சுஹாசினிக்கு அழகினு திமிரு.. எனக்கே போன் பண்ணி சொன்ன வார்த்தை.. எந்த பொண்ணும் செய்யாதது! பார்த்திபன் ஓபன்
சென்னை: நடிகர் பார்த்திபன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகை சுஹாசினி மற்றும் இயக்குனர் மணிரத்தினம் குறித்து பேசி இருந்தார். அப்போது நடிகை சுஹாசினிக்கு தான்தான் அழகின்னு நினைப்பு என்று சொல்லி இருந்தார். தனக்கு ஒரு நாள் போன் பண்ணி சுஹாசினி சொன்ன வார்த்தை பற்றியும் அந்த நிகழ்ச்சியில் பார்த்திபன் வெளிப்படையாக பேசியிருந்தார்.
பொதுவாக ஒரு சிலர் மனதில்பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார்கள். நான் பேசியதால் எதிர் தரப்பில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்காமல் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள். அதே நேரத்தில் அடுத்தவர்களின் மனது புண்படாதபடி வார்த்தை மாயாஜாலங்களும் செய்து விடுவார்கள், அது போல ஒருவர்தான் பார்த்திபன். தன் மனதில்பட்டதை வெளிப்படையாக பேசுவது மட்டுமல்லாமல் பலருக்கும் புரியாத வகையிலும் பேசி விடுவார்.

பேச்சுத்திறமை
அவருடைய எதுகை மோனை கவிதை நயம் எல்லாம் கலந்து கேட்பவர்களுக்கு உடனே புரியாத வகையில் வார்த்தை விளையாட்டுகள் விளையாடிக் கொண்டிருப்பார். ஆனாலும் அவருடைய சுவாரசியமான பேச்சு பலருடைய பேவரைட். அவர் எழுதும் கவிதைகள் ஆரம்பத்தில் புரியாமல் இருந்தாலும் கடைசியில் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்து சினிமாவில் சாதித்துக் கொண்டிருக்கிறார்.
கடினமான உழைப்பு
பார்த்திபனுக்கு என்ன தான் திறமை இருந்தாலும், அதற்கேற்ற கடினமான உழைப்பு இருந்தாலும் அதற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதுதான் பலருடைய வருத்தமாகவும் இருக்கிறது. ஆனாலும் அதையெல்லாம் கிடைக்கும் நேரங்களில் மட்டும் வெளிப்படுத்திவிட்டு அடுத்தடுத்து தன்னுடைய வேலைகளில் கவனமாக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்திபன் கலந்து கொண்டார். அப்போது நடிகை சுஹாசினி குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுதான் இணையத்தில் பலருடைய கவனத்தை பெற்று வருகிறது.
சுஹாசினி பற்றி பார்த்திபன் பேட்டி
அதாவது அவர் பேசும்போது சுஹாசினிக்கு தான்தான் அழகின்னு திமிரு. எனக்கு ஒரு நாள் போன் செய்து பார்த்திபன் எனக்கு இன்னைக்கு 50 வயசுன்னு சொல்லுறாங்க. பொதுவாக பொண்ணுங்களுக்கு 28க்கு வயசுக்கு மேல ஆகிட்டாலே தன்னுடைய வயசை சொல்ல மாட்டாங்க. ஆனால் இவங்க அம்பது வயசுனு எனக்கு போன் பண்ணி சொல்லுறாங்கன்னா அப்போ அவங்க அழகு மேல எவ்வளவு திமிரு இருக்குன்னு நீங்களே பாத்துக்கோங்க.
பார்த்திபனின் காதல்
எனக்கு மணிரத்தினம் மீது காதல், மணிரத்தினத்திற்கு சுஹாசினி மீது காதல். இதுதாங்க வாழ்க்கை, என்று பார்த்திபன் பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமான நடிகை சுஹாசினி இப்போதும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகியாக நடித்து வந்த சுஹாசினி இப்போதும் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாமல் பல திறமைகளை கொண்ட சுஹாசினி குறித்து பார்த்திபன் பேசியது பற்றி உங்கள் கருத்து என்ன நண்பர்களே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications