நடிகர் ராஜ்கிரண் சொன்னது நடந்தது! முனீஸ் ராஜாவின் சுயரூபம் இதுதானா? லீக்கான ஆடியோ
சென்னை: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு முனீஸ் ராஜா தன்னை பணம் நகை கேட்டு சித்திரவதை செய்கிறார், அதோடு பல பெண்களோடு ஏற்கனவே அவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது என்று பல குற்றச்சாட்டுகளை சொல்லி பிரியா அவரை பிரிந்து இருக்கிறார். இந்த நிலையில் முனீஸ் ராஜா பேசியதாக சில ஆடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குனராகவும் நடிகராகவும் இப்ப வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா கடந்த 2019 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவோடு facebook மூலமாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. முதலில் நட்பாக தொடங்கிய இவர்களுடைய பழக்கம் பிறகு காதலாக தொடங்கி திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவு எடுத்து இருக்கின்றனர்.

அந்த நேரத்தில் முனீஸ் ராஜாவின் காதல் பற்றி பிரியா ராஜ்கிரண் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் சொல்லும் போது ராஜ்கிரணும் அவருடைய மனைவியும் இந்த திருமணம் வேண்டாம், நாங்கள் விசாரித்து பார்த்த வரைக்கும் முனீஸ் ராஜா பற்றி யாரும் நல்ல விதமாக சொல்லவில்லை என்று பிரியாவை தடுத்திருக்கின்றனர். ஆனாலும் பிரியா வீட்டின் எதிர்ப்பையும் மீறி முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டதாக திடீர் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடைபெற்றது என்ற வீடியோ வெளியான நேரத்தில் பெரிய அளவில் இந்த செய்தி பேசப்பட்டது. அப்போது ராஜ்கிரண் பிரியா என்னுடைய சொந்த மகள் கிடையாது வளர்ப்பு மகள் தான். ஆனால் என்னுடைய மகள் போல வளர்த்தேன். அவளை சீரியல் நடிகர் முனீஸ் ராஜா காதலித்து ஏமாற்றி இருக்கிறார். ஆனால் அவர் பிரியாவை காதலித்து திருமணம் செய்யவில்லை. என்னுடைய சொத்துக்கள் மற்றும் எனக்கு இருக்கும் பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தான் திருமணம் செய்து இருக்கிறார்.
அதனால் எனக்கும் இனி பிரியாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னுடைய பெயரை முனீஸ் ராஜா எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதற்குப் பிறகு பிரியா மற்றும் முனீஸ் ராஜா இருவரும் பல பேட்டிகளில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திருமணமும் நடத்தி வைக்கப்பட்டது.
ஆனால் பிரியாவிற்கு திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குள் முனீஸ் ராஜா தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துகிறார், அவருடைய அம்மா, தங்கை எல்லோரும் என்னை அடிக்கிறார்கள் நகை பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் அதனால் நான் முனீஸ் ராஜாவே பிரிந்து விட்டேன், அவருக்கும் எனக்கும் முறைப்படி திருமணம் ரிஜிஸ்டர் செய்யவில்லை. அவருக்கு ஏற்கனவே பல பெண்களோடு தொடர்பு இருக்கிறது என்று கண்ணீரோடு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
தன்னுடைய அப்பா அம்மா பற்றி தான் புரிந்து கொண்டதாகவும் அவர்கள் என்னை வெளிஉலகம் தெரியாமல் வளர்த்து விட்டதால் நான் முனீஸ் ராஜாவின் பேச்சை நம்பி ஏமாந்து விட்டேன் என்று அதில் பிரியா பேசியிருந்த நிலையில் ராஜ்கிரணும் தன்னுடைய மகள் வெளி உலகம் தெரியாமல் ஒரு இடத்தில் மாட்டி பிறகு இப்போது மீண்டு வந்து விட்டாள். அவளை நான் மீண்டும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் முனீஸ் ராஜா பேசியதாக சில ஆடியோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு ஆடியோவில் முனீஸ் ராஜாவும் ஒரு பெண்ணும் பேசி கொள்வது போல இருக்கிறது. அதில் "நீ யார வேணா கல்யாணம் பண்ணிக்க, ஆனால் நான் தான் உனக்கு எல்லாம்..." என்று பேசுவது போலவும் இருக்கிறது. அதுபோல இன்னொரு ஆடியோவில் ஒரு பெண்ணிடம் முனீஸ் ராஜா "நீ என்ன கம்யூனிட்டி சொல்லு, நாம ரெண்டு பேரும் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். அதனால இதுல மறைக்காமல் உண்மையை சொல்லு. நான் ஏற்கனவே ஒரு என்கேஜ்மென்ட் பண்ணி மன உளைச்சலில் இருக்கிறேன்" என்று அந்தப் பெண் பெண்ணிடம் மிரட்டுவது போலவும் இருக்கிறது.
அதை தொடர்ந்து இன்னொரு ஆடியோவில் ஒரு பெண்ணிடம் முனீஸ் ராஜா "நான் உன்னிடம் எவ்வளவு பாசம் வச்சிருக்கேன்னு எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா? நீ என்கிட்ட ஐ லவ் யூ ன்னு சொல்லு, கட்டிக்கிறேன்னு சொல்லு... நான் உனக்கு லெட்டர் கொடுக்கணும்னு அவசியம் இல்ல" என்று முனீஸ் ராஜா பேசுவது போன்றும் அந்த ஆடியோவில் இருக்கிறது. இது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் இது பற்றி முனீஸ் ராஜா தரப்பில் எந்த விளக்கமும் இதுவரைக்கும் கொடுக்கவில்லை.
அதுபோல ராஜ்கிரணின் மகள் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி முனீஸ் ராஜா கடன் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருடைய அண்ணன் சண்முகராஜாவும் முனீஸ் ராஜாவின் சகோதரி ரீட்டா பிரபாவும் இருப்பதாக கூறப்படுகிறது. முனீஸ் ராஜாவின் சகோதரி ரீட்டா பிரபா கோவையில் ஏட்டாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு ராஜ்கிரனின் மகள் திருமணம் ரிஜிஸ்டர் செய்யப்படவில்லை என்பதால் இது சட்டப்படி செல்லாத திருமணம் இந்த திருமணத்தில் விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் நான்கு கோடி வேண்டும் என்று கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்திலேயே ராஜ்கிரண் சொன்னது போல தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications