Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எத்தனை பேருக்கு இப்படி நடக்கும்னு தெரியல! மேடையிலேயே கண் கலங்கிய நடிகர் பிரித்விராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ், மலையாளம் என பல மொழிகளில் பிசியான நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வரும் நடிகர் பிரித்விராஜ் சமீபத்தில் தன்னுடைய அம்மாவான நடிகை மல்லிகா சுகுமாரனுக்காக நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் தன்னுடைய அம்மா பற்றியும் தன்னுடைய அப்பா இறந்தபோது தன்னுடைய அம்மாவின் நிலைமை எப்படி இருந்தது என்பது பற்றியும் உருக்கமாக பிரித்விராஜ் பேச பேச அவருடைய அம்மா கண்கலங்கி இருக்கிறார். இதற்கு அதிகமானோர் ஆறுதல்கள் கூறி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Actor Prithiviraj participated in an event held for his mother actress Mallika Sukumaran

அந்த வகையில் நடிகர் பிரித்விராஜியின் குடும்பத்தில் அனைவருமே திரையுலகை சார்ந்தவர்கள் தான். பிரித்திவிராஜ் மலையாளத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான நந்தனம் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆகி இருந்த நிலையில் அதற்கு பிறகு 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் கிளாஸ் மேட்ஸ் என்ற படம் வெளியாகி அவருக்கு பெரிய அளவில் திருப்புமுனையாக அமைந்தது.

அதற்கு பிறகு இயக்குனர் கே வி ஆனந்த் பிரித்விராஜை தமிழுக்கு அழைத்து வந்தார். தமிழில் கனா கண்டேன் என்ற திரைப்படத்தில் வில்லனாக பிரித்விராஜ் அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து சத்தம் போடாதே, மொழி, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, ராவணன், காவிய தலைவர் என பல திரைப்படங்களில் அழுத்தமான கேரக்டரை தேர்வு செய்து நடித்து வந்த பிரித்விராஜ் மலையாளத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் என்ற திரைப்படத்தை இயக்கி பெரிய அளவில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இயக்குனராக வெற்றி பெற்றிருந்தார். அதை தொடர்ந்து ப்ரோ டாடி என்று காமெடி திரைப்படத்தின் மூலமாகவும் ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஆன நிலையில் தான் சமீபத்தில் பிரித்விராஜின் அம்மாவான நடிகை மல்லிகா சுகுமார் சினிமா துறையில் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்று நடத்தி நடத்தப்பட்டு இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரித்விராஜ் தன்னுடைய அம்மா குறித்து பெருமையாக பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், நான் பார்த்ததிலேயே ரொம்பவும் வலிமையான பெண் என்றால் என்னுடைய அம்மா மல்லிகா சுகுமாரன் தான். சினிமாவில் 50 ஆண்டுகள் பணியாற்றுவது ஒன்றும் அதிசயம் கிடையாது.

ஆனால் 25 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி ஒரு குடும்பத் தலைவியாக இருந்துவிட்டு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து தனக்கான இடத்தை பதிவு செய்வது எளிதான காரியம் கிடையாது. அதற்காக நான் அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அது போல உலகில் எத்தனை பேருக்கு எனக்கு கிடைத்த மாதிரி ஒரு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று தெரியவில்லை. நான் என்னுடைய அம்மாவோடு இணைந்து நடிக்கவும் செஞ்சிருக்கேன், அவருடைய அவர் நடித்த திரைப்படத்தை தயாரித்து இயக்கவும் செய்திருக்கிறேன்.

Actor Prithiviraj participated in an event held for his mother actress Mallika Sukumaran

இந்த மாதிரியான ஒரு பெருமை எனக்கு கிடைத்திருப்பது பெரும் பாக்கியம் என்று நினைக்கிறேன். நான் என் தாயோடு நடிக்கும் போது மிகவும் திறமையான கலைஞர் என்று உணர்கிறேன். அதுபோல என்னுடைய தந்தை இறப்பு என்னுடைய மனதில் எப்போதும் இருக்கும். நான் தந்தையின் அஸ்தியோடு எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய அம்மா இன்னொரு காரில் வந்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் என்னுடைய மனதில் தோன்றியதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான்... அம்மா இப்போது என்ன செய்வார்? என்று தான் எனக்கு கேள்வி வந்து கொண்டே இருந்தது. ஆனால் அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது, நானும் என்னுடைய அண்ணனும் அப்பா வடிவில் உங்கள் முன்பு இருக்கிறோம் என்று குரல் தழுதழுக்க பிரித்விராஜ் பேச அதைக் கேட்டு அவருடைய அம்மா நடிகை மல்லிகா சுகுமாரன் கண்கலங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+