சிவகார்த்திகேயன் தான் பேவரைட்.. காதல் திருமணத்திற்கு சப்போர்ட் செய்தது இவர்தான்! கிங்காங் மகள் மகிழ்ச்சி
சென்னை: நடிகர் கிங் காங்கின் மகள் கீர்த்தனாவிற்கும் அவருடைய காதலர் நவீனுக்கும் நேற்று காலை ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. அதில் ஒரு சில நடிகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியிருந்தனர். அதற்கு பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சி அசோக் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வரவேற்பில் சினிமா பிரபலங்கள் முதல் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தன்னுடைய திருமணத்தில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து மணப்பெண்ணான கீர்த்தனா பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று முதல் சோசியல் மீடியாவில் நடிகர் கிங்காங் மகள் திருமண செய்தி பற்றி தான் பேசப்பட்டு வருகிறது. கிங்காங் சில மாதங்களாகவே தன்னுடைய மகள் திருமணத்திற்காக முன்னணி சினிமா நடிகர்கள், நடிகைகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு நேரில் சென்று பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஒரு சிலர் மட்டும் தான் திருமண பங்க்ஷனில் கலந்து கொண்டனர். இதனால் கிங்காங் குறித்த விமர்சனங்கள் அதிகமாக வந்தது.

ஆனாலும் மாலையில் ரிசப்ஷனில் பலர் கலந்து கொண்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர். ஒரு சில நடிகர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படியான நிலையில் இந்த திருமண ஏற்பாடு குறித்து கிங்காங் மகள் கீர்த்தனா சினிசமூகம் youtube சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, எங்க அப்பா சினிமா ஷூட்டிங் கூட எங்களை கூட்டிட்டு போக மாட்டார். இந்த ஆனால் இன்று இந்த அளவிற்கு சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் எல்லாம் என்னுடைய திருமணத்திற்கு வருவதை நினைக்கும் போது எனக்கு பதட்டமாய் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.
அதோடு நடிகர் சிவகார்த்திகேயன் குறித்தும் பேசியிருந்தார். அதாவது என்னுடைய அப்பா எஸ் கே அண்ணாவுக்கு பத்திரிக்கை வைத்தது தான் எனக்கு ரொம்ப சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அவர்தான் என்னுடைய ஃபேவரைட். அவருக்கு அப்பா இன்விடேஷன் கொடுக்கப் போறாருன்னு எனக்கு தெரியாது. அது போல விஜய் சேதுபதி சாரும் ரொம்பவும் பிடிக்கும் என்று கீர்த்தனா சொல்லி இருக்கிறார்.
அதோடு தன்னுடைய காதல் கதை பற்றி அவர் பேசும்போது பி,காம் எம்பிஏ படிக்கும்போது கீர்த்தனாவும் அவருடைய கணவர் நவீனும் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த விவரம் தன்னுடைய தங்கை வழியாக பாட்டிக்கு மட்டும் தெரிய வந்திருக்கிறது. ஆரம்பத்தில் பாட்டி திட்டினாராம். ஆனால் பெற்றோர்களிடம் இதை சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறார்.
பிறகு கடந்த வருஷம் அவர் இறப்பதற்கு முன்பு தன்னுடைய அப்பா கிங் காங்கிடம் சொல்லி கன்வின்ஸ் பண்ணுனது அதே பாட்டி தானாம். அவர் இறந்து ஒரு வருட திதி வருவதற்குள் திருமணம் செய்து விட வேண்டும் என்று தான் கிங்காங் இவ்வளவு பெரிய முயற்சி எடுத்து திருமணத்தை நடத்தி இருக்கிறாராம். அது போல தன்னுடைய அப்பா இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் என் கல்யாணத்திற்கு ஆக செலவு செய்கிறார் என்று மட்டும் எனக்கு தெரியும், என்னுடைய திருமணத்தை இந்த அளவு பிரம்மாண்டமாக என்னுடைய அப்பா நடத்துவார் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று கீர்த்தனா நெகிழ்ச்சியுடன் பேசி இருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications