா? யாருக்குமே அவர் உதவி செஞ்சது தெரியாத வகையிலேயே அவர் உதவி செய்திருக்கிறார்.
அதுபோல சூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் செய்ய மாட்டார். யாராவது அவரிடம் சென்று உங்களைப் பற்றி அந்த நபர் அப்படி சொன்னார் என்று சொன்னால் அப்படியா என்று சிரித்து விட்டு கடந்து போய்விடுவார். அதுபோல தன்னை பற்றி இன்னொரு நபர் இப்படி பேசி இருக்கிறாரே என்று யாரிடமும் புலம்பி கொண்டிருக்கவோ அது குறித்து கோபத்தை காட்டியதோ கிடையாது. நான் பார்த்த வரையில் விஜய் யாரைப் பற்றியும் தேவையில்லாமல் பேசியதும் கிடையாது.
எல்லோரும் சொல்லுற விஜய்க்கும் நம்ம நேரில் பார்க்கிற விஜய்க்கும் 180 டிகிரி வித்தியாசம் இருக்கிறது. விஜய் பற்றி பலருக்கும் அவருடைய உண்மையான கேரக்டர் தெரியாது. அவர் உடன் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும்தான் அவரைப்பற்றி தெரியும், என்று ஜோ மல்லூரி நடிகர் விஜய் குறித்து பெருமையாக அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications