செய்தி வாசிப்பாளர் கண்மணி வளைகாப்பு.. மேடையில் வளையல் தோரணம்.. நவீன் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்
சென்னை: சின்னத்திரை நடிகர் நான் நவீன் இதயத்தை திருடாதே என்னும் சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.
நவீன் உடைய மனைவி சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி தான்.
இந்த நிலையில் கண்மணியின் ஒன்பதாவது மாத வளைகாப்பு பங்க்ஷன் எளிமையான முறையில் தன்னுடைய குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது.

செய்தி வாசிப்பாளர்
வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகளின் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளராக இருந்தாலும் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் கண்மணி. இவர் ஆரம்பத்தில் ஜெயா டிவியில் தான் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். நியூஸ் 18,காவேரி போன்ற பல தொலைக்காட்சிகளில் இவர் பணிபுரிந்து இருந்தாலும் தற்போது சன் டிவியில் செய்தி வாசித்து வருகிறார். இவருக்கு சீரியல் மற்றும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்த பிறகும் அதில் எல்லாம் தனக்கு ஆசை இல்லை என்று கூறி செய்தி வாசிப்பில் தங்களது கவனத்தை தேடி செலுத்தி வருகிறார்.

இதயத்தை திருடாதே சிவா
இந்த நிலையில் இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் நவீனை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் நவீன் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு இதயத்தை திருடாதே சீரியலில் சிவா என்கிற கேரக்டர் அதிகமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது. இந்த கேரக்டர் மூலமாகவே இப்ப வரைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

திருமணம்
இந்த நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள விஜயாபார்க்கில் நவீன் மற்றும் கண்மணியின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. இவர்களின் திருமணம் ஜூன் மாதம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் என்று செய்திகள் வெளியான நிலையில் அதுவெல்லாம் இல்லை இது வீட்டில் பார்த்த திருமணம் தான் என்று ஏற்கனவே இவர்கள் இருவரும் விளக்கம் கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஒன்பதாவது மாத வளைகாப்பு
இந்த நிலையில் தற்போது கண்மணிக்கு இதுதான் ஒன்பதாவது மாதமாம். தன்னுடைய ஒன்பதாவது மாத கர்ப்ப காலத்தில் சிறப்பாக சொந்த சொந்த பந்தங்களோடு வளைகாப்பு பங்க்ஷன் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் மேடை முழுக்க வளையல் மூலமாகவே அலங்கரித்து இருந்தனர். தனது மனைவிக்காக அதிகமான வளையல்களை வாங்கி கொடுத்த நவீன் ஸ்பெஷலான கேக் ஒன்றையும் கொடுத்து இருக்கிறார். கலகலப்பான இந்த தருணத்தை ரசிகர்களுடன் புகைப்படமாக வெளியிட்டு பகிர்ந்து இருக்கின்றனர். இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications