நடிகர் தனுஷ் மூலம் கடைசி ஆசையை நிறைவேற்றிய நடிகர் ரகுவரன்.. தோளில் கை போட்டு சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் ரகுவரன் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து, அவர் மறைந்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து அவருடைய சகோதரர் நடிகர் ரகுவரன் பற்றி பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் ரகுவரன் கடைசி நேரத்தில் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் எதற்காக நடித்தார் என்றும், நடிகர் தனுஷோடு என்ன பந்தம் என்றும் பேசி இருக்கிறார் அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சினிமாவில் வில்லன் நடிகர்கள் என்றால் கட்டு மஸ்தான உடல் அமைப்பும், பெரிய மீசையும், மிரட்டும் பார்வையும், கரடு முரடான குரல் போன்ற இருந்தால்தான் வில்லன்கள் என்று இருந்த சமயத்தில் இந்த தகுதிக்கு எதிர்மறையாக ஒல்லியான தேகத்தோடு மீசை இல்லாத முகத்தில் ஆங்கில இந்தியன் போன்ற குரல் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக உயர்ந்தவர் தான் நடிகர் ரகுவரன்.
ஆரம்பத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் டப் கொடுக்கும் வில்லன் கேரக்டராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்த நடிகர் ரகுவரன் அதிகமாக ரஜினியோடு நடித்திருக்கிறார். விஜய், அஜித், அர்ஜுன், சரத்குமார் என்று பல முன்னணி நடிகர்களோடும் ரகுவரன் நடித்து அசத்தியிருந்தார்.
அது மட்டுமல்லாமல் அவர் நடிக்கும் படங்களில் எந்த கதாபாத்திரமோ அந்த கதாபாத்திரமாகவே நிஜத்திலும் மாறிவிடுவாராம். ஒரு கொடூர வில்லன் என்றால் வீட்டிலேயே கூட பல நேரங்களில் அப்படித்தான் இருப்பாராம். சைலண்டான கேரக்டரில் என்றால் அமைதியாக மாறி விடுவாராம். அந்த அளவுக்கு ஹோம் ஒர்க் செய்து தான் தன்னுடைய நடிப்பை திரையில் காட்டி இருக்கிறார்.

நடிப்பில் இவ்வளவு காதல் வைத்திருக்கும் நடிகர் ரகுவரனுக்கு நடிகை ரோகினி மீது காதல் வந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். அவருக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார். ஒரு கட்டத்தில் ரகுவரனுக்கும் ரோகிணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் ரகுவரனுக்கு அவருடைய மகன் மீது அதிகமாக பாசம் வைத்திருந்தாராம்.
சனிக்கிழமை வந்துவிட்டால் தன்னுடைய மகனை ரகுவரினிடம் விட்டு செல்வாராம் ரோகிணி. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தான் வந்து கூட்டிட்டு போவாராம். மகன் வரும்போது அப்பா என்று துள்ளிக் கொண்டு சந்தோசமாக வருவாராம். ஆனால் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. மகனை அழைத்து வரவே இல்லையாம் ரோகிணி. இது ரகுவரனுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்து இருக்கிறது. இப்படியே போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் அவர் நடித்த கடைசி படமான யாரடி நீ மோகினி படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் அவரை தேடி போயிருக்கிறார்.
அப்போது நடிகர் தனுஷ் தோலில் கையை போட்டு நீ பார்ப்பதற்கு என்னுடைய மகன் மாதிரியே இருக்க அதனால இந்த படத்தில் கண்டிப்பா நடிக்கிறேன் என்று சொன்னாராம். இந்த அளவிற்கு தன் மகன் மீது உயிரையே வைத்திருந்தார் என்று நடிகர் ரகுவரனின் தம்பி பேட்டியில் பேசியிருக்கிறார். அத்தோடு ரகுவரன் நடித்த கடைசி திரைப்படத்தில் தன்னுடைய மகனோடு உள்ள பாசத்தை அப்படியே வெளிக்காட்டி இருந்தார் என்றும் கூறியிருக்கிறார். இப்போதும் பலர் அந்த திரைப்படத்தை பார்க்கும் போது ரகுவரனை மிஸ் பண்ணி கொண்டு தான் வருகிறார்கள்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications