நடிகர் மாரிமுத்து நேரலைக்கு வர தயாரா? தமிழா தமிழாவில் நடந்தது இதுதான்..ஏமாத்திட்டாங்க!பிரபலம் பேட்டி
சென்னை: நடிகர் மாரிமுத்து சமீபத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர் பற்றி பேசிய கருத்துக்கு எதிராக பிரபல ஜோதிடர் பேட்டி ஒற்றில் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அதில் நடிகர் மாரிமுத்து என்னுடைய நேரலைக்கு வர தயாராக இருக்கிறாரா என்று சவால் விட்டு இருக்கிறார்.

அதோடு தமிழா தமிழா நிகழ்ச்சியில் அன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி பல ரகசியங்களையும் உடைத்து இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து பிரபலம் ஆகி வரும் நடிகர் மாரிமுத்து பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் பல திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர்தான் 2கே ஹிட்ஸ் களின் ட்ரெண்டிங் ஸ்டார் ஆகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் நவீன பரிகாரங்கள் சொல்லும் ஜோதிடர்கள் VS அதை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மாரிமுத்து கலந்து கொண்டு இருந்தார். அப்போது பலர் நவீன பரிகாரங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அதற்கு மாரிமுத்து இதுவெல்லாம் கேட்டுகிட்டு நான் எதுவும் பேச கூடாதுன்னு வாயை மூடிகிட்டு இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
அதற்கு உங்களுடைய கருத்து என்னன்னு சொல்லுங்க என்று தொகுப்பாளர் கேட்க, நான் இதை எல்லாம் நம்ப மாட்டேன். இந்த நாடு நாசமா போறதுக்கு காரணம் ஜோதிடர்களும், ஜோதிடத்தை நம்புவர்களும் தான் என்று கூறியிருந்தார். அதோடு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த அதே நேரத்தில் எத்தனையோ பேர் பிறந்திருந்தார்கள். ஆனால் அவர்களால் சூப்பர் ஸ்டார் ஆக முடியவில்லை ஏன்? அதுபோல தற்போதைய முதலமைச்சர், முதலமைச்சர் ஆக மாட்டார் என்று பல ஜோதிடர்கள் சொன்னார்கள் அவர் முதலமைச்சர் ஆகி விட்டார்.
இப்போ அந்த ஜோசியக்காரங்க மூஞ்சியை எங்க கொண்டு போய் வச்சிருப்பாங்க? அது மட்டும் அல்லாமல் கொரோனா வரும் என்றோ, சுனாமி வரும் என்றோ எந்த ஜோதிடனும் சொல்லலையே..? வந்த பிறகு தானே எல்லாவனும் சொல்றானுங்க என்று ஒருமையிலும் பேசி இருந்தார். இதுகுறித்து அந்த நிகழ்ச்சியிலே பல ஜோதிடர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுபோல இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் தொடர்ச்சியாக ஜோதிடர்கள் பலர் நடிகர் மாரிமுத்து மீது காவல்துறையில் புகார் கொடுத்துக் கொண்டிருக்கின்றர். இந்த நிலையில் ஜோதிடர் சம்பத் சுப்பிரமணி என்பவர் மாரிமுத்துவுக்கு எதிராக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் தமிழா தமிழா நிகழ்ச்சியில் குறிப்பிட்ட அந்த நாளுக்கான சூட்டிங்கில் நடந்தது என்ன என்பதை பற்றி விவரித்திருகிறார். தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எங்களுக்கு இரண்டு மணிக்கு வர சொன்னார்கள். நாங்கள் அப்பவே போய் விட்டோம். ஆனால் அதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதால் எங்களை ஆறு மணிக்கு தான் அழைத்தார்கள். அதற்கு பிறகு நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 7 மணி நேரம் நிகழ்ச்சி நடந்தது.
ஆனால் ஒளிபரப்பானது 45 நிமிடம் தான் 15 நிமிடம் விளம்பரத்தில் போய்விட்டது. அவ்வளவு எடிட்டிங் செய்து இருக்கிறார்கள். அதில் நாங்கள் பேசிய பல விஷயங்களை ஒளிபரப்பு செய்யவில்லை. அனைத்தையும் கட் பண்ணி விட்டார்கள். மாரிமுத்து பேசியதற்கு ஜோதிடர்களால் எதுவும் பேச முடியாத நிலையில் இருப்பது போன்று எடிட் செய்த ஒளிபரப்பு செய்து விட்டார்கள்.
சேனலுக்கு டிஆர்பி வரவேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்து விட்டார்கள்." நான் நேரலையில் வர ரெடி. ஆனால் என்னோடு விவாதிக்க மாரிமுத்துவால் முடியுமா? மாரிமுத்து அன்று பேசியது எங்கள் அனைவரையும் கடுமையாக பாதித்தது. நாங்கள் கிட்டத்தட்ட 3 மணி நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். கடைசியில் மாரிமுத்து எழுந்து நின்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு முடித்திருந்தார். சேனல் தரப்பில் இருந்தும் எங்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்கள். இதுபோல இனி நடக்காது என்றும் சொன்னார்கள்.
ஆனால் ஒளிபரப்பு செய்யும்போது மாரிமுத்துக்கு ஆதரவாக இருப்பது போன்று ஒளிபரப்பு செய்து விட்டார்கள். அந்த நிகழ்ச்சியில் அன்று இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தால் கைகலப்பு வந்திருக்கும். அந்த அளவிற்கு அனைவரும் ஆக்ரோஷமாக தான் விவாதித்து கொண்டிருந்தோம். ஆனால் அதை எல்லாம் தூக்கி விட்டார்கள். நாங்கள் மாரிமுத்துவுக்கு எதிராக பேசியதை எல்லாம் நிகழ்ச்சியில் வரவில்லை.
ஜோதிடம் சொல்வதில் சில நேரங்களில் அது நடக்காமல் போய் இருக்கலாம். ஆனால் அது தரமான பொருள் என்பதால் தான் அப்படி இருக்கிறது. உணவு பொருள்களாக இருந்தாலும் அது நல்ல பொருளாக இருந்தால் மட்டும் தான் ஒரு நாளைக்குள் கெட்டுப் போகும். ஹைப்ரெட் பொருள்கள் மட்டும்தான் கெட்டுப் போகாமல் இருக்கும். நான் ஒரு நாளைக்கு 100 பேருக்கு ஜாதக பார்க்கிறேன் என்றால் 80 பேருக்கு ஆவது சரியாக இருக்கும். சில நேரங்களில் தவறாக போவதற்கும் வாய்ப்பு இருக்குது. அது எல்லாத் துறையிலும் இருக்கிறது என்றும் அந்த பேட்டியில் ஜோதிடர் சம்பத் சுப்பிரமணி பேசியிருக்கிறார்.
-
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications