"ரஜினி”யா இப்படி செஞ்சாரு? அந்த "பிரபலம்” சூழ்ச்சியால் கால் உடைந்த பொன்னம்பலம்.. வீடு கூட போயிட்டாமே
சென்னை: வில்லன் நடிகராக அனைவருக்கும் பிரபலம் அடைந்த நடிகர் பொன்னம்பலம் தான் ஸ்டண்ட்மேனாக இருக்கும்போது தனக்கு நடந்த நிகழ்வு குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.
கேமராவுக்கு முன்னால் பலருடைய கேரக்டர் பயங்கரமாக இருந்தாலும் அதற்கு பின்னால் அவர்களுக்கு கிடைத்த வலியும் வேதனையும் எவ்வளவு கொடியது என்று நடிகர் பொன்னம்பலம் பேட்டியில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் முக்கியமான நடிகர் தான் பொன்னம்பலம். இவர் சினிமாக்களில் பார்க்கும்போது பார்ப்பவர்கள் மிரளும் வகையில் தன்னுடைய கணீர் குரலாலும், மிரட்டலான நடிப்பாலும் பலரையும் பயமுறுத்தி இருக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் இவருடைய கேரக்டர் என்ன மாதிரி என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.
இந்த நிலையில் நடிகராக பொன்னம்பலம் பிரபலம் அடைவதற்கு முன்பு அவர் ஆரம்ப காலகட்டத்தில் ஸ்டண்ட்மேனாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாராம். அந்த நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் மற்றும் ஏமாற்றங்கள் தனக்கு கிடைத்த உதவி குறித்து உருக்கமாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
பொதுவாக நாம் வெளியே தெரியும் நடிகர்களை தான் அதிகமாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நிஜ நடிகர்கள் என்றால் ஸ்டண்ட்மென்கள்தான். அவர்கள்தான் சினிமாவில் அடி வாங்கி, மிதி வாங்கி பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கான சம்பளம் அவர்களுக்கு பெரியதாக கிடைக்கவில்லை பல நேரங்களில் தங்களுடைய உயிருக்கும், உடலுக்கும் ஆபத்து ஏற்படுவது என்று தெரிந்துமே இந்த வேலையில் பலர் தொடர்கின்றனர்.
அந்த மாதிரி ஒரு நபராக தான் பொன்னம்பலம் ஆரம்ப காலத்தில் இருந்திருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான உழைப்பாளி திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காக முதலில் பொன்னம்பலத்திற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் இயக்குனர் வாசுதானம். இயக்குனர் வாசுவிற்கும் பொன்னம்பலத்திற்கும் நல்ல பழக்கம் இருப்பதால் அந்த வாய்ப்பு கிடைத்ததாம்.
ஆனால் அந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த விக்ரம் தர்மாவிற்கும் பொன்னம்பலத்திற்கும் இடையே பிரச்சனை இருந்ததாம் அதனால் உழைப்பாளி படத்தில் அவர் நடிக்க கூடாது என்று விக்ரம் தர்மா நினைத்தாராம். இதற்காக பொன்னம்பலத்திற்கு மட்டும் தனியாக சண்டைக்காட்சி வைத்து அதில் பொன்னம்பலம் விழும் வலையில் ஒழுங்காக கட்டாமல் விட்டுவிட்டாராம்.
இதனால் கீழே விழுந்ததும் பொன்னம்பலத்திற்கு ஒரு கால் முழுவதும் உடைந்து விட்டதாம். அதற்கு பிறகு ரஜினி இடமும், வாசுவிடமும் பொன்னம்பலத்தை குறித்து தப்பு தப்பாக கூறி படத்தில் வேறு ஒரு ஆளை போட்டு படத்தையும் முடித்து விட்டார்கள் என்று வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அப்போது அடிபட்ட பொன்னம்பலம் ஒரு வருடம் சிகிச்சையில் இருந்தாராம். அந்த நேரத்தில் கஷ்டத்தில் இருந்த பொன்னம்பலம் தனது வீடு வரைக்கும் அடமானம் வைத்து விட்டாராம். மிகவும் தாமதமாகத்தான் இந்த விஷயம் ரஜினிக்கு தெரிந்திருக்கிறது. அந்த நேரத்தில் பொன்னம்பலம் சரியாகி வந்திருக்கிறார். உடனே அவரை கே.எஸ் ரவிக்குமாரிடம் அழைத்து சென்று அவருக்கு வாய்ப்பு கொடுத்து, 5 லட்சம் ரூபாய் சம்பளமும் வாங்கிக் கொடுத்தாராம். இது குறித்து நெகிழ்ச்சியோடு பொன்னம்பலம் பகிர்ந்திருக்கிறார்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications