கருணாநிதி என்னை பற்றி சொன்ன வார்த்தை! ஸ்ரீ பிரியா என் கன்னத்தில் அடிச்சாங்க.. எம்.எஸ் பாஸ்கர் ஓபன்
சென்னை: நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பல திரைப்படங்களில் நடித்து பலருக்கும் பிரபலமாகி இருந்தாலும் ஆரம்பத்தில் ஒரு சில சீரியல்களிலும் பலரையும் வியக்க வைக்கும் அளவிற்கு நடித்திருக்கிறார். அதிலும் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் எம்எஸ் பாஸ்கர் நடிப்பை பார்த்து கலைஞர் கருணாநிதி ராதிகாவிடம் தன்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னதாக எம்.எஸ் பாஸ்கர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நமக்கு பிரபலமான பல நடிகர்களில் ஆரம்ப காலம் குறித்து அவர்கள் வெளியே சொல்லும் போது இப்படி எல்லாம் வேற நடந்திருக்கா என்று வியப்பை ஏற்படுத்தும். அது போல தான் நடிகர் எம் எஸ் பாஸ்கரின் ஆரம்ப காலம் இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் அது அந்த நேரத்தில் அவருக்கு பிரபலத்தை கொடுக்காத நேரத்தில் தான் 90ஸ் காலகட்டத்தில் அவருக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் நம் குடும்பம், விழுதுகள், மாயாவி மாரிச்செல்வன், கையளவு மனசு, ஆனந்த பவன், வாழ்ந்து காட்டுவேன், கங்கா யமுனா சரஸ்வதி, சின்ன பாப்பா பெரிய பாப்பா என்று பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற சீரியல் தான். இந்த சீரியலில் காது கேட்காதவர் போல நடித்திருப்பார்.
காது பக்கத்தில் கையை வைத்துக்கொண்டு இவர் பட்டாபி கேரக்டரில் நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் இவருடைய கேரக்டரும் பலருக்கும் பிடித்தது. இப்போதுள்ள பல சீரியல்களில் அழுகாச்சி காட்சிகள் தான் அலைமோதுகிறது. ஆனால் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் அந்த நேரத்தில் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த சீரியல்.
இந்த நிலையில் இந்த சீரியலில் தான் நடித்த அனுபவம் குறித்து எம்எஸ் பாஸ்கர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் அந்த நேரத்தில் சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தேன். அப்போது நண்பர் ஒருவர் மூலமாக தான் எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடிக்கும் போது நான்கு வாரங்கள் மட்டும் உங்களுக்கு சூட்டிங் இருக்கிறது என்று சொல்லி இருந்தார்கள்.
ஒன்றுமே இல்லாததற்கு இது பரவாயில்லை என்று நானும் நடிக்கப் போயிருந்தேன். அந்த சீரியலில், ஸ்ரீபிரியா மேடம் நடிச்சிருந்தாங்க. அவங்களிடம் நான் ஏதாவது பேசுவேன். அவர் என் கன்னத்தில் அடித்து விடுவார். பிறகு நான் தான் உங்க மூக்கை தொடவில்லையே எதற்காக அடித்தீர்கள் என்று கேட்பது போல காட்சியில் இருக்கும். அதை எல்லாம் மறக்க முடியாது.. அதுபோல முதல் வாரத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு கலைஞர் கருணாநிதி ஐயாவே ராதிகாவிடம் ஃபோன் போட்டு என்னை பற்றி விசாரித்திருக்கிறார்.
அப்போது என்னுடைய சாட்சிகள் நான்கு வாரங்களுக்கு இருக்கும் என்று சொன்னதும் இல்லை இல்லை பட்டாபி கேரக்டரில் எம் எஸ் பாஸ்கர் பின்னி எடுக்கிறார். அவரை சீரியல் முழுக்க வைத்து விடுங்கள் என்று ராதிகாவிடம் கருணாநிதி ஐயா என்னை பாராட்டி பேசி இருக்கிறார். அதனால்தான் அந்த சீரியலில் நான் கடைசி வரைக்கும் நடித்தேன்.
முதலில் இந்த சீரியலில் இன்னொரு நடிகரை தான் நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகர் நான் மாலை மட்டும் தான் ஷூட்டிங் வருவேன் என்று நிபந்தனை சொல்லி இருக்கிறார். அதற்காகத்தான் அவர் நடிக்காமல் அந்த வாய்ப்பு எனக்கு வந்தது அந்த வாய்ப்பு எனக்கு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியது என்று எம் எஸ் பாஸ்கர் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications