தாலி கழுத்துக்கு தான் மனசுக்கு கிடையாது! 7 வருஷம் தான் அப்புறம் அரிப்பு வந்துரும்! பார்த்திபன் ஓபன்
சென்னை: நடிகர் பார்த்திபன் திருமண வாழ்க்கை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் தாலி எல்லாம் கழுத்துக்கு தான் மனசுக்கு கிடையாது என்று சொல்லி இருக்கும் பார்த்திபன் காதல் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் பார்த்திபன் ஆரம்பத்தில் "கே. பாக்யராஜின்” உதவி இயக்குனராக இருந்து “புதிய பாதை” திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும், நடிகராகவும் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கி முதல் படத்திலேயே பல விருதுகளையும் வாங்கி குவித்து விட்டார். அதோடு முதல் படத்தில் தன்னோடு நடித்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை 11 ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது.

சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது பல வருடங்களாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. சினிமாவில் இவர்கள் இருவருடைய கேரக்டரின் பொருத்தம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தவும் இவர்களுக்குள் காதல் வொர்க் அவுட் ஆகி விடுகிறது. ஆனால் அதற்குப் பிறகு நிஜ வாழ்க்கையில் இவர்களுடைய வாழ்க்கை தொடங்கும் போகும் போது பல பிரச்சனைகள் வெடிக்க தொடங்கி விடுகிறது.
அதனாலேயே கருத்து மோதல்கள் ஏற்பட்டு சிலர் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் அந்த வரிசையில் பல பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களுடைய விவாகரத்து செய்தியை அறிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு முன்னோடி ஆக பல வருடங்களுக்கு முன்பே பலரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் பார்த்திபன் மற்றும் சீதா தங்களுடைய விவாகரத்து செய்தியை அறிவித்திருந்தனர். அந்த நேரத்தில் இது பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பார்த்திபன் தான் இயக்கிய டீன்ஸ் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பல சேனல்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி அளித்திருக்கிறார். அதில் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை குறித்து பார்த்திபன் பேசியதுதான் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதில் அவர் பேசுகையில் பொதுவாக எல்லோரும் என்னதான் இருந்தாலும் நமக்காக ஒரு பெர்சன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்காங்க.
நான் உட்பட எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறோம். ஆனால் எதையுமே ரீச் பண்ற வரைக்கும் (ஒரு இடத்திற்கு போற வரைக்கும்) தான் சுவாரஸ்யம் இருக்கும். எந்த பீக்கும் ரொம்ப நேரமா அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போன பிறகு மீண்டும் கீழே இறங்கி மீண்டும் மேலே வரும். அப்படி இருந்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் தான் நிறைய பிரிவு வருகிறது.
இதை சைக்காலஜிகலா யோசித்துப் பார்த்தா பொதுவா கணவன் மனைவி ரெண்டு பேரால் ஏழு வருஷம் தான் சேர்ந்து வாழ முடியும். கணவன் மனைவிக்குள் ஏழு வருட வாழ்க்கை என்று சொல்லுவாங்க. ஏழாவது வருடத்தில் ஒரு அரிப்பு வந்துவிடும்.அந்த அரிப்பு ரெண்டு பேரும் சேர்ந்து இருப்பதற்கான வாய்ப்பை கொடுக்காது. அதிகமான பிரச்சனை அந்த ஏழாவது வருடத்தில் தான் நடக்கும். அதில் தப்பிச்சுட்டா கொஞ்ச நாள் வாழ்க்கை போகும் அவ்வளவுதான்.
தாலி எல்லாம் மனசுக்கு கிடையாது கழுத்துக்கு மட்டும்தான். மனசு கடல் மாதிரி பெருசு. பொதுவா சிலர் 25 வருட 50 வருட வாழ்க்கை சந்தோஷமா போச்சுன்னு சொல்லுவாங்க அவங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுத்தா அவங்க உண்மைய சொல்லுவாங்க.. எனக்கு தெரிஞ்சு ஒரு சர்வே நடந்துச்சு அதில் 65 வயசு மதிக்கத்தக்க கணவன் மனைவிக்குள் தனித்தனியா கேள்வி கேட்டிருக்காங்க, அதில் அடுத்த ஜென்மத்தில் இவங்களே உங்களுக்கு புருஷனா அல்லது மனைவியா வரணுமா என்று கேட்டிருக்காங்க...
அதில் அதிகமானோர் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு இருக்காங்க. நிறைய பேரு என்ன பண்ணுவாங்கன்னா குழந்தை பிறந்த பிறகு நம்முடைய காதல் என்பது வேற இப்போ நமக்கு பிறந்த குழந்தைக்கு அம்மாவா இருக்கணும் என்று நினைப்பாங்க. இதுல நிறைய புருஷனோட பிரச்சினை இருக்கும், அல்லது பொண்டாட்டியோட பிரச்சனை இருக்கும். இதை அப்படியே சமாளிச்சிட்டு போறதுதான் நிறைய பேரோட பிரச்சனையா இருக்கும்.
அதுபோல இப்போ ஏன் அதிகமா விவாகரத்து வருதுன்னா ரெண்டு பேரும் அதிகமா சம்பாதிக்கிறது தான். நான் என்னுடைய பொண்ணு கிட்ட கூட இதே அட்வைஸை தான் சொல்லுவேன். நீ நல்லா சம்பாரி உன்னுடைய கிரியேட்டிவிட்டியை காட்டு. இந்த உலகத்தில் நீ எந்த இடத்தில் வேணும்னாலும் உன்னுடைய திறமையை காட்டு. ஆனால் இவர்தான் உன்னுடைய வாழ்க்கை என்று யாரையும் முடிவு செஞ்சு விடாதே என்று நான் என்னுடைய வாழ்க்கையை புரிந்து கொண்டதை என்னுடைய பொண்ணு கிட்ட சொல்லுறேன்.
காதல் என்பது நல்லா இருக்கும். ஆனால் கணவன் மனைவியான பிறகு அங்க நிறைய பிரச்சனை இருக்கும். கசப்புகள் அதிகமாய் இருக்கும். எத்தனையோ பிரச்சனைகள் வரும் ஒன்னு பினான்சியல் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது சக்ஸஸ் ஆகுவதில் பிரச்சனையாக இருக்கலாம். கணவன் சக்சஸ் மனைவிக்கோ அல்லது மனைவி சக்சஸ் கணவனுக்கோ படுக்கையில் இருக்கலாம்... ஆனால் வாழ்க்கையில் வேறு விஷயத்தில் இருந்தால் பிரச்சனை தான் என்று பார்த்திபன் பேசி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications