மோகன்லால் மாதிரி யாருமே கிடையாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நான் பார்த்தேன்! வெளிப்படையாக பேசிய ராதாரவி
சென்னை: நடிகர் ராதாரவி மலையாள சினிமா உலகில் பெண் நடிகைகளுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதோடு நடிகர் மோகன்லால் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாகவே சினிமா நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமிரல்கள், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் அதிகமாக இருக்கிறது. அதிலும் கேரளா சினிமாவில் பல நடிகைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை, சினிமா வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள், பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டியது இருக்கிறது என்று ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

அதற்கு பிறகு மலையாள நடிகைகள் மட்டுமல்லாமல் தமிழ் நடிகைகளும் அது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்கள். தொடர்ச்சியாக கமிட்டி இடம் பல நடிகைகள் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார்கள் கொடுத்து வருகின்றனர். இது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இது குறித்து நடிகர் ராதாரவி BBT cinema என்ற youtube சேனலில் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் மலையாள சினிமாவில் மோகன்லாலை குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள். எதற்காக இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மோகன்லால் தப்பு செய்திருந்தால் அவர் பெயரை தெளிவாக சொல்லலாம். ஆனால் யாருமே அவர் மீது கம்ப்ளைன்ட் செய்யவில்லை. ஆனாலும் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து மோகன்லாலை டார்கெட் செய்கிறார்கள்.
இது அவருக்கு எதிராக நடக்கும் சதியாக கூட இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. யாராக இருந்தாலும் முடியாது என்று சொன்னால் எந்த பிரச்சனையும் வராது. நான் இரண்டு பத்திரிகைகள் படிக்கிறேன் அந்த பத்திரிகைகள் எனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை வேண்டாம் என்று நிறுத்தும் உரிமை எனக்கு இருக்கிறது. அதுபோல நான் ஸ்கூல் படிக்கும்போது அதிகமாக அடிவாங்கி இருக்கிறேன் அப்போ அதை வந்து வீட்டில் நான் சொன்னது கிடையாது.
அதுபோல எதையும் வேணும் என்று சொன்னால்தான் யாரும் நெருங்குவார்கள். வேண்டாம் என்றால் நெருங்க மாட்டார்கள்.. இது எல்லா விஷயத்திற்கும் பொருந்தும். அதுபோல நான் மலையாள சினிமாவிலும் நடித்திருக்கிறேன். ஒரு படத்தில் நான் சூட்டிங் போயிருந்த நேரத்தில் மோகன்லால் பாலக்காட்டில் இருக்கிறார் என்று சொன்னார்கள். எனக்கு அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்ததால் அவர் இருக்கும் இடத்திற்கு போய்விட்டேன்.
அங்கு போனதும் அவர் நீங்க என்ன சாப்பிடுறீங்க என்று என்னிடம் அவ்வளவு அன்பாக பேசினார். அதற்கு பிறகு தான் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள் இந்தியாவிலேயே மோகன்லால் போல ஒருவரை பார்க்கவே முடியாது அவரோடு இருப்பவர்களுக்கு அவர் அவ்வளவு உதவி செய்வார் என்று சொன்னார்கள். அதுபோல நானே என் கண்ணால் பார்த்தேன், அவர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு போகிறார் என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லாரையும் தன் காரில் ஏறிக்கொள்ளுங்கள் என்று கூட்டிக்கொண்டு போவார்.
எந்த முன்னணி நடிகரும் அதுபோல செய்ய மாட்டார்கள். இதுபோல கூட நடிப்பவர்கள், சின்ன சின்ன வேலை செய்பவர்களை பெரிய நடிகர்கள் கூட்டிக்கொண்டு போய் நான் பார்த்ததே கிடையாது. அதனால் எனக்கு மோகன்லால் பற்றி சில கம்பளைண்ட் கேள்விப்படும்போது சங்கடமா இருக்கு. அவர் யாரை தொட்டார்... யாரை செஞ்சார் என்று யாருமே சொன்னது இல்ல. ஆனா அவரை லிஸ்ட் அவுட் பண்ணுறாங்க. இது ப்ரீ பிளானா என்று தெரியவில்லை என்று அந்த பேட்டியில் ராதாரவி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications