நடிகர் நெப்போலியனின் இரண்டாவது மகன் சந்தோஷமாக போட்ட போஸ்ட்.. குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியனின் இரண்டாவது மகன் குணால் இன்று தன்னுடைய instagram பக்கத்தில் ஜப்பானில் தன்னால் மறக்க முடியாத பல நினைவுகளை பற்றி பகிர்ந்திருக்கிறார். அதோடு தன்னுடைய சில புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் நெப்போலியன் தன்னுடைய குடும்பத்திற்காக சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி இருக்கிறார். நேற்று தான் அவருடைய பிறந்தநாள் பிரமாண்டமாக அவருடைய குடும்பத்தால் கொண்டாடப்பட்டது. அதுபோல சில மாதங்களாகவே நெப்போலியன் குடும்ப விஷயங்கள் பற்றி இணையத்தில் அதிகமாக செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் நெப்போலியன் மூத்த மகன் தனுஷின் திருமண செய்தி தான் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

napoleon

நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் தனுஷிற்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 10 வயதில் இருந்து அவர் வீல் சேரில் தான் வாழ்ந்து வருகிறார். ஆனாலும் அந்த நோயிலிருந்து, தன்னுடைய விடாமுயற்சியால் அடுத்தவர்களுக்கும் தன்னம்பிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த மாதத்தில் தான் தனுஷ்க்கு திருநெல்வேலியை சார்ந்த பெண்ணோடு ஜப்பானில் வைத்து திருமணம் நடைபெற்றது. தனுஷ் பல வருடங்களாகவே ஜப்பானுக்கு செல்ல வேண்டும் என்று அவருடைய தந்தையிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் ஜப்பானில் சுற்றுலாவிற்காக ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில் அங்கு வைத்து திருமணத்தையும் நடத்திவிடலாம் என்று மகன் சொன்னதால் மறுபேச்சுபேசாமல் நெப்போலியன் தன் மகனுக்காக பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் செய்திருந்தார்.

napoleon

தமிழகத்தில் இருந்து பல நடிகைகள், நடிகர்கள் ஜப்பானில் திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நெப்போலியன் குடும்பத்தினர் ஜப்பானில் தான் இருக்கின்றனர். மூன்று மாதங்களுக்கு பிறகு தான் அமெரிக்காவிற்கு மீண்டும் செல்வதாக நெப்போலியன் கூறியிருந்தார்.

அதுபோல ஜப்பானில் பல இடங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நெப்போலியனின் இரண்டாவது மகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

napoleon

அதில் ஜப்பானில் புஜ்ஜிமலையில் தன்னுடைய நண்பர்களோடு சந்தோஷமாக இருந்த தருணத்தை அதில் குறிப்பிட்டிருக்கிறார். அங்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்ததாகவும், அப்போது மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டு கத்தியதால் தொண்டையில் புண்ணே வந்துவிட்டது. ஆனாலும் என்னுடைய நண்பர்களோடு இருந்த நேரத்தை என்னால் மறக்க முடியாது.

napoleon

இந்த பயணத்தில் என்னை வழிநடத்தும் நம்ப முடியாத மனிதர்கள் இருக்கிறார்கள். ஜப்பானில் சுற்றுலா பயணத்தை நான் முடித்துக் கொண்டாலும் அங்கு சாகசம் நிறைந்த சவால்களை என்னால் மறக்க முடியாது.. அந்த சந்தோஷத்தை மனதில் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+