மோகன்லாலுடன் சாப்பிட மறுத்த விஜய்.. ஆனால் நேரில் செய்த செயல் நெகிழ்ச்சியானது! பிரபலம் சொன்ன தகவல்
சென்னை: நடிகர் விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து ஜில்லா திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது மோகன்லாலோடு விஜய் சாப்பிட மறுத்துவிட்டார், அதற்கு காரணம் இதுதான் என்று சில தகவல்களை நடிகர் ஜோ மல்லூரி கூறியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சமூக வலைத்தளத்தில் நடிகர் விஜய் குறித்த செய்திகள் தான் இப்போது அதிகமாக இருக்கிறது. விஜய் சில வருடங்களாகவே பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து அவர்களை உற்சாகமூட்டி வருகிறார். இந்த வருடத்தில் சில தினங்களுக்கு முன்புதான் விஜய் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசளித்திருந்தார்.

அதுபோல விஜய் அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கி இருக்கும் நிலையில் அரசியல் பிரமுகர்களும் நடிகர்களும் விஜய் குறித்து பல தகவல்களை பேசி வருகிறார்கள். இந்த நிலையில் ஜில்லா திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த செயல்கள் குறித்து நடிகர் ஜோ மல்லூரி பேட்டி ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நடிகர் விஜய் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டாரானா மோகன்லால் இருவரும் இணைந்து 2014 ஆம் ஆண்டு ஜில்லா திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதிலும் "பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோழா" என்ற பாடல் பெரிய அளவில் விஜய் மற்றும் மோகன்லால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அதிலும் "சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுதா" என்ற வரிகள் பலருடைய whatsapp ஸ்டேட்டஸ்களில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் அப்பா மகன்களாக நடித்திருப்பார்கள்.
திரைப்படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் இவர்கள் இருவருக்குள்ளும் பாசமும் நட்பும் அப்படித்தான் இருந்தது என்று ஜோ மல்லூரி கூறியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் ஜில்லா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது என்னையும் மோகன்லால் குடும்பத்தையும் விஜய் தன்னுடைய வீட்டிற்கு இரவு விருந்துக்கு கூப்பிட்டு இருந்தார்.
நாங்கள் இரவு 7 மணி அளவில் விஜய் வீட்டிற்கு போய் இருந்தோம். அங்கு அவருடைய மனைவி, இரண்டு பிள்ளைகள் எங்களை வரவேற்று பேசினார்கள். அப்போது சாப்பிடுவதற்கு டைனிங் டேபிளில் அமர்ந்தவுடன் விருந்தினர்களான எங்களுக்கு மட்டும்தான் சாப்பாடு பரிமாறப்பட்டது. இதை பார்த்தது மோகன்லால் விஜயை தன்னோடு சாப்பிட வருமாறு கூப்பிட்டார். ஆனால் அதற்கு விஜய் அன்பாக மறுப்பு தெரிவித்து மோகன்லாலுக்கு தன் கையாலேயே உணவை பரிமாறினார்.
விஜய் எப்போதுமே தன்னுடைய விருந்தினர்கள் மீது அதிகமான அக்கறை செலுத்தும் பழக்கம் கொண்டவராக இருக்கிறார். நான் கூட அந்த நேரத்தில் நீங்களும் சாப்பிடுங்கள் விஜய் எல்லோரும் சாப்பிடும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். ஆனால் விஜய்க்கு தான் சாப்பிடுவதை விட மற்றவர்களுக்கு உணவு பரிமாறி அக்கறையுடன் உபசரிப்பு செய்வதில் தான் அதிகமான ஆர்வம்.
அவர் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டிலும் நல்ல மனிதர் என்று விஜயை குறித்து எழுத்தாளரும் நடிகருமான ஜோ மல்லூரி பகிர்ந்து இருக்கிறார். ஜோ மல்லூரி விஜயோடு புலி மற்றும் ஜில்லா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதுபோல அவர் ஒரு மிகப்பெரிய எழுத்தாளராக இருந்தாலும் முதல் முதலாக சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். இப்ப வரைக்கும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜோ மல்லூரி பேசிய வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications