சம்யுக்தா சூட்டிங் ஸ்பாட்டில் இப்படித்தான்.. ரகசியத்தை உடைத்த "ஜோடி” நடிகர்.. இதுதான் உண்மையாம்
சென்னை: சீரியல் நடிகை சம்யுக்தா பற்றி அவரோடு முத்தழகு சீரியலில் நடிக்கும் நடிகர் மகேஷ் பல தகவல்களை கூறி இருக்கிறார்.
சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்களுடைய குடும்ப பிரச்சனையை சமூக வலைத்தளத்தில் மாறி மாறி கூறிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களாக சம்யுக்தா பற்றிய பேச்சு அடிபடாமல் இருந்த நிலையில் தற்போது அவரோடு சீரியலில் நடிக்கும் நடிகர் மகேஷ் அவரைப் பற்றி பல ரகசியங்களை கூறியிருக்கிறார். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான "சிற்பிக்குள் முத்து" என்று சீரியலில் ஒன்றாக நடித்து ஏழு மாதங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி காதலிக்கும் போது பல youtube சேனல்களில் பேட்டி கொடுத்திருந்தனர். ஆனாலும் திருமணம் செய்த 15 நாட்களில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தனர்.
இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டு வந்தனர். அதே நேரத்தில் தங்களுடைய திருமண புகைப்படங்களையும் அடுத்தடுத்து டெலிட் செய்திருந்தனர். இதனால் இவர்களுடைய கருத்து வேறுபாடு பிரச்சனை எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்தது. அந்த நிலையில் விஷ்ணுகாந்த எங்கள் இருவருக்கும் பிரச்சனைக்கு காரணம் சம்யுக்தாவின் அப்பா தான் என்று பேட்டி ஒன்றில் பேசு இருந்தால்.
அதைத்தொடர்ந்து சம்யுக்தா விஷ்ணுகாந்த் பற்றி அவர் ஒரு காமக் கொடூரன் என்றும் மேலும் பல குற்றச்சாட்டுகளை கூற, அதைத் தொடர்ந்து விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை கல்யாணம் செய்வதற்கு முன்பு பலரோடு தொடர்பில் இருந்திருப்பதாகவும் சில ஆடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இப்படியாக இவர்களுடைய குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பலருக்கும் தெரிந்ததுதான்.

இவர்களை சீரியலில் பார்க்காதவர்களுக்கும் கூட இவர்களுடைய குடும்ப பிரச்சனை தெரிய ஆரம்பித்து விட்டது. இதனால் இவர்களைப் பற்றி அதிகமானோர் விமர்சிக்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களுடைய பிரச்சனைகள் குறித்து இணையத்தில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது சம்யுக்தா முத்தழகு என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இன்னும் ஒரு சில தினங்களில் 500 எபிசோடுகளை கடக்க இருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் மகேஷ் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அப்போது தனக்கு ஜோடியாக நடிக்கும் சம்யுக்தா பற்றி அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் சம்யுக்தா ஷூட்டிங்கில் இப்போது ரொம்பவே சைலண்டாக மாறியுள்ளதாக கூறியிருக்கிறார்.
அதுபோல இந்த சீரியலில் மகேஷ் அமுதன் என்று கேரக்டரில் தான் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தான் சம்யுக்தா நடித்து வருகிறார் இந்த நிலையில் இவர் சீரியலில் சிறப்பாக நடித்துக் வருவதாகவும் மகேஷ் கூறி இருக்கிறார். குடும்ப பிரச்சனை அதிகமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அவர் அதை நடிக்கும் போது கொஞ்சம் கூட காட்டவே மாட்டார்.
இப்போதெல்லாம் இந்த பிரச்சனைக்கு பிறகு அமைதியாக இருக்கும் சம்யுக்தா தான் நடிக்கும் சீன் வந்தால் உடனே அதற்கு தகுந்த மாதிரி மாறிவிடுகிறார். இவர் இதற்கு முன்பும் அப்படித்தான் இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார். இந்த மாதிரி நடந்து கொள்வதற்கு அதிகமான மன தைரியம் வேண்டும் என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications