நடிகர் ராஜேஷின் கடைசி நொடியில் நடந்தது இதுதான்! கண்ணில் தெரிந்த மாற்றம்.. அதிர்ச்சி தகவல் சொன்ன தம்பி
சென்னை: நடிகர் ராஜேஷ் இன்று உடல்நிலை குறைபாட்டால் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பு கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அவருடைய தம்பி செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது நேற்று காலையில் இருந்து எல்லோரையும் உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார், எனவும் அதற்குப் பிறகு இன்று திடீரென அவருடைய உடலில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் ராஜேஷின் தம்பி கண்கலங்க பேசி இருக்கிறார்.
நடிகர் ராஜேஷ் பாலச்சந்தர் இயக்கிய "அவள் ஒரு தொடர் கதை" திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவருக்கு கிடைத்தது சின்ன வேடம் தான். ஆனாலும் அதற்கு பிறகு நடிகர் பாக்கியராஜின் கன்னி பருவத்திலே திரைப்படத்தின் மூலமாக அவருக்கு செகண்ட் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் அவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

நடிகர் ராஜேஷ் திறமைகள்
அதேபோல நான் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் நல்ல வேடமாக இருந்தால் நான் எந்த கேரக்டரிலும் நடிப்பேன் என்று குணசித்திர வேடங்களிலும், நடிகராகவும் ஹீரோவாகவும் நடித்து வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு அந்த ஏழு நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை உட்பட பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்தன. நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞர், எழுத்தாளர், முற்போக்கு சிந்தனையாளர், சின்னத்திரை நடிகர் என்று பல திறமை கொண்ட ராஜேஷ் யூடியூப் தொடங்கி அதில் ஆரோக்கியம் மற்றும் ஜோதிடம் தொடர்பான பல தகவல்களை பகிர்ந்து வந்தார். ஆனால் இன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவர் காலமாகி இருக்கிறார்.
கண்கலங்கிய தம்பி
இது குறித்து ராஜேஷின் நண்பர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து ராஜேஷ் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜேஷின் உடன்பிறந்த தம்பி நேற்று என்ன நடந்தது என்பது பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது நேற்று காலையில் இருந்து அண்ணன் எல்லோரையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மாலையில் நான் தூங்க போறேன் என்று சொல்லிவிட்டு சீக்கிரமாக தூங்க போய் விட்டார்.
நடிகர் ராஜேஷ் தம்பி பேட்டி
ஆனால் இன்று காலையில் சீக்கிரமாக எழுந்து எனக்கு உடலில் ஏதோ செய்கிறது ஆக்சிஜன் லெவல் குறைந்த மாதிரி இருக்கிறது, நம்ம ஃபேமிலி டாக்டர கூட்டிட்டு வா என்று சொன்னார். நானும் டாக்டருக்கு போன் செய்திருந்தேன். என்னுடைய அண்ணனின் மகன் தான் அண்ணனை ஆம்புலன்சில் கூட்டிக் கொண்டு போனார். பாதி வழியில் போகும் போது கண்கள் இரண்டும் மேலே பார்த்து சொருக ஆரம்பித்திருக்கிறது.
நடிகர் ராஜேஷின் கடைசி நொடி
அண்ணனின் கண்களை பார்த்ததும் எங்களுக்கு பயம் வந்துவிட்டது. அண்ணனுக்கு இதுபோன்று நடந்தது இல்லையே என்னாச்சோ என்று பதறி கொண்டு இருந்தோம். ஆனால் பாதியில் போகும் போது உயிர் போய்விட்டது. அடுத்த வாரம் அண்ணனின் மகனுக்கு எஙகேஜ்மென்ட் நடக்க இருந்தது என்று ராஜேஷின் தம்பி கண் கலங்க பேசி இருக்கிறார். அதேபோல நடிகர் பார்த்திபன் நடிகர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.
நடிகர் பார்த்திபன் பேட்டி
அப்போது தனக்கும் ராஜேஷ் சாருக்கும் பல வருட நட்பு உண்டு. சமீபத்தில் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்தில் அவரை சந்தித்தபோது 99 வயது வரை எப்படி வாழ வேண்டும் என்று உங்களுக்கு சொல்லித் தருகிறேன் என் வீட்டுக்கு வாருங்கள் என்று சொன்னார். அவர் எனக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு உடல் ஆரோக்கியம் பற்றிய குறிப்புகள் தான் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய தலை முடி கூட இன்னும் வெள்ளையாகவில்லையே என்று நான் வியப்புடன் அவரிடம் கேட்டுக் கொண்டே இருப்பேன் என்று பார்த்திபன் எமோஷனலாக பேசியிருந்தார்.
மகனுக்கு எங்கேஜ்மென்ட்
மேலும் ராஜேஷ் பற்றி பார்த்திபன் பேசும்போது, ராஜேஷ் சார் மரணமடைந்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நாங்கள் எப்போது சந்தித்தாலும் ஆரோக்கியம் பற்றி தான் பேசிக் கொண்டிருப்போம். மகனுக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது இந்த சூழ்நிலையில் அவர் மரணம் அடைந்தது அவருடைய குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துவிட்டது. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications