கமல்ஹாசன் கையில் இருக்கும் க்யூட்டி.. இந்த வாரம் பிக்பாஸின் கோர்ட் வேர்ட் இதுதானா?குவியும் கேள்விகள்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் கையில் பேக்கோடு அதற்குள் ஒரு நாய்க்குட்டியை வைத்துக்கொண்டு நாய்க்குட்டி பேக் என்று புது போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
கமல்ஹாசன் வெளியிட்ட புகைப்படத்திற்கு குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

குழம்பும் ரசிகர்கள்
நடிகர் கமல்ஹாசன் பல்வேறு கேரக்டரையும், முகங்களையும் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் தான் சமூக வலைத்தளத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. இந்த புகைப்படங்கள் தான் பல்வேறு விதமாக யோசிக்க வைத்து இருக்கிறது. எதார்த்தமாக கமல்ஹாசன் புகைப்படம் வெளியிட்டாரா? அல்லது இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெளியேற்றம் அல்லது யார் சேவ் ஆகிறார் என்பதை குறித்து மறைமுகமாக இப்படி ஒரு புகைப்படம் வெளியிட்டாரா? என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலர் மண்டையை பித்து கொண்டு கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.

பிடித்த விலங்குகள்
அரசியல்வாதியாகவும், நடிகராகவும், பாடகராகவும், இயக்குனராகவும், எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் நான் எனக்கான வேலையை எதுவும் சளிப்போடு செய்வதில்லை என்று பிசியாக இருந்தாலும் தனக்குரிய என்டர்டைன்மெண்டில் கிடைக்கும் நேரத்தில் ஈடுபடுவது கமல்ஹாசனின் வழக்கமாக இருந்தாலும் இன்று ஒரு குதர்க்கமான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறாரே என்பதுதான் பலருடைய கேள்வி. நடிகர் கமல்ஹாசனுக்கு ஆடு மற்றும் நாய் குட்டி பிடிக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் தற்போது நாய்க்குட்டியோடு புகைப்படம் வெளியிட்டிருப்பது பற்றி பிக் பாஸ் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை மளமளவென அதிகரித்து வருகின்றனர்.

இது எதற்காக இருக்கும்
அதில் ரசிகர்கள் பலரும் கெஸ் பண்ணுவது இந்த வாரம் சேவ் செய்யும் போட்டியாளர்களின் பெயரை சிம்பாலிக்காக கமல் எப்படி சொல்கிறார் என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அப்படி என்றால் இந்த வாரம் ஏடிகே சேவ் என்பதுதான் இதுவாக இருக்க வேண்டும் என்று ஒருத்தரப்பினர் கூற, இல்லை இது வெளியேற்றத்திற்கான சிம்பாலிக்கு அதாவது கதிரவன் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போது தன்னுடைய நாய்க்குட்டியை தன்னுடைய நண்பரிடம் கொடுத்து விட்டு வந்தேன் என்று கூறியிருந்தார். அப்படியானால் இது கதிரவனுக்கு கொடுக்கும் சிம்பாலிக் தான் என்று அடித்து கூறுகின்றனர்.

என்னம்மா யோசிக்கிறாங்க
இன்னும் ஒரு சில ரசிகர்கள் அதுவெல்லாம் இல்லை கமலுக்கு பிடித்தது நாய்க்குட்டி தான், Dog என்கிறதை திருப்பி போட்டால் God என்று வருகிறது. அதனால் தான் கமல் கடவுள் என்னோடு இருக்கிறார் என்று இப்படி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறாரா? என்று அவரை குறித்து அரசியல் ரீதியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இதுவெல்லாம் இருக்கவே இருக்காது கமல்ஹாசன் கையில் வைத்திருக்கும் பெட் அனிமல் நாய்க்குட்டி அதனால் இந்த வாரம் வீட்டிற்குள் செல்லமாக இருக்கும் ஷிவின் மற்றும் ரச்சிதா இவர்களில் யாரேனும் ஒருவர் வெளியே செல்வார்கள் என்பதை தான் இப்படி தெரிவித்திருக்கிறார் என்று சொல்லிருக்கின்றனர்.

உண்மை தெரியலையே
இன்னொரு தரப்பு ரசிகர்கள் கமல் கையில் இருக்கும் நாய்க்குட்டி, நாய் சேகர் என்று குறிப்பிடுகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் நாய் சேகர் கெட்டப் போட்டது மைனா தான் அதனால் மைனா தான் இந்த வாரம் வெளியேறுவார் அதற்காகத்தான் கமல் இப்படி சிம்பல் காட்டுகிறார் என்று கருத்து கூறி வருகிறார்கள். அடித்து பிடித்துக் கொண்டு கருத்துக்களை குவித்து வந்தாலும் இதைக் குறித்து கமல் எந்த ஒரு பதிலும் கூறாமல், எனது நாய் பை என்று மட்டும் தான் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications