வாடா போடான்னு பேசியதால் வந்த வினை! ரஜினி வெளிப்படையாக சொன்ன வார்த்தை.. ராதாரவி உடைத்த ரகசியம்
சென்னை: நடிகர் ராதாரவி தான் முத்து திரைப்படத்தில் நடிக்கும் போது ரஜினிகாந்த் குறித்து வாடா போடா எத பேசியதால் அசிஸ்டன்ட் டைரக்டர் தன்னிடம் சொன்ன வார்த்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதோடு ரஜினிகாந்தின் கேரக்டர் குறித்தும் அந்த பேட்டியில் ராதாரவி மனம் திறந்து பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக ஒரு திரைப்படத்தில் நாம் பார்க்க விஷயங்கள் உருவாக்குவதற்கு பல போராட்டங்களும் தடங்கல்களும் ஏற்பட்டிருக்கும். அதையும் மீறி தான் ஒரு சில காட்சிகள் மக்கள் மனதில் தனி இடம் பிடித்து விடுகிறது. ஒரு சில காட்சிகள் உருவாக்கும் போது நடிகர்கள் அல்லது நடிகைகளால் தடங்கல்கள் ஏற்பட்டு இருக்கும். அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பல வருடங்கள் கழித்து பேசும் போது தான் இப்படி எல்லாம் கூட நடந்து இருக்கா? என்று தெரியவந்திருக்கும்.

அந்த மாதிரி தான் முத்து திரைப்படத்தில் நடிகர் ராதாரவி ரஜினியோடு நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் ராதா ரவி பேசுகையில் நான் முத்து படத்தில் ரஜினிகாந்த்தை வாடா போடா என்று திட்டுற மாதிரி சீன் இருக்கும். அந்த படத்தில் நான் அவரை திட்டியதை பார்த்து அசிஸ்டன்ட் டைரக்டர் என்னிடம் வந்து சார் நீங்க இப்படி திட்டுவது நல்லா இல்ல..
ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய நடிகர் அவரை போய் நீங்க வாடா போடான்னு பேசுறீங்களே என்று கேட்க நான் இது உங்களிடம் யார் சொன்னா என்று கேட்டேன் அதற்கு அவர் இது நானாகத்தான் முடிவு எடுத்து பேசுகிறேன் என்று சொன்னார். அதற்கு நான் எப்படித்தான் பேச வேண்டும் என்று நீங்க சொல்லுஙக என்று கேட்டேன் அதற்கு அவர் வாயா பொய்யான்னு பேசலாம் என்று சொன்னார் .
உடனே நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ரஜினி இடம் போய் நான் உங்களை சீனில் வாடா போடான்னு திட்டுவதால் உங்களுக்கு எதுவும் வருத்தம் இருக்கிறதா? என்று கேட்டேன்? அவர் அப்படியெல்லாம் இல்லையே நீங்க தாராளமா பேசலாம் யாரு என்ன சொன்னா என்று கேட்க, நான் அசிஸ்டன்ட் டைரக்டர் சொன்னதை சொன்னேன் உடனே அவர் அவர் ஏதோ தெரியாம சொல்லி இருப்பார் ஆனால் நீங்கள் நீங்களாகவே இருங்கள் அதுதான் உங்களுக்கும் நல்லது படத்துக்கும் நல்லது என்று எனக்கு சப்போர்ட் செய்த பிறகு நான் படத்தில் தொடர்ந்து நடித்தேன்.
அதற்குப் பிறகு பல வருடம் கழித்து தான் படையப்பா திரைப்படத்திலும் நான் ரெண்டு பேரும் நடித்து இருந்தோம். பொதுவாக பெரிய நடிகர்களை அவமானமாக பேசினால் படம் சரியாக ஓடாமல் போய்விடுமோ என்று சிலர் நினைக்கிறார்கள். அதனால் தான் இப்படி எல்லாம் கூட பேசுகிறார்கள் என்று அந்த பேட்டியில் நடிகர் ராதாரவி பேசியிருக்கிறார்.
இதுபோல இன்னொரு பேட்டியிலும் சில மாதங்களுக்கு முன்பு ரஜினி குறித்து ராதா ரவி பேசி இருப்பார். அதில் அருணாச்சலம் படத்தை முதலில் வாசு இயக்க இருந்தபோது ராதா ரவிதான் வில்லனாக நடிக்கப் போவதாக இருந்ததாம். அந்த நேரத்தில் ராதா ரவி 4வதாக ஒரு கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவருக்கு ரஜினிகாந்த் போன் செய்து உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூப்பிட ராதாரவியும் போயிருந்தாராம்.
அப்போது அருணாச்சலம் படத்தை இயக்குனர் சுந்தர் சி தான் இயக்கப் போகிறார். ஏற்கனவே இதில் மூன்று நடிகர்கள் வில்லன்களாக நடிப்பதாக இருக்கிறது. இதில் நீங்களும் இருந்தா நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன் என்று சொன்னார். அதற்கு பிறகு எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தான் நான் அருணாச்சலம் படத்தில் நடிக்காமல் போய்விட்டது என்று ராதாரவி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ராதா ரவி ரஜினிகாந்த் உடன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் படையப்பா படத்தில் அவருடைய நடிப்பு அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டு இருக்கும். ஆரம்பத்தில் பணம் இருக்கிறது என்று சொல்லி தன்னுடைய தங்கச்சி குடும்பத்தை அவ்வளவு தாங்கும் ராதா ரவி பிறகு தன்னுடைய தங்கச்சி குடும்பத்தில் பணம் இல்லை என்பதை தெரிந்ததும் கேரக்டர் மாறுவது, பிறகு ரம்யா கிருஷ்ணன் படையப்பாவை தான் கல்யாணம் செய்வேன் என்று சொன்னதும் தன்னுடைய மகளுக்காக படையப்பாவை மாப்பிள்ளை கேட்டு தன்னுடைய தங்கையிடம் பேசுவது பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வது என்று அந்த படத்தில் அவர் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்தார் என்றே சொல்லலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications