சத்யராஜ் இப்படி பண்ணுனாரு.. படத்துல மாதிரி இல்லை.. எமகண்டத்துல சர்ஜரி.. மணிவண்ணன் சகோதரி எமோஷனல்
சென்னை: இயக்குனராகவும் நடிகராகவும் பலருக்கும் பரிச்சயமான நடிகர் மணிவண்ணன் பற்றி யாருக்கும் தெரியாத பல ரகசியங்களை அவருடைய சகோதரி முதல் முறையாக பிரபல சேனல் ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் மணிவண்ணன் சினிமாவில் பார்ப்பது போன்ற கேரக்டர் கிடையாது வீட்டில் எப்பவாவது தான் காமெடி செய்வார். ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான கேரக்டர் தான் என்றும் அவருடைய சகோதரி கூறியிருக்கிறார்.

கூடவே நடிகர் மணிவண்ணனின் கடைசி காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து அவருடைய நெருங்கிய நண்பர் சத்யராஜ் குறித்து மணிவண்ணனின் சகோதரி பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
நடிகர் மணிவண்ணன் இயக்குனராகவும், தமிழ் அறிவாளராகவும் பல காலங்கள் இருந்த நிலையில் அதில் எல்லாம் அவருடைய பெயரும் புகழும் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்த நிலையில் அவருடைய நடிப்பு மூலமாக பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார். குணச்சித்திர வேடங்களாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி தனக்கென்று தனி முத்திரையை பதித்து இவருடைய நடிப்பில் இப்போதும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் மணிவண்ணன் நடித்த படங்கள் பலவற்றை இவருடைய நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் ஒரு குடிகார நபராக சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் கடைசியில் கதாநாயகன் குட்டிக்கு அவருடைய காதலியை சேர்த்து வைப்பதற்காக போராடும் போராட்டம் மூலமாகவே இவர் பலருடைய மனதில் இடம் பிடித்திருந்தார்.
அதுபோல நடிகர் சத்யராஜ் உடன் அமைதிப்படை திரைப்படத்தில் சத்யராஜ்க்கு இணையாக இவரும் தன்னுடைய நடிப்பை வேற லெவலில் காட்டி இருப்பார். அது மட்டுமல்லாமல் எட்டுப்பட்டி ராசா திரைப்படத்தில் ஒரு வில்லனாக பலருடைய சாபங்களையும் வாங்கி இருந்தவர்தான். அதுபோல சூரியவம்சம் திரைப்படத்தில் சரத்குமாரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மணிவண்ணனையும் யாராலும் மறக்க முடியாது.
இத்தனைக்கும் மேலாக சங்கமம் திரைப்படத்தில் இவருடைய அசத்தலான பெர்பார்மன்ஸ் பலரையும் கண் கலங்க வைத்திருக்கும். சங்கமம் திரைப்படத்தில் ஒரு தந்தையாகவும், கலையை நேசிக்கும் ஒரு ஆசானாகவும், மகனுக்காக அவமானப்பட்டு அந்த வலியை வெளியே காட்டிக் கொள்ளாமல் துடிக்கும் இடத்தில் சாதாரண அடித்தட்டு மனிதனாகவும் வாழ்ந்து இருப்பார்.
அதுபோல அவர் கடைசியாக நடித்த முத்துக்கு முத்தாக திரைப்படத்தில் அவருடைய இறப்பு காட்சிகளை பார்த்து இப்போதும் பலர் கண்கலங்கி கொண்டிருக்கிறார்கள். இப்படி இவருடைய நடிப்புக்கு பல படங்களை சொல்லிக் கொண்டே போனாலும் இவர் திரைப்படத்தில் பார்ப்பது போன்று வீட்டில் கிடையாதாம்.
அதிகமான திரைப்படங்களில் எப்போதுமே பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் வீட்டில் இருக்கும் போது ஏதாவது ஒன்னு ரெண்டு வார்த்தைகள் மட்டும் தான் மணிவண்ணன் பேசுவாராம். ஆனால் அவருடைய சகோதரி இடம் தான் அளவு கடந்த அன்பு வைத்திருப்பாராம். எப்போதும் தன்னுடைய தங்கை கேட்டால் மட்டும் என்ன வேண்டும் என்றாலும் செய்து கொடுப்பாராம்.
மணிவண்ணன் இறந்து பத்து வருடங்கள் கழித்து அவருடைய சகோதரி மணிவண்ணன் குறித்து உருக்கமாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் மணிவண்ணன் அண்ணனுடைய இறுதி காலம் ரொம்பவே வேதனையாக இருந்தது. அவருடைய இறப்பு இப்போதும் என்னுடைய நெஞ்சில் மறக்க முடியாத ரணமாக இருக்கிறது.
எப்படித்தான் நான் அண்ணன் இல்லாமல் இப்போது இந்த பத்து வருடத்தை கடந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. அண்ணன் இறந்த பிறகு எனக்கு அண்ணனின் நண்பர் சத்யராஜ் இடம் தான் நான் எந்த விஷயத்தையும் கேட்பேன். எனக்கு பல நேரங்களில் குழப்பமாக இருக்கும் போது சத்யராஜ் அறிவுரைகளை கொடுத்து இருக்கிறார்.
அதுபோல அண்ணன் இறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு அவருக்கு இன்டர்வியூ கொடுத்துக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து அடிபட்டுவிட்டது. அப்போது அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருந்தார்கள். மருத்துவர்கள் நல்ல நேரம் பார்த்து ஆபரேஷன் செய்யலாம் என்று சொன்னபோதும் கூட அண்ணன் வேண்டாம் எமகண்டத்தில் பண்ணுங்க அப்போதான் ஏதாவது எனக்கு ஆகிட்டால் கூட நீங்க எமன் மேல பழியை போட்டுக்கலாம்.
நீங்க நல்லபடியா ஆபரேஷன் பண்ணியும் எனக்கு ஏதாவது ஆயிட்டா நல்ல நேரத்துல செஞ்சும் இந்த டாக்டர் தான் சரியில்லைன்னு உங்க மேல பழி வந்துரும் என்று நல்ல நேரத்தில் ஆபரேஷன் செய்ய மறுத்துவிட்டார் என்றும் அந்த பேட்டியில் நடிகர் மணிவண்ணன் பற்றி பல நினைவுகளை அவருடைய சகோதரி பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications