Actor King Kong: முதலமைச்சர் உருவத்தை பார்க்கல! நேர்ல இதைத்தான் சொன்னாரு! நெகிழ்ந்த கிங்காங்
சென்னை: நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனாவின் திருமணம் நேற்று நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் மு க ஸ்டாலினும் கலந்து கொண்டார். இது குறித்து அவருக்கு நன்றி தெரிவித்து கிங் காங் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கிங் காங் தன்னுடைய மகள் கீர்த்தனாவின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக செய்திருந்தார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகரான கிங்காங் சமீபத்தில் பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. ஆனாலும் தன்னுடைய மகள் திருமணத்தை தான் பெரிதாக நடத்த வேண்டும் என்று சினிமா துறையில் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வைத்திருந்தார். அதுபோல முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்திருந்தார்.

கிங்காங் பலருக்கு ஓடி ஓடி பத்திரிக்கை வைத்திருந்தாலும் ஒரு சில பிரபலங்கள் மட்டும்தான் கலந்து கொண்டிருந்தனர். அதுபோல முதலமைச்சர் முக ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மக்கள் மத்தியில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தன் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டது குறித்து கிங்காங் நெகிழ்ச்சியாக ஒரு வீடியோவில் பேசி வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் பேசும்போது, முதலமைச்சர் சார் என்னுடைய வீட்டிற்கு வந்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. அவரிடம் நேரில் சந்தித்து திருமண பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சினிமா பிரபலங்கள் பலருக்கும் நான் நேரில் சென்று அழைப்பு வைத்திருந்தேன். ஆனால் முதலமைச்சருக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும், அவர் வருகிறாரோ இல்லையோ ஆனால் நாம் இன்விடேஷன் கொடுக்க வேண்டும் என்றுதான் நான் அவருடைய அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டு காத்திருந்தேன்.
அப்போது அவர் ஒரு மீட்டிங்கில் இருந்தார். பிறகு என்னை மாலையில் சந்தித்தார். சந்தித்தபோது நான் அன்னைக்கு இன்னொரு ஃபங்ஷனில் இருக்கிறேன் முடிந்த வரைக்கும் வரப் பார்க்கிறேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் என்னுடைய மகள் கல்யாணத்தன்று அவர் தஞ்சாவூரில் ஒரு பங்க்ஷனில் இருந்தார். பிறகு அந்த ஃபங்ஷனை முடித்துவிட்டு திருச்சி வந்து அங்கிருந்து பிளைட்டில் சென்னைக்கு வந்து என்னுடைய மகள் கல்யாணத்திற்கு வந்திருக்கிறார்.

இது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியான செய்தி. அவர் வரும்போது செய்தி எனக்கு மாலையில் தான் தெரியும். அவர் வருகிறார் என்றதும் எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. அவர் உருவத்தை பார்த்து வரல உண்மையான மனசை பார்த்து வந்திருக்கிறார். முதலமைச்சருக்கு நானும் என்னுடைய குடும்பமும் நன்றி சொல்கிறோம். உண்மையிலேயே சாதாரண மக்களின் ஒருவராக முதலமைச்சர் இருக்கிறார் என்று நிரூபித்திருக்கிறார் என அந்த வீடியோவில் கிங்காங் நிகழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications