ரஜினிகாந்துக்கு பாதுகாப்புக்குப் போன விஜயகாந்த்.. அந்த ஒரு வார்த்தை.. மாறிப்போன டோட்டல் வாழ்க்கை
சென்னை: நடிகர் விஜயகாந்த் ஆரம்பத்தில் அரிசி மில் முதலாளியாக இருந்த நிலையில் பிறகு ஒரு நடிகராக மாறிய கதை பலருக்கும் தெரிந்திருக்காது.
அதுவும் ஆரம்பத்தில் விஜயகாந்த், ரஜினி மற்றும் கமல் எல்லாருக்குமே பாதுகாப்பு கொடுத்த கதையும் பலருக்கு தெரிந்திருக்காது.

இந்த நிலையில் விஜயகாந்த் பற்றியும் அவர் எப்படி சினிமாவிற்கு வந்தார் அதற்கு ரஜினிகாந்த் என்ன ஒரு வார்த்தை சொன்னார் என்பது பற்றி விஜயகாந்தின் நண்பரான மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு பெரிய அளவில் அறிமுகமே தேவையில்லை. அவர் பலதரப்பட்ட மக்களுக்கும் பரிச்சயமானவர்தான். பிரபல நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் பல ஏழைகளுக்கு உதவி செய்த வள்ளலாகவும் அனைவருக்குமே விஜயகாந்த்தை தெரிந்திருக்கும். அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகர்களில் விஜயகாந்த்தும் ஒருவர்.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் சொன்ன ஒரு வார்த்தை தான் காரணம் என்பது நம்ப முடிகிறதா? உண்மையில் அதுதான் நடந்திருக்கிறது. ரஜினிகாந்த் அந்த நேரத்தில் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம். அப்போது மதுரையில் தனது அப்பாவின் ரைஸ் மில்லை விஜயகாந்த் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் எல்லாம் விஜயகாந்துக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை எல்லாம் கிடையாதாம். தன்னுடைய நண்பர்களோடு ஜாலியாக இருந்தபடி உடல் நலத்தில் அக்கறையோடு தன்னுடைய பிசினஸையும் கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அதாவது 1976 ஆம் ஆண்டு விஜயகுமார் ஹீரோவாக நடித்து வெளியான ஆசை அறுபது நாள் என்ற திரைப்படம் 100 நாள் ஓடியிருக்கிறது.
அப்போது இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளர் மதுரையை சேர்ந்தவராம். அந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு மதுரையில் விழா ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அதில் ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாராம். தயாரிப்பாளர் விஜயகாந்துக்கு நெருக்கமானவராக இருந்திருக்கிறார். அதனால் அவர் மதுரைக்கு வந்து ரஜினியை பார்த்துக் கொள்ளும் வேலையை விஜயகாந்திடம் ஒப்படைத்து இருக்கிறார்.
அப்போது ரஜினிகாந்தை ரிசீவ் செய்து அவருக்கு தனியாக ஹோட்டல் அரை ரெடி செய்து கொடுத்து அவரை தங்க வைத்து அவருக்கு தேவையான உதவிகளை விஜயகாந்த் செய்து கொடுத்திருக்கிறார். அப்போது அவரோடு துணையாக விஜயகாந்த் இருக்கும்போது ரஜினிகாந்திடம் நீங்க சிகரெட்டை தூக்கி போட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைலை செய்து காட்டுங்களேன் என்று கேட்க அதற்கு ரஜினியும் செய்து காட்டியிருக்கிறார்.
பிறகு இரண்டு பேரும் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அப்போது நீங்களும் பார்க்க நன்றாக இருக்கிறீர்கள் நடிக்கலாமே என்று ரஜினி சொல்ல, அந்த நேரத்தில் தான் விஜயகாந்துக்குள் அந்த ஆசை வந்திருக்கிறது. பிறகு நடிக்கும் ஆசையால் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார். விஜயகாந்த் நினைத்த மாதிரி அந்த நேரத்தில் அவருக்கு வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. பல அவமானங்கள் தான் கிடைத்திருக்கிறது.
பிறகு போராடி கிடைத்த வாய்ப்புகளும் அதற்காக விஜயகாந்த் கொடுத்த உழைப்பும் தான் அவரை ஒரு கட்டத்தில் ரஜினி படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாற்றி இருக்கிறது. அதுவும் ஒரே வருடத்தில் விஜயகாந்த் நடித்த 18 படங்களும் வெளியாகி இருக்கிறது. அது பெரிய அதிசயமாக அந்த நேரத்தில் பார்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications