முதல்வர் போன் பண்ணுனாரு, ஆனால்! சத்யா சீரியல் நடிக்கும் போது ராஜசேகர் இறந்தாரு! டீ குடிக்க கூட காசு இல்ல, மனைவி உருக்கம்
சென்னை: பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்த நடிகர் ராஜசேகர் சீரியல்களிலும் நடித்திருந்தார். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நிலை குறைபாட்டால் காலமானார். அவருடைய மறைவுக்கு பிறகு அவர் லோன் வாங்கி கட்டிய வீட்டை பேங்கில் ஜப்தி செய்து விட்டார்கள். இந்த நிலையில் இருப்பதற்கு கூட இடமில்லாமல் அவருடைய 65 வயதான மனைவி கண்கலங்க பேட்டியில் பேசி இருக்கிறார்.
சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பெரிய அளவில் பெயர் வாங்கிய நடிகர் ராஜசேகர் அதற்கு முன்பு நிழல்கள் உட்பட பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அவருடைய எதார்த்தமான நடிப்பு பலருக்கும் பிடிக்கும். ஆனால் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது உடல்நிலை குறைபாட்டால் காலமானார். ராஜசேகருக்கு இறக்கும்போது 65 வயது அப்போதுதான் அவர் பேங்கில் லோன் வாங்கி ஒரு வீடு கட்டி இருந்தார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் வைப்பதற்கு முன்பே நெஞ்சு வலியால் ராஜசேகர் இறந்து விட்டார்.

கனவு வீடு
ராஜசேகர் தன்னுடைய மனைவிக்காக ஆசையாக வாங்கிய வீட்டில் அவருடைய மனைவி ராஜசேகர் மனைவி இறப்பிற்கு பிறகு வாழ்ந்து வந்தார். ஆனால் பேங்கில் தவனை தொகை செலுத்த சொல்லி கூறி இருக்கின்றனர் ஆனால் வயதான காலத்தில் குழந்தைகள் யாருடைய அரவணைப்பு இல்லாததால் ராஜசேகர் மனைவி தாராவால் பணத்தை செலுத்த முடியாமல் இருந்திருக்கிறது. பிறகு ஏற்கனவே இருந்த ஒரு வீட்டை விற்று பாதி தொகையை கொடுத்திருக்கிறார். ஆனாலும் முழு தொகையை செலுத்தாத காரணத்தால் அந்த வீடு ஜப்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் ராஜசேகர் மனைவி பேட்டி
இந்த நிலையில் சமீபத்தில் தாரா ஒரு பேட்டியில் பேசும்போது எனக்கு என்னுடைய கணவர் மறைவுக்குப் பிறகு யாருடைய துணையும் இல்லை. நான் இப்போது இருந்த வீட்டையும் இழந்து நடுத்தெருவில் தான் இருக்கிறேன். சொந்த பந்தங்களும் இல்லை, குழந்தையும் இல்லை என்பதால் நான் இப்போ அனாதையாக இருக்கிறேன். பத்து ரூபாய் யாராவது தந்தால் கூட எனக்கு பெருசாக இருக்கிறது. ஒரு டீ வாங்கி கொடுத்தாலும் எனக்கு பெரிய விஷயமாகத்தான் தெரிகிறது.
என்னுடைய வீட்டை ஜப்தி செய்வதற்காக போலீஸ்காரர்களும் பேங்க் ஆபீஸர்களும் வந்திருந்த போது அந்த விஷயம் எப்படியோ முதலமைச்சருக்கு தெரிந்திருக்கிறது அவர் பூச்சி முருகனிடம் சொல்லி எனக்கு போன் செய்ய சொல்லி இருக்கிறார். பூச்சி முருகனும் அந்த நேரத்தில் எனக்கு போன் செய்திருக்கிறார். ஆனால் என்னுடைய செல்போனில் சார்ஜ் இல்லாததால் நான் போனை சார்ஜ் போட்டு விட்டு வெளியே பிரச்சனை நடந்த இடத்தில் இருந்தேன். அதனால் போனை எடுக்க முடியவில்லை.

முதல்வர் எடுத்த ஆக்ஷன்
பிறகு இரண்டு நாட்கள் கழித்து தான் எனக்கு பூச்சி முருகன் தான் போன் செய்தது என்ற விஷயமே தெரியும். அதனால் நான் திருப்பி போன் செய்தேன் அதற்கு பூச்சி முருகன் அந்த போனை எடுக்கவில்லை ஒருவேளை அவர் பிசியாக இருக்கிறாரா என்று தெரியவில்லை. முதலமைச்சர் எவ்வளவோ பிஸியாக இருக்கிறார் சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நேரத்திலும் எப்படியோ என்னுடைய விஷயத்தில் கேள்விப்பட்டு எனக்காக பேச சொல்லி இருக்கிறார். ஆனால் என்னுடைய இந்த விஷயத்தில் அவர் தலையிட்டால் மட்டும்தான் எனக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
நான் என்னுடைய கடைசி காலத்தில் நிம்மதியாக இருப்பதற்கு ஒரு வீடு கிடைத்தால் புண்ணியமாக போகும். எனக்கு இப்போது 65 வயதாகி விட்டது என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. அதனால் முதலமைச்சர் எனக்கு உதவி செய்ய வேண்டும், என்னுடைய கணவர் உடன் நாங்கள் பல வருடங்களாக வாடகை வீட்டில் தான் வசித்து வந்தோம் அப்போது உனக்காக ஒரு வீடு கட்டி தரேன் நான் போன பிறகு நீ யாரிடமும் கையேந்தி நிற்கக்கூடாது என்று சொன்னார். அவர் வாழ்ந்த வரைக்கும் நாங்கள் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தோம்.

நடிகர் ராஜசேகர் இறப்பு
அவருடைய சம்பாத்தியம் முழுவதையும் என்னிடம் தந்து விடுவார். தினமும் சூட்டிங் கிளம்பும் போது கையில் பத்து ரூபாய் மட்டும் தான் கேட்பார். அதுவும் பேப்பர் வாங்குவதற்காக தான் வாங்குவார். அவர் சத்யா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் எனக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாரு. உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம் ஆனாலும் அவர் இறந்துட்டாரு என்று அந்த பேட்டியில் கண்கலங்கி அழுதப்படியே ராஜசேகர் மனைவி தாரா பேசி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications