மாலையும் கழுத்துமாக மாதம்பட்டி ரங்கராஜ்.. ஹைடெக் கேரவன்.. நடிகை ரேகா நாயர் ஹேப்பியா வாழல?: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாய் கிரிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது 2வது திருமணம் செய்ததுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோயிலில் இவர்களுடைய திருமணம் சிம்பிளாக நடைபெற்றதாகவும், தங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. மாலையும் கழுத்துமாக உள்ள போட்டோவை இணையத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.. இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "சமையல் கலை வல்லுநர்கள் இந்த அளவுக்கு உயரத்தில் வரமுடியும் என்பதை அவர்மூலம்தான் தெரிந்து கொண்டேன்.. தனி கேரவனை வைத்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜன்.. அவர் வாழ்வதே கேரவனில்தான்..

Television Actor Madhampatti Rangaraj actress Rekha Nair

ஹைடெக் வாழ்க்கை

ஹைடெக் வாழ்க்கை.. மாதம்பட்டி சமையல் என்றால், அவரே சமைக்கிறார் என்று பலரும் நினைத்து கொள்கிறார்கள்.. ஒரு திருமணத்தில் பார்த்தேன்.. இன்னோவா காரில் வந்தார்.. மாதம்பட்டியின் தேதி கிடைத்தால்தான், கல்யாணத்துக்கு தேதியை குறிக்கிறார்கள்..

திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.. ஆனால், அவரது அப்பாவுக்குதான் நன்றியை சொல்லணும்.. இதை உருவாக்கிய நிறுவனரே அவர்தான்.. ஸ்ருதி என்ற வழக்கறிஞரை காதலித்துதான் மாதம்பட்டி ரங்கராஜன் திருமணம் செய்தார்.. குழந்தையும் உள்ளது.. கடந்த ஒரு வருட காலமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்..

காஸ்ட்யூம் டிசைனர்

அப்போதுதான் காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிஸில்டா அறிமுகமாகியிருக்கிறார்.. தனக்கு ஒரு காஸ்ட்யூம் டிசைனரை வைத்துக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளார் மாதம்பட்டி. இவர்கள் இந்த ஒரு வருட காலமாகவே லிவிங் டூ கெதரில் வாழ்ந்ததாக தெரிகிறது. இப்போது காஸ்ட்யூம் டிசைனர் கர்ப்பமாக இருக்கிறாராம். Baby on Board என்று பதிவிடுகிறார்கள்.

2வது திருமணத்துக்கு முன்பேயே குழந்தை உருவாகிவிட்து.. பிறகு மணக்கோலத்தில் ஜாய் கிரிஸில்டா - மாதம்பட்டி இருவரும் சேர்ந்து போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.. ஒரே டிசைனில் மாலையை அணிந்துள்ளனர்.. ஆனால், இது திருமணத்துக்காக எடுத்துக் கொண்ட போட்டோவா? அல்லது வேறு எதற்காகவாவது எடுத்துக் கொள்ளப்பட்ட போட்டோவா தெரியல. எப்போது எடுத்துக் கொண்டது, அதுவும் தெரியவில்லை.

ரேகா நாயர் திருமணம்

ஒரு பெரிய எம்எல்ஏவாக இருந்தவர், நடிகை ரேகா நாயரை திருமணம் செய்துள்ளார்..
அதிலும், வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜாவின் மகனாக இருந்தும் ரேகா நாயரை திருமணம் செய்து, வீடு கிரகப்பிரவேசமும் செய்துள்ளனர்.. இதை ரேகா நாயரே அறிவிக்கிறார்..

அதாவது காசு, பணம் வந்தால், இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் ஸ்போட்டிவ் ஆயிடும் என்று நினைக்கிறேன்.. மாதம்பட்டியின் முதல் மனைவி ஸ்ருதி, வழக்கறிஞராக இருந்தும் ஏன் பேசவில்லை? என்று பலரும் கேட்கிறார்கள்.. ஒரு அளவுக்கு மேல் போனால் இதுபோன்ற விஷயங்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் போல..

ஸ்ருதியின் அமைதி ஏன்

ஸ்ருதியின் அமைதிக்கு காரணம் தெரியவில்லை.. ஒன்று பணம், அல்லது இவர்களை கேள்வி கேட்டு, என்னாகப்போகுது? என்ற எண்ணம் இருக்கலாம்.. இது ஸ்ருதியின் தனிப்பட்ட விவகாரம் என்றாலும், சட்டப்படி இது தவறு.. முறைப்படி விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்ய முடியாது..

ரங்கராஜை ஜாய் கிரிஸில்டா மிரட்டி திருமணம் செய்யவும் வாய்ப்பிருக்கலாம்.. அவருடன் வாழ்ந்து, குழந்தையையும் தந்துள்ள நிலையில், அந்த பெண் இதுகுறித்து கேள்வி கேட்க உரிமை உள்ளது.. இதுசம்பந்தமான பிரச்சனை செய்ய வேண்டாம் என்று,. இது தொடர்பாக ஸ்ருதியிடம் மாதம்பட்டி ரங்கராஜன் பேச்சுவார்த்தைகூட நடத்தியிருக்கலாம்.... இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புகள் நிறைய உள்ளது.

சட்ட நகர்வுகள்

சட்டரீதியாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், அதை மனைவிதான் தொடுக்க வேண்டும். காரணம், இருதார மணத்தை சட்டம் அங்கீகரிக்கவில்லை..

லிவிங் டூ கெதரில் இருப்பது தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட் அன்று தந்திருந்த தீர்ப்பை பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.. இன்று ஸ்ருதி புகார் தந்தாலும், மாதம்பட்டி ரங்கராஜ் ஜெயிலுக்குதான் போக வேண்டும். குழந்தையும் இருப்பதால், மற்றொரு வழக்கை போட்டால், சொத்தையும் பிரித்துவிடலாம்.. அதிலும் சரிசமமாக சொத்து தரப்படவேண்டும்.. அந்த அளவுக்கு இது போகுமா தெரியவில்லை.. சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+