வாத்தியார் அட்வைஸை மீறாத இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்! பிரபுதேவா அதிகமா சிரிக்காத காரணம் தெரியுமா?
சென்னை: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவாவின் பிறந்தநாள் இன்று தான்.
பிரபுதேவா என்னதான் வாழ்க்கையில் பெரிய அளவில் பிரபலமானாலும் அவர் அதிகமாக சிரிக்காததற்கு காரணம் அவருடைய மாஸ்டர் தானாம்.
நடன இயக்குனர், நடிகர், திரைப்பட இயக்குனர் என்று பல முகங்கள் இருக்கும் பிரபுதேவா பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் கீழே வருகிறது.

பிரபு தேவாவின் ஆரம்ப காலம்
திரைப்பட நடிகராகவும், நடன அமைப்பாளராகவும், திரைப்பட இயக்குனராகவும் இருக்கும் பிரபுதேவா பிறந்தது 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி மைசூரில் தானாம். பிரபுதேவா இந்த அளவிற்கு பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்ததற்கு காரணம் அவருடைய தந்தை சுந்தரர் தானாம். பிரபுதேவாவிற்கு ராஜசுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் என இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவருடைய நடிப்பு மற்றும் நடனத்தை பலருக்கும் வெள்ளித் திரையில் பார்த்து மகிழ்ந்து இருப்பீர்கள். அண்ணன் தம்பி மூன்று பேருமே சேர்ந்து கூட திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர்.

முதல் கனவு
நடிகர் பிரபுதேவா வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய முதலாவது நடனமே வெற்றி விழா திரைப்படத்தில் தானாம். இன்று வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் டான்ஸ் ஆடி இருக்கிறார். குறிப்பாக மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதையும் பெற்றிருக்கிறார்.

முதல் திரைப்படம்
டான்ஸ் மாஸ்டர் ஆகவும் ஒரு டான்ஸராகவும் இருந்த பிரபுதேவா முதல் முதலாக 1989 ஆம் ஆண்டு வெளியான இந்து என்ற திரைப்படத்தில் ரோஜாவோடு இணைந்து நடித்து முழு நேர கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். தான் ஒரு ஹீரோ மட்டுமல்ல இயக்குனர் என்று சொல்லும் அளவிற்கு போக்கிரி, வில்லு போன்ற திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். அதுவும் அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில்," ராஜா ராஜாத்தி" எனும் பாடலில் ஒரு குழுவில் ஆடும் நபராகத்தான் இவர் அறிமுகமாகி இருக்கிறார்.

நடன திறமை
சமீபத்தில் வெளியான பஹிரா அவரது 55 ஆவது படமாகும். அடுத்த ப்ளாஷ் பேக்,வுஃல்ப், என பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோவாக பிஸியாக ஓடிக்கொண்டிருந்தாலும், நடன இயக்குனராக வாய்ப்பு தேடி வந்தால் அதையெல்லாம் நான் விட்டு விட மாட்டேன் நானே வருகிறேன் என்று உடனே எந்த பாடலாக இருந்தாலும் அதிக பட்சம் மூன்று நாட்களுக்குள் அதற்கு நடனம் அமைத்துக் கொடுத்து விடுவது தான் இவருடைய ஸ்டைலாக வைத்துக் கொண்டிருக்கிறாராம்.

மெழுகு சிலை
ஆரம்பத்தில் நடன இயக்குனராக இவர் கலக்கி கொண்டிருக்கும்போது நடிகராக வாய்ப்பு வந்ததும், அதை டக்கென்று முட்டி கெடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து டைரக்ஷன் மீது இவருக்கு ஆசை வந்த காரணம் இவருக்கு பொறுப்பு எடுத்துக்கிறது ஒர்க் டென்ஷன் எல்லாம் ரொம்பவே பிடிக்குமாம் என்பதாலே இவர் இயக்குனராகவும் மாறி இருக்கிறார். மும்பையில் உள்ள lonavala wax மியூசியத்தில் இவருடைய மெழுகு சிலை இருக்கிறது.

தாடிக்கு காரணம்
இவர் எப்போதும் அதிகமாக தாடியோடு இருப்பதற்கு காரணம் பிரபுதேவா சின்ன வயசுலே டான்ஸ் மாஸ்டர் ஆகிட்டாதால் கொஞ்சம் தாடி இருந்தால் வயசு அதிகமாக இருப்பாங்கன்னு எல்லாரும் மதிப்பாங்கன்னு நினைச்சு தான் அப்பவே தாடி வச்சிக்க ஆசைப்பட்டாராம். அப்போ உனக்கு தாடி நல்லா இருக்குடா வைடா என்று இவர் அம்மா சொன்னதும் உடனே அதை இப்ப வரைக்கும் பின்பற்றி வருகிறாராம்.

சின்ன புன்னகை போதும்
அதுமட்டுமில்லாமல் இவர் எப்போதும் தன்னடக்கமாக சின்னதாக சிரிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறதாம். முதல் முதலாக இவர் தேசிய விருது வாங்கியதும் அதை தனது பரதநாட்டிய மாஸ்டர் தர்மராஜிடம் சொல்லி சந்தோஷப்பட்டு இருக்கிறார். அதற்கு அவர் விருதுகள் எல்லாம் வரும் போகும், நீ உன் வேலையை சரியாய் செய் என்று கூறினாராம். அன்னையிலிருந்து எவ்வளவு பெரிய மகிழ்ச்சி கிடைத்தாலும் எல்லாவற்றுக்கும் சின்னதா புன்னகையோடு கடந்து போய்க் கொண்டிருக்கிறாராம்.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications