37 மணி நேரம் எங்கேயும் போக முடியல.. என் வாழ்நாளில் இதுபோல பார்த்ததில்லை! நெப்போலியன் திடீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் கப்பலில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரைக்கும் பயணம் செய்ததாகவும், 37 மணி நேரமாக கப்பலுக்குள் நடந்த நிகழ்வுகள் குறித்தும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

நடிகர் நெப்போலியன் "புது நெல்லு புது நாத்து" என்ற திரைப்படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமாகி அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போற்ற திரைப்படங்களில் நடித்து இன்று வரைக்கும் தமிழ் மக்களின் மனதில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

Television Napoleon

அதே நேரத்தில் அரசியலிலும் காலடி எடுத்து வைத்து அங்கேயும் எம்எல்ஏவாக தன்னுடைய பயணத்தை தொடங்கி மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஆனால் இப்போது சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். தன்னுடைய மூத்த மகன் தனுஷ்க்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தன்னுடைய மகனின் மனநிலை மாற்றத்திற்காக அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கு ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதே நேரத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாயத்தை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் youtuber மற்றும் விஜய் டிவி பிரபலங்களை தன்னுடைய மகன் ஆசைப்பட்டதற்காக அவர்களையும் அமெரிக்காவுக்கு வரவைத்து அடிக்கடி அவர்களோடு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதிலும் யூடியூபர் இர்பான் நெப்போலியன் வீட்டிற்கு அடிக்கடி சென்று அங்கு வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அந்த பழக்க தோஷம் இப்போது நெப்போலியனுக்கும் ஏற்பட்டுவிட்டது போல, நெப்போலியன் மூத்த மகன் தனுஷ்க்கு திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சார்ந்த பெண்ணோடு எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. வரும் நவம்பர் மாதத்தில் தன்னுடைய மகனுக்கு திருமணத்தை நடத்த நெப்போலியன் திட்டமிட்டு இருக்கிறார். நெப்போலியன் குடும்பத்தினர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் அங்கு திருமணம் நடத்தினால் சிக்கல்கள் வரும் என்பதால் ஜப்பானில் வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்திருக்கிறார்.

மணப்பெண்ணின் ஊரான திருநெல்வேலி வழக்கப்படி பெண் வீட்டிற்கு வந்து திருமணம் செய்து கொள்வதுதான் வழக்கம். ஆனால் நெப்போலியனின் மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் கப்பலில் அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்றால் ஒரு வருடம் ஆகும் என்பதற்காக இந்த மாற்று ஏற்பாடு என்று நெப்போலியன் கூறியிருக்கிறார்.

Television Napoleon

இந்த நிலையில் தன்னுடைய மகனின் திருமணத்திற்காக கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு நெப்போலியன் பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஆனால் கடல் பயணமாக இருந்தாலும் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதால் சில இடங்களில் இறங்கி டிரெயினில் கொஞ்சம் கொஞ்ச தூரம் பயணித்து பிறகு கப்பலில் பயணிக்கிறார்கள். இந்த நிலையில் இன்று நெப்போலியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அதில் அவரே ஒரு யூடியூபர் போலவே தான் செல்லும் இடங்களை எல்லாம் சுற்றிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்போது சிட்டா அலெக்ஸாவில் இருந்து கோடியா அலெக்ஸாவிற்கு பயணிப்பதற்கு 37 மணி நேரம் ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள். இரண்டு இரவு ஒரு பகலாகும் என்று கூறி இருக்கிறார்கள். 12000 அடி ஆழ கடலுக்குள் நாங்கள் பயணித்து கொண்டு இருக்கிறோம். கடலுக்குள் எங்கேயும் இறங்க முடியாது என்பதால் கப்பலில் பொழுதை கழிக்கலாம் என்று முடிவு செய்தோம். அப்போது பத்தாவது மாடியில் இருக்கும் அப்சர்வேஷன் லாஜிக்கு போனோம்.

அங்கு விளையாடுவதற்காக ஒரு இடம் அமைத்து இருந்தார்கள். அதில் என்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் அங்கிருக்கும் போர்டு கேமை வைத்து விளையாட தொடங்கி விட்டார்கள். நான் அங்கிருக்கும் லைப்ரரியில் போய் பார்க்கலாம் என்று போனேன். அந்த லைப்ரரி கொஞ்சம் சின்ன இடத்தில் வைத்திருந்தாலும் அவ்வளவு அழகாக வைத்திருக்கிறார்கள். என் வாழ்நாளில் இதுபோல நான் பார்த்ததே கிடையாது.

ஆனால் இவ்வளவு அழகான லைப்ரரியில் படிப்பதற்கு தான் யாரும் இல்லை. அப்புறம் வெளியே வந்து பார்த்தேன் நம்ம குடும்பம் சந்தோஷமா விளையாடிட்டு இருந்தாங்க. இந்த கப்பலில் 750 பேர் பயணிக்கிறாங்க. 200க்கும் மேற்பட்டோர் வேலை செய்றாங்கன்னா பாத்துக்கோங்க என்று அந்த கப்பலை சுற்றி காட்டி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+