யார் இந்த ரீட்டா பிரபா? முனீஸ் ராஜா செய்த தில்லு முல்லு..லீக்கான ஆடியோ.. கொந்தளித்த ராஜ்கிரண் மனைவி
சென்னை: கடந்த வருடத்தில் காதலித்து திருமணம் செய்த ராஜ்கிரண் மகளுக்கும் மற்றும் அவருடைய கணவருக்கும் இருக்கும் பிரச்சனை தான் சமீப காலமாக கொழுந்து விட்டு எரிகிறது. அதோடு நான் தவறாக முடிவெடுத்து விட்டேன் என்று ராஜ்கிரணிடம் மன்னிப்பு கேட்டு பிரியா ஒரு வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது.
ஆனால் பிரியா மற்றும் முனீஸ் ராஜாவிற்கு இடையே என்ன பிரச்சனை என்பது ஆரம்பத்தில் தெரியாமல் இருந்தது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக பிரியா இப்போது சில குற்றச்சாட்டுகளை முனீஸ் ராஜா மீது வைத்து வருகிறார். அதில் முனீஸ் ராஜா என்னிடம் பணம் வேண்டும் என்று கேட்டு கொடுமைப்படுத்தினார். அதுபோல அவருக்கு வேறு சில பெண்களோடு தொடர்பு இருக்கிறது. அதை நான் கண்டுபிடித்து இருக்கிறேன்.

அதுபோல முனீஸ் ராஜா என்னை திருமணம் செய்வதற்கு முன்பே அவருக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற்று இருக்கிறது என்றெல்லாம் பிரியா பேசியிருக்கிறார். இது குறித்து முனீஸ் ராஜா ஒரே ஒரு வீடியோ மட்டும் வெளியிட்டு இருக்கிறார். அதில் நானும் என்னுடைய மனைவி பிரியாவும் பிரிந்தோமா அல்லது பிரிக்கப்பட்டோமா என்பது பற்றி விரைவில் நான் எல்லோருக்கும் சொல்லுவேன் என்று கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் இப்போது பிரியா மற்றும் ராஜ்கிரண் மனைவி கதீஜா இருவரும் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த ஆடியோவில் ராஜ்கிரண் அவருக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் கம்பெனியை அவருடைய வளர்ப்பு மகள் பிரியா பேரில் தான் நடத்தி வந்திருக்கிறார். அதனால் அங்கு நடைபெற்ற பண வர்த்தனைகள் எல்லாமே இன்று வரை பிரியா பேரில் தான் நடந்து வருகிறது.
இதனால் ஒரு செக்கில் கையெழுத்து போடுமாறு பிரியாவிடம் அவருடைய அம்மா கதிஜா கேட்டிருக்கிறார். அதற்கு முனீஸ் ராஜா எவ்வளவு தொகை எந்த பேங்க் என்றெல்லாம் துருவி துருவி கேட்டிருக்கிறார். அதுபோல முனீஸ் ராஜாவை பிரியா திருமணம் செய்ததும் முதலில் கோபப்பட்ட ராஜ்கிரணின் மனைவி கதிஜா பிறகு ஒரு வாரத்தில் இவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொண்டதாகவும் ஆனால் முனீஸ் ராஜா தன்னுடைய சொந்த வீடு எங்க இருக்கிறது என்ற விவரத்தையே சொல்லாமல் சில மாதங்களாக கதீஜாவை ஏமாற்றி வந்ததாகவும் கதீஜா தன்னுடைய மகள் பிரியாவிடம் கோபப்பட்டு இருக்கிறார்.
நான் ஏதாவது உன்னிடம் பேச வேண்டும் என்றால் கூட நீ எந்த இடத்தில் இருக்கிறாய் என்று எனக்கு தெரியவில்லை. உனக்கு என்று ஒரு சொந்த வீடு இல்லையா? எப்போதும் அக்கா வீட்டில் இருக்கிறேன். அத்தை வீட்டில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சரி அந்த அட்ரஸையாவது சொல்லுங்க என்று சொன்னால் அட்ரஸ் கூட எங்களிடம் சொல்லாமல் மறைப்பதற்கு காரணம் என்ன? என்று கதீஜா கோபப்பட்டு இருக்கிறார்.
அதோடு ப்ரியாவிடம் கதிஜா செக்கில் கையெழுத்து போட சொல்லி கேட்டபோது அதற்கு முனீஸ் ராஜா செக் விவரங்களை கேட்டதால் கதீஜா அந்த ஆடியோவில் கோபப்பட்டு பிரியாவிடம் பேசி இருக்கிறார். இந்த கம்பெனி தொடங்குவதற்கு நீ ஏதாவது பணம் முதலீடு செய்தாயா? இல்லை நான் எதாவது செய்தேனா? இது முழுக்க முழுக்க ராஜ்கிரண் அப்பாவுடைய சொத்து தானே? அப்போ நீ கையெழுத்து போடறதால் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
இவ்வளவு நாளாக உன்னை நாங்க தானே பார்த்துக்கிட்டோம். அப்போ ஏதாவது பிரச்சனை வந்துச்சா என்று அந்த ஆடியோவில் தன்னுடைய மகளிடம் கேட்க அதற்கு பிரியா இல்ல நாளைக்கு இந்த செக்கால எதுவும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்னுடைய கணவர் அப்படி கேட்டு இருக்கிறார் என்று விளக்கம் கொடுக்க, அதற்கு கதீஜா, ஏம்மா பணத்தை போட்டதே நாங்க தானம்மா, அதை எடுக்க உன் கையெழுத்து வேணும்.
இதுல அவர் யார் குறுக்க என்று கேட்கிறார். அதோடு முனீஸ் ராஜா மற்றும் பிரியா இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்ததே முனீஸ் ராஜாவின் அக்கா ரீட்டா பிரபாவாம். இவர் கோயம்புத்தூரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக இருக்கிறாராம். ஆனால் போலீஸ் ஏட்டாக இருந்தாலும் முனீஸ் ராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருக்கும் நிலையில் அவருக்கு விவாகரத்து வாங்காமல் ப்ரீயாவை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பிரியா மற்றும் கதிஜா இருவரும் பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில் அப்போது சொத்துக்காக தான் முனீஸ் ராஜா பிரியாவை திருமணம் செய்து கொண்டாரா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுபோல அந்த ஆடியோ ப்ரியா முனீஸ் ராஜாவோடு சேர்ந்து வாழ்ந்து வரும் போது அவரும் அவருடைய அம்மாவும் பேசியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட்












Click it and Unblock the Notifications