விஜயகாந்த் மகனுக்காக தொடர்ந்து லாரன்ஸ் செய்யும் செயல்.. சொன்னதை மறக்கலையே மாஸ்டர்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் சண்முக பாண்டியனுக்காக அவருடைய திரைப்படத்தில் நான் முக்கிய கேரக்டரில் நடிப்பேன் என்று நடிகர் லாரன்ஸ் கூறி இருந்தார். இந்த நிலையில் மேலும் சண்முக பாண்டியனுக்காக லாரன்ஸ் சில செயல்களை செய்திருக்கிறாராம். அது பற்றி பார்க்கலாம்.
நடிகர் விஜயகாந்த்க்கு அறிமுகமே தேவை இல்லை. சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தனித்து, துணிந்து பலரும் வியக்க வைக்கும் செயல்களை செய்ததாலேயே மக்கள் மனதில் விஜயகாந்த்க்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அவர் இறந்தாலும் அவர்களால் உதவி பெற்றவர்கள் பலர் அவர் செய்த உதவிகள் குறித்து உருக்கமாக பேசி வருவதை பார்க்க முடிகிறது.

ஒரு சில நடிகர்கள் பெரிய பெரிய ப்ரொடக்ஷன், இயக்குனர்கள் இருந்தால்தான் அந்த திரைப்படத்தில் நான் நடிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் விஜயகாந்த் அந்த நேரத்தில் பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை நம்பி அவர்களுடைய திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படமும் வெற்றி அடைந்திருக்கிறது. அதுபோல பல நடிகர்கள் பிரபலம் அடைவதற்காக அவர்களுடைய திரைப்படத்திலும் விஜயகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
அதிலும் நடிகர் விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் விஜயகாந்தின் திரைப்படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தன்னுடைய குடும்பத்திற்காக விஜயகாந்த் பெரிதாக எதுவும் செய்யாமலேயே இருந்து விட்டார். ஆனால் விஜயகாந்த்தால் உதவி பெற்ற பலர் நாங்கள் விஜயகாந்தின் மகன்களுக்கு உதவி செய்வோம் என்று கூறி இருக்கிறார்கள்.
அதிலும் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு விஜயகாந்த் உடைய மகன்களின் முன்னேற்றத்திற்கு நான் ஒரு அண்ணனாக துணை நிற்பேன் என்று லாரன்ஸ் பேசி இருந்தார். அதுபோல விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தில் கோமியோ ரோலில் என்னை நடிக்க கூப்பிட்டால் நான் நடிப்பேன் என்று லாரன்ஸ் சொல்லியிருந்த நிலையில் அந்த படத்தில் ஹோமியோ ரோலில் லாரன்ஸ் நடித்திருந்ததாக தகவல் வெளியானது.
அதுமட்டுமல்லாமல் அடுத்ததாக சண்முக பாண்டியன் இன்னொரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். அந்த படத்திலும் செகண்ட் ஹீரோவாக அவருடன் சேர்ந்து லாரன்ஸ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லாரன்ஸ் மாஸ்டர் சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். நடிகர் என்பதையும் மீறி சமூக சேவகராக அவர் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதால் மக்கள் மத்தியில் அவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் மாற்றம் என்ற பெயரில் ஒரு பொது சேவையை ஆரம்பித்து அதன் மூலம் பல ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தேவையான உதவிகளை செய்து வருகிறார். அதோடு அரசியலில் வந்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. நான் என்னுடைய முயற்சியாலே என்னுடைய மன நிம்மதிக்காக பலருக்கும் உதவி செய்வேன் என்று தன்னுடைய சொந்த செலவில் பல உதவிகளை செய்து வரும் லாரன்ஸிற்கு பக்க பலமாக பல நடிகர் நடிகைகள் மாறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் விஜயகாந்தின் மகனுக்காக செய்யும் செயலுக்கும் பலர் பாராட்டி வருகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications