கமலை விட அதிக ரிஸ்க் எடுத்தது நான் தான்.. எனக்கு “அந்த” புத்தி எல்லாம் கிடையாது.. கருணாஸ் ஆதங்கம்
சென்னை: நடிகர் கருணாஸ் பல திரைப்படங்களில் நடித்து, பாடியிருந்தாலும் சில திரைப்படங்களை அவரே ப்ரொடியூஸ் செய்திருக்கிறார். ஆனால் சினிமாவில் கமல்ஹாசனை விட அதிக ரிஸ்க் எடுத்தது நான்தான் எனவும் கமல்ஹாசன் அவர் தகுதிக்கு தகுந்த மாதிரி ரிஸ்க் எடுத்தால் நான் என்னுடைய தகுதிக்கு தகுந்த மாதிரி ரிஸ்க் எடுத்து இருக்கிறேன் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் கருணாஸ் காமெடி நடிகராக தன்னுடைய வாழ்க்கையை சினிமாவில் தொடங்கி இருந்தாலும் நந்தா திரைப்படத்தின் மூலமாகத்தான் அவர் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு காதல் அழிவதில்லை, பாபா, வில்லன், திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த கருணாஸிற்கு திண்டுக்கல் சாரதி போன்ற படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

அந்த படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் கலக்கி இருப்பார். வெற்றி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கருணாஸ் சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். அதிகமாக சினிமாவில் இப்போது அவர் இல்லை. ஆனால் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அதே நேரத்தில் தன்னுடைய சொந்த நிலத்தில் இயற்கை விவசாயத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் சினிமாவில் சம்பாதிச்ச பணத்தை சினிமாவிலேயே இழந்தேன். எல்லாரும் கமலஹாசனை தான் ரொம்ப ரிஸ்க் எடுக்கிறார் என்று சொல்லுவாங்க. ஆனால் நான் அவரை விட அதிகமாக ரிஸ்க் எடுத்து இருக்கிறேன். கமல்ஹாசன் அவருடைய லெவலுக்கு ரிஸ்க் எடுத்து இருக்கிறார் என்றால், அவர விட ரொம்ப ரொம்ப கம்மியான சக்தி உடைய நான் அவரை விட அதிகமா ரிஸ்க் எடுத்து இருக்கிறேன்.
48 படம் டிஸ்ட்ரிபியூட் செய்து இருக்கிறேன். 4 படம் நானே சொந்தமா எடுத்து இருக்கிறேன். இன்னொருத்தர் எடுத்த படம் கற்றது தமிழ். அந்த படத்தை நான் வாங்கி ரிலீஸ் பண்ணினேன். நான் அன்னைக்கு ரிஸ்க் எடுத்து ரிலீஸ் பண்ணலன்னா அந்த படத்தை படம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்திருக்குமா? அந்த படத்தை வைத்துதானே யுவன் சங்கர் ராஜா மியூசிக் பலருடைய போனில் இப்ப வரைக்கும் ரிங்டோனாக இருக்கிறது. அந்த படம் நடிகைக்கு அவார்ட் எல்லாம் கிடைத்திருக்குமா? இல்ல அந்தப் படை இயக்குனர் ராம் வெளியே தெரிந்திருப்பாரா?
அந்த படத்தை நான் ரிலீஸ் செய்ததால் எனக்கு ஒரே நாளில் 2 கோடி 60 லட்சம் நஷ்டம் ஆச்சு. நான் அவ்வளவு பெரிய வசதி உள்ளவன் கிடையாது. சினிமாவில் சம்பாதிச்சா பணத்தை எல்லாம் சினிமாவில் போட்டேன். ஒரே நாளில் நான் கடன்காரன் ஆனேன். கடன்காரங்க எனக்கு போன் பண்ணும் போது நான் மத்தவங்க போல போனை எடுக்காம எல்லாம் இல்ல. அந்த புத்தி எனக்கு கிடையாது. போனை எடுத்து நான் எல்லோரிடமும் பேசி விடுவேன்.
இப்போதைக்கு கொஞ்சம் சிக்கல் கொஞ்சம் நாள் கழித்து தருகிறேன் என்று சொல்லுவேன். அந்த நேரத்தில் கூட என்னுடைய மனைவியிடம் நம்முடைய வீட்டை விற்று கடனை கொடுத்து விடலாம் என்று கேட்டேன். அதற்கு அவர் இது நீங்க சம்பாதிச்சு வாங்கினது தானே, உங்களுடைய தன்மானம் தான் எனக்கு முக்கியம். உங்களுடைய விருப்பம் போல நீங்க செய்ங்க என்று சொன்னாங்க. அந்த அன்பு தான் எல்லாருக்கும் வேணும் என்று அந்த பேட்டியில் கருணாஸ் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications