என் பணத்தை சுருட்டி ஏமாத்திட்டாங்க.. பொண்ணுக்கு நான் செஞ்ச தப்பு.. நடிகர் ராஜ்கிரண் எமோஷனல்
சென்னை: நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய மனைவி மற்றும் மகளோடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தான் ஒரு கோடி சம்பளம் வாங்கும்போது தன்னோடு இருந்தவர்கள் சிலர் தன்னை ஏமாற்றி பணத்தை சுருட்டி கொண்டுட்டு போயிட்டாங்க என்று அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
அதோடு தன்னுடைய மகளை தான் வெளி உலகம் காட்டாமல் வளர்த்ததால்தான் அவள் தப்பான முடிவை எடுத்து விட்டாள் என்று தன்னுடைய மகள் சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்தது குறித்து மறைமுகமாக பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இயக்குனராக பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்த ராஜ்கிரண் தான் இயக்கிய திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இப்ப வரைக்கும் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமை ராஜ்கிரணுக்கு இருக்கிறது. இப்போது அதிகமான திரைப்படங்களில் ராஜ்கிரண் நடிக்கவில்லை என்றாலும் தான் நடிக்கும் ஒரு சில திரைப்படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த வருடத்தில் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்த போது ராஜ்கிரண் குறித்தும் அவருடைய மனைவி குறித்தும் பேசியது இணையத்தில் அதிகமாக பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு பிறகு ஒரு சில மாதங்களுக்குள் பிரியா முனீஸ் ராஜாவை பிரிந்து வந்து விட்ட நிலையில் தன்னுடைய தந்தையிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதோடு தான் கஷ்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த போது தன்னுடைய தந்தை நான் அவரை அவமானப்படுத்தியதையும் மறந்து தனக்கான உதவிகளை செய்து தன்னை பார்த்துக் கொள்கிறார் என்று அந்த நேரத்தில் பிரியா பேசியிருந்தார்.
இப்படியான நிலையில் இப்போது நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய மனைவி கதீஜா மற்றும் மகள் பிரியா உடன் தனியார் youtube சேனல் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பேசிய ராஜ்கிரண் நான் ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றிருந்தாலும் அந்த நேரத்தில் நான் அவ்வளவு சம்பளம் வாங்கும் போது என்னோடு கூட இருந்தவர்கள் சிலர் என்னுடைய பணத்தை சுருட்டி கொண்டு ஓடிவிட்டார்கள்.
அந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் தான் கதீஜா என்னிடம் வந்து சேர்ந்தார். அவரிடம் நான் சொன்னேன் எனக்கு கையில் பணம் கிடையாது, நிறைய கடன் இருக்கிறது என்று ஆனால் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை கிடையாது என்று கதிஜா சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு நான் எவ்வளவு கஷ்டங்கள் பட்டாலும் அந்த நேரத்தில் எனக்கு துணையாக இருந்தவர் கதிஜா தான். அதுபோல என்னுடைய மகளுக்கு நான் வெளி உலகத்தை காட்டாமல் வளர்த்து விட்டேன். வீட்டுக்குள்ளேயே வச்சி வளர்த்துட்டேன். அதனால் தான் உலகம் தெரியல. அறியாமையால் தான் இந்த தவறு நடந்துட்டு. இப்போ என் பொண்ணு பாடம் படிச்சிட்டு திரும்பி வந்துட்டு... அவ்வளவு தான்.. என்று கண்ணீர் மல்க அந்த நிகழ்ச்சியில் ராஜ்கிரண் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications