சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரியாகும் சன் டிவி நடிகர்.. இந்த கேரக்டர் தானா? சூடு பிடிக்கும் கதை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் புதியதாக சன் டிவியில் நடிக்கும் நடிகர் ஒருவர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் கொடுத்திருக்கும் நிலையில் அது பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்து தப்பு செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் ரோகிணி இன்னும் மாட்டாமல் இருக்கிறார்.

ஆனால் கதாநாயகனான முத்துவிற்கும் மீனாவிற்கும் தான் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. மீனா தன்னுடைய மாமியார் எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வீட்டின் வேலைக்காரி போல வீட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து ரசிகர்கள் திட்டி வந்தாலும் இந்த சீரியலின் கதையில் ஒவ்வொரு வாரமும் ஒரு ட்விஸ்ட் வந்து விடுகிறது.
தற்போது கூட முத்துவின் செல்போனில் இருக்கும் சத்யாவின் வீடியோவை ரோகிணி லீக் பண்ணுவாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. வழக்கம் போல இந்த முறையும் முத்துவிற்கு பிரச்சனை வந்தால் ரசிகர்கள் கோபமடைவார்கள். அதே போல ரோகிணிக்கு பிரச்சனை கொடுத்துக் கொண்டிருக்கும் பி ஏ இப்போது வித்யா வீடு வரைக்கும் சென்றிருக்கிறார். இன்றைய எபிசோடில் விஜயாவிடமும் பேசி இருக்கிறார்.
இதனால் ரோகிணிக்கு மேலும் பிரச்சனை வர இருக்கிறது. இதற்கு மத்தியில் ரோகிணி தன்னுடைய அப்பா 300 கோடிக்கு சொத்து வைத்திருக்கிறார் என்று ஒரு பிட்டு போட்டு இருக்கிறார். இனி இதை வைத்து விஜயா புது ப்ளான் போட்டு வைப்பார். இப்படி கதை போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் சன் டிவியில் மீனா சீரியல் உட்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் குமரன் சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலுக்காக தான் டப்பிங் பேசிய புகைப்படங்களை அதில் பகிர்ந்து இருக்கிறார். இதனால் இவர் இந்த சீரியலில் என்ன கேரக்டரில் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் சீரியலில் மீனாவை பொண்ணு பார்ப்பதற்காக ஒரு மாப்பிள்ளையின் பெற்றோர் வந்து பார்த்துவிட்டு போய் இருக்கிறார்கள். ஆனால் மாப்பிள்ளையின் புகைப்படத்தை ரசிகர்களிடம் காட்டாத வகையில் தான் செல்போனில் சீரியலில் பார்த்திருந்தனர்

இதனால் மீனாவை பொண்ணு பார்க்க வரும் மாப்பிள்ளை கேரக்டரில் தான் குமரன் நடிக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சீதாவிற்கு குமரனுடன் கல்யாணம் நடப்பது போன்று காட்சிகள் வந்தால் சீரியல் சில நாட்கள் கலகலப்பாக இருக்கும். அதே நேரத்தில் சத்யா மாட்டுவாரா இல்லையா என்றும் ஒரு பரபரப்பு ஏற்படும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications