Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடவுளும் என்னை தண்டிச்சுட்டார்! நீங்களும் இப்படியா? அவ்வளவு வேதனை.. “காதல்” சரவணன் மனைவி எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடந்த சரவணன் மஞ்சப்பை திரைப்படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். ஆனால் அதற்கு பிறகு தனக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ஆனாலும் கிடைத்த வாய்ப்புகளை நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறிய காதல் சரவணன் சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் தன்னுடைய மனைவியோடு கலந்து கொண்டிருக்கிறார்.

அதில் காதல் சரவணனின் மனைவி "மலர்" தங்கள் இருவருக்கும் எப்படி திருமணம் நடைபெற்றது என்பது பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார். அதோடு தன்னுடைய கணவர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

actor Kadhal Saravanan Wife malar Interview

அந்த வகையில் காதல் சரவணனின் மனைவியின் பெயர் மலர். அவர் கால் ஊனமுற்றவராக இருந்திருக்கிறார். அவரை பெண் பார்ப்பதற்காக காதல் சரவணனின் நண்பர் போயிருக்கிறார். அவரோடு துணை மாப்பிள்ளையாக காதல் சரவணனும் போய் இருக்கிறார். ஆரம்பத்தில் மலருக்கு திருமண வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கிறது. நாம் உடலில் குறைபாடுடன் இருக்கிறோமே, நம்மை திருமணம் செய்பவர் உண்மையில் நம்மளை சந்தோஷமாக பார்த்துக் கொள்வாரா? என்ற பயத்தோடு இருந்திருக்கிறார்.

பிறகு வீட்டில் உள்ளவர்கள் சொல்லி பொண்ணு பார்க்க வர சொல்லி இருந்த நிலையில் காதல் சரவணன் நண்பர் இவரை பெண் பார்த்துவிட்டு போய்விட்டு பிறகு நகை பிரச்சனையில் அந்த திருமணம் நின்று போய் விட்டதாம். இந்த விரக்தியில் மலர் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு டீச்சர் வேலைக்கு போய் விட்டாராம். அங்கே டீச்சராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது சில பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது.

அந்த கோபத்தில் காதல் சரவணனுக்கு ஃபோன் போட்டு,"என்னை கடவுளும் தண்டிச்சுட்டார்; நீங்களுமா இப்படி பண்ணுனீங்க? என்று வருத்தத்தோடு கேட்டிருக்கிறார். நீங்களும் அந்த மாப்பிளையோடு வந்திருந்தீங்களே என்னுடைய நிலைமை எல்லாம் தெரிஞ்சு தானே பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க. அப்புறம் எதற்காக என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனாங்க என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு காதல் சரவணன் நான் ஒன்னு சொன்னா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களா? என்று கேட்டுக்கொண்டு நானே உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். முதலில் பயப்பட்ட மலர் பிறகு சரி என்று சொல்லி இருக்கிறார். பிறகு இரண்டு வீட்டின் சம்மதம் இல்லாமல் தான் இவர்கள் திருமணம் செய்து இருக்கிறார்கள். இவரை திருமணம் செய்யும்போதும் மலர் ரொம்பவே பயப்பட்டாராம்.

நாம் ஒரு நடிகரை திருமணம் செய்தால் அவருக்கு நம்மால் கஷ்டம் வருமா? அவர் வெளியிடங்களுக்கு செல்லும்போது நம்மை கூட்டிட்டு போவதற்கு அவர் அவமானப்பட வேண்டியது இருக்குமோ என்று பயந்து காதல் சரவணனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு காதல் சரவணன் நான் உன்னை மனப்பூர்வமாக திருமணம் செய்து கொள்கிறேன். எந்த இடத்திற்கு போனாலும் நீ இல்லாமல் போக மாட்டேன் என்று சொல்லி திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அதுபோலத்தான் இருக்கிறாராம்.

எந்த உறவினர் வீட்டு பங்க்ஷனாக இருந்தாலும் சரி, சினிமா சம்பந்தமான ஃபங்ஷனாக இருந்தாலும் சரி என்னுடைய மனைவி இல்லாமல் நான் எங்கேயும் போகமாட்டேன். அவருடைய உடல் தான் குறையாக இருக்கிறது தவிர அவருடைய மனதில் குறை கிடையாது என்று காதல் சரவணன் கூறியிருக்கிறார். அதுபோல அவருடைய மனைவி பேசுகையில், எங்களுக்கு இப்போது இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

அதிலும் மூத்த மகன் பிறந்த போது நான் அதிகளவில் சந்தோஷப்பட்டேன். ஏனென்றால் என்னுடைய குடும்பத்தில் பலர் உடலில் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் என்னுடைய குழந்தைக்கும் ஏதாவது ஆகிவிடக்கூடாது என்று நான் பயந்து கொண்டே இருந்தேன். டாக்டர் அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று சொல்லி இருந்தார். ஆனாலும் என்னுடைய மனதிற்குள் பயம் இருக்கத்தான் செய்தது.

ஆனால் குழந்தை பிறந்த போது குழந்தையை பார்த்ததும் நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். அதுபோல எனக்கு பெண் குழந்தைகள் தான் ரொம்பவும் பிடிக்கும். அதற்காகத்தான் நான் இன்னொரு குழந்தையை பெற்றேன். ஆனால் அதுவும் ஆம்பள பிள்ளை என்பதால் தான் முதலில் சில நாட்கள் அழுது கொண்டு இருந்தேன்.

பிறகு என்னுடைய மகன்கள் இப்போது எங்களைப் பார்த்துக் கொள்வதை பார்க்கும் போது இதற்கு தான் கடவுள் நமக்கு ஆம்பள பிள்ளைகளை தந்தாரா என்று கூட எனக்கு தோன்றுகிறது என்று உருக்கமாக கண்ணீரோடு பேசி இருக்கிறார். அதோடு நான் டீச்சர் ட்ரைனிங் படிக்கும்போது 80 மாணவிகளோடு சேர்ந்து படித்தேன். எல்லோருமே என்னைப் போல உடலில் குறைபாடு உள்ளவர்கள். ஆனால் நான் இன்று சந்தோஷமாக இருக்கிறேன்.

என்னை போன்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்த்தால் கிடையாது. ஆனால் அவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. எனக்கு கிடைத்த மாதிரி ஒரு வாழ்க்கை அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் உருக்கமாக தன்னுடைய ஆசையை தெரிவித்திருக்கிறார். இதற்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள். அதோடு காதல் சரவணனை பலரும் பாராட்டியும் வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+