மன்சூர் அலிகான் அட்வைஸ்: மகனே தெம்பா இரு, பிக்பாஸ் வீட்டுக்கு போறதா நினைச்சுக்கோ, ஜெயில்ல புக்ஸ் படி
சென்னை: போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே, நான் "சரக்கு" என்ற ஒரு படம் எடுத்தேன். அந்த படத்தை வெளியிட சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. ஓடிடியில்கூட அந்த படத்தை வெளியிடவிடாமல் எந்த சக்தி தடுக்கிறது? நேரம் வரும்போது நான் பொங்குவேன்" என்று மன்சூர் அலிகான் ஆவேசமாக கூறியிருக்கிறார். அத்துடன், ஜெயிலுக்கு செல்லும் தன்னுடைய மகனுக்கு முக்கியமான அட்வைஸ் ஒன்றை தந்துள்ளார்.
மெத்தம்பெட்டமைன் மற்றும் மேஜிக் காளானை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அலிகான் துக்ளக், சேது ஷாயி, முகமது ரியாஸ் அலி, பைசல் அகமது உள்ளிட்ட 4 பேரிடமும் நேற்று 2வது நாளாக திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

துக்ளக் ஹீரோ: 019-ம் ஆண்டு மன்சூலின் அலிகான், துக்ளக் என்ற படத்தை டைரக்ட் செய்திருந்தார்.. இந்த படத்தில், அலிகான் துக்ளக் ஹீரோவாக நடித்திருந்தார்.. இதனிடையே கடந்த மாதம் 3-ந்தேதி போலீசாரால் கைதுசெய்யப்பட்ட கார்த்திகேயன் என்பவரிடமிருந்து, ஆன்லைனில் கஞ்சா வாங்கி பயன்படுத்தியது மட்டுமில்லாமல் விற்பனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நேற்று முன்தினமும், மேஜிக் காளான், மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை அலிகான் துக்ளக் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஜெ.ஜெ.நகர் போலீசாரால் தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்..
விசாரணை: இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் ஆன்லைனில் கஞ்சா பயன்படுத்தி வந்ததோடு அதிக விலைக்கு விற்பனைக்கு செய்து வந்ததாக தெரியவந்தது.. இதனிடையே கைதானவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அலிகான் துக்ளக் கஞ்சா பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து கைதானவர்களிடம் நேற்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.
இறுதியில், இந்த போதைப்பொருள் வழக்கில் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மகனை பார்க்க மன்சூர் அலிகான் வந்திருந்தார்.
டாஸ்மாக் கடைகள்: அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதல்ல, தமிழ்நாட்டில் போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்குது? எப்படி கிடைக்குது? இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்... தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடியே ஆகவேண்டும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் என்னுடைய மகனின் செல்போன் நம்பர் இருந்திருக்கிறது.. உடனே அதை வைத்து கைது செய்துவிட்டார்கள்.. அவன் அடிக்கிற மாதிரி பார்த்தாங்களா? போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே, நான் "சரக்கு" என்ற ஒரு படம் எடுத்தேன். அந்த படத்தை வெளியிட சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. ஓடிடியில்கூட அந்த படத்தை வெளியிடவிடாமல் எந்த சக்தி தடுக்கிறது? நேரம் வரும்போது நான் பொங்குவேன்" என்றார்.
அட்வைஸ்: முன்னதாக, மன்சூர் அலிகான் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, போலீஸ் ஜீப்பில் அழைத்து வரப்பட்டார். அப்போது அவரை பார்த்த மன்சூர் அலிகான்,''கஞ்சா அடிச்சா கவர்மென்ட் அரஸ்ட் பண்ணுவாங்க என்பது தெரியாதா? தெம்பா இரு, தைரியமா இரு, நல்ல புத்தகமாகப் படி.. பிக்பாஸ் வீட்டுக்கு போறதா நினைச்சுக்கோ" என்று அட்வைஸ் தந்தார்..
தொடர்ந்து செய்தியாளர்களை பார்த்து, "கவர்மென்ட் சரக்கு குடிச்சா வழக்கு இல்லை.. ஆனால், இங்கே கஞ்சா அடிச்சா வழக்கு" தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார் மன்சூர் அலிகான்.












Click it and Unblock the Notifications