திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கமல்ஹாசனின் அண்ணன்.. மகள் சுஹாசினி வெளியிட்ட பதிவு
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அண்ணனான சாருஹாசன் தீபாவளிக்கு முந்தைய நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் செய்தியை அவருடைய மகள் சுஹாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னுடைய அப்பாவிற்கு என்ன ஆனது என்ற தகவலையும் தெரிவித்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
நடிகர் சாருஹாசன், சந்திரஹாசன், கமல்ஹாசன் மூவருமே அண்ணன் தம்பி தான். மூவரும் சினிமாவில் பல ஆண்டுகளாக தங்களுடைய திறமையை காட்டி கொண்டிருக்கின்றனர். அதிலும் கமல்ஹாசனை சின்ன வயதிலிருந்தே அவருடைய அண்ணன் சாருக்ஹாசன் மற்றும் அவருடைய மனைவி தான் வளர்த்து வந்தார்கள் என்று பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை செய்யப் போவதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் சாருஹாசனுடன் மருத்துவமனையில் அவர் மகள் சுஹாசினி மணிரத்தினம் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சாருக்ஹாசன் மருத்துவமனையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை சுஹாசினி வெளியிட்டார்.
இப்படியும் மனுஷங்க இருப்பாங்களா? விஜய் டிவி நடிகையை கல்யாணம் செய்த சன் டிவி நடிகர் ஆதங்க பதிவு
அதை தொடர்ந்து சில நாட்களிலேயே தனது அப்பாவான சாருஹாசனின் 93 வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். அப்போது சாருஹாசன் அவருடைய மனைவியோடு பிறந்தநாள் கேக் வெட்டி மகிழ்ந்திருந்தார். இந்த நிலையில் இன்று சுஹாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தீபாவளிக்கு முந்தைய இரவு திடீரென எங்களுக்கு மிகப்பெரிய சங்கடம் ஏற்பட்டது.

அப்பா சாருஹாசன் உடல்நிலை குறைவு காரணமாக அவதிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தோம். தீபாவளி முழுக்க இங்கேதான் கழிந்தது. ஆனால் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்தால் அவர் குணமாகிவிடுவார் என மருத்துவர்கள் கூறுகிறார்கள் என்று சுஹாசினி பதிவிட்டுள்ளார்.
தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் சிறப்பு நிகழ்ச்சிகள்.. முழு விபரம் நோட் பண்ணிக்கோங்க
அதற்கு ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அதுபோல நடிகை குஷ்பூ, நான் அறிந்த வலிமையான மனிதர் சாருஹாசன். அவரது நேர்மறை அதிர்வுகள் சரி செய்ய முடியாத வகையில் தொற்றும் தன்மை கொண்டவை. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறியிருக்கிறார்.
ராதிகா சரத்குமார், விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல நடிகர் மாதவன், அவர் போராளி கொஞ்ச நேரத்தில் வீட்டிற்கு வந்து சகஜமாக இருப்பார் என்று சொல்லி இருக்கிறார். நடிகர் ரகுமான் நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இப்படியாக பல பிரபலங்களும் சாருஹாசன் நலமுடன் வீட்டிற்கு விரைவில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக தெரிவித்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications