கண்ணகினு சொல்லிட்டு! கணவர் முன்பு விஷாலுக்கு இப்படி முத்தம்? குஷ்புவை சீண்டிய மன்சூர் அலிகான்
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது நடிகை குஷ்பூ தன்னை கண்ணகி என்று சொல்லிக் கொண்டு தன்னுடைய கணவர் முன்பே விஷாலுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கலாமா? என்று பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து முன்னணி நடிகராகவும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நடிகரான மன்சூர் அலிகான் சமீபத்தில் தான் நடிகை திரிஷாவை பற்றி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு திரிஷா மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடுத்து இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் நடிகை திரிஷா மற்றும் குஷ்பூ குறித்து மன்சூர் அலிகான் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மன்சூர் அலிகான் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு பிறகு அதிகமான திரைப்படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் மேடைகளில் இவர் பேசும் விஷயங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுகிறது.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு ப்ரீ ரிலீஸ் நடைபெற்றது. அப்போது அந்த திரைப்படத்தை பற்றி பத்திரிகையாளர்களோடு பேச இந்த திரைப்படத்தில் நடித்த விஷால், குஷ்பூ, சுந்தர் சி, விஜய் ஆண்டனி உட்பட பலர் கலந்துகொண்டு பேசியிருந்தனர்.
அப்போது விஷால் மேடையில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த குஷ்பு விஷாலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதைப்பற்றி இன்று மேடையில் பேசிய மன்சூர் குஷ்பூ பச்சக் பச்சக்னு முத்தம் கொடுத்தாங்க.. இது அடுத்தவன் பொண்டாட்டி என்று ஆக்ஷன் உடன் செய்து காட்டி இருக்கிறார்.
அதோடு மேலும் பொது இடங்களில் கண்ணகி கண்ணகி என்று பேசிவிட்டு கோவலன் இல்லாமல் வேறு ஒருவருடன் இப்படி முத்தம் கொடுக்கலாமா? இதை சுந்தர் சி வேதனையோடு தான் பார்த்திருப்பார். விஷாலுக்கு இப்போதே கைகள் நடுங்க தொடங்கி விட்டன. அவருக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை.. ஆனாலும் சீக்கிரமாக சரியாகிவிடும் என்று அந்த பேட்டியில் மன்சூர் அலிகான் பேசி இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications