ஆனந்தம் சீரியல் ‘அபிராமி’ நினைவிருக்கா? அவரை பற்றி மகன் நடிகர் கிஷன் தாஸ் போட்ட போஸ்ட்.. குவியும் ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆனந்தம் சீரியலில் அபிராமியாக நடித்த நடிகை பிருந்தா தாஸ் மகன் நடிகர் கிஷன் தாஸ் தன்னுடைய அம்மாவோடு எடுத்த புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

தற்போதுள்ள சீரியல்களில் நடிக்கும் வில்லிகள் பார்த்தாலே பதறும் வகைகளில் தான் இருக்கிறார்கள். அதுவும் தான் வில்லி என்று மக்களை நம்ப வைப்பதற்காக எப்போதும் கிலோ கணக்கில் நகைகளை உடம்பில் சுமந்து கொண்டு, பட்டு புடவையில் கெத்தாக பேசுகிறார்கள்.

sun tv brinda das kisan das

அதோடு கணவனிடமும் குடும்பத்தில் இருக்கும் ஆண்களிடமும் திமிராக பேசிக் கொண்டிருப்பது, வீட்டு மருமகள்களை மரியாதை இல்லாமல் நடத்துவதும் தான் வில்லிகளின் ட்ரேட் மார்க்காக இருக்கிறது. ஆனால் 90ஸ் கிட்ஸ்களில் பேவரைட் சீரியலில் ஒன்றான ஆனந்தம் சீரியலில் அமைதியின் சொரூபமாக இருந்து இவரா வில்லி என்று சொல்லும் வகையில் தான் பிருந்தா தாஸ் மிரட்டிக் கொண்டிருந்தார்.

எந்த பந்தாவும், ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக இருந்தாலும் அதற்குள் ஆபத்து இருக்கிறது என்று சொல்வது போல அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பிருந்தா பொருந்தி இருந்தார். ஆனால் பிருந்தா ஆனந்தம் சீரியலுக்கு முன்பே நடித்தது நம் குடும்பம் என்ற சீரியல் மூலமாகத்தான் நடிகையாக அறிமுகமானார்.

sun tv brinda das kisan das

நம் குடும்பம் சீரியல் டிடி மெட்ரோவில் ஒளிபரப்பப்பட்டது. அதுபோல சீரியல் நடிகை பிருந்தா நடிகையாக மட்டுமல்லாமல் பரதநாட்டிய நடன கலைஞரும் கூட, அதுபோல டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சினிமா தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல திறமையாளராக விளங்கும் பிருந்தா தாஸுக்கு இன்று வரை அடையாளமாக இருப்பது ஆனந்தம் சீரியலில் வில்லி தான்.

பல வருடங்களாக சின்னத்திறை மெகா தொடர் இன்று பிஸியாக கலக்கி கொண்டு இருந்த பிருந்தா தாஸ் ஒரு கட்டத்தில் நடிப்பிலிருந்து விலகி "ஹாய் டா" என்ற படத்தின் மூலமாக இயக்குனர் வரிசையில் இணைத்தார். அந்த திரைப்படத்தில் பலருக்கும் பரீட்சையமான சின்னத்திரை நடிகர்களை நடிக்க வைத்திருந்தார்.

sun tv brinda das kisan das

அதைத் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனத்திலும் வேலை செய்திருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் குறுகிய காலத்திற்குள் முடிவடைவது போன்ற கதை அம்சம் கொண்ட சீரியலில் நான் நிச்சயமாக நடிப்பேன் ஆனால் நீண்ட நாட்கள் நடிக்க வேண்டும் என்றால் என்னால் முடியாது என்று பிருந்தா பேட்டியில் கூறி இருக்கிறார்.

அதுபோல பிருந்தாவின் மகன் கிஷன் தாஸும் பலருக்கும் பரீட்சயமானவர்தான். ஆரம்பத்தில் ஆங்கராக தன்னுடைய பயணத்தை தொடங்கி அதற்கு பிறகு ஷார்ட் பிலிம், விளம்பரங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான கிஷன் தாஸுக்கு அந்த படம் நல்ல பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது.

அதைத்தொடர்ந்து ஆர் ஜே பாலாஜியோடு சேர்ந்து சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்திருந்தார். அதுபோல பிருந்தா தாஸ் மற்றும் அவருடைய மகன் கிஷன் தாஸ் சேர்ந்து "மீட் அவர் மம்மி" என்று ஷார்ட் பிலிம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் கிஷன் தாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பலரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறது.

அதாவது அந்த புகைப்படத்தில் தன்னுடைய அம்மாவோடு இருக்கிறார். அதில் "இந்த 2024 வது வருடம் எனக்கு நிறைய மோசமான சூழ்நிலையை கொடுத்தது. ஆனால் எந்த இடத்திலும் நான் தனியாக போராடவில்லை. எனக்கு துணையாக இவர்கள் இருக்கிறார்கள்" என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பாலா ஏன் இப்படி பண்ணுன? என் மகனை வைத்தே என்னை கேவலப்படுத்திட்டியே! நடிகர் சிவகுமார் ஆதங்கம்
கிஷன் தாஸுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும் என்று பலர் வாழ்த்து கூறுகிறார்கள். அதோடு மீண்டும் பிருந்தா நடிக்க வரவேண்டும் என்பதும் பலருடைய கமெண்டாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+